Published:Updated:

உண்மை நண்பன் !

உண்மை நண்பன் !

உண்மை நண்பன் !

உண்மை நண்பன் !

Published:Updated:

ஒரு கொக்கு, வாய்க்கால் ஓரமாக தளர்ந்த நடையுடன் வந்து கொண்டிருந்தது. வாய்க்கால் நீரில் நீந்திக் கொண்டிருந்த ஒரு நண்டு, கொக்கைக் கண்டதும் பயந்தது. கொக்கோ அமைதியுடன் பார்த்தது. இதைக் கண்ட நண்டுக்கு ஆச்சர்யம்.

''கொக்கே! என்னைப் பார்த்தும் இரையாக்கிக் கொள்ளாமல் இருக்கிறாயே ஏன்?'' எனக் கேட்டது நண்டு.

''நான் சோகத்தில் இருக்கிறேன்'' என்றது கொக்கு.

உண்மை நண்பன் !
##~##

''சோகமா?'' என்று வியந்தது நண்டு.

''ஆம்! அதனை யாரிடமாவது தெரியப் படுத்தினால் மனது அமைதி அடையும். எனவே, உன்னிடம் சொல்கிறேன்!'' என்றது கொக்கு.

''அப்படி என்ன சோகம்?'' என்றது நண்டு.

''நண்டே! நான் அதோ அந்தப் புளிய மரத்தில் வசித்து வருகிறேன். ஒரு முறை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் இரை தேடிச் செல்லாமல் கூட்டின் உள்ளேயே இருந்தேன். என் நண்பர்கள், எனக்கு சோம்பேறி என்ற பட்டத்தைக் கட்டிவிட்டார்கள். அன்று முதல் அடிக்கடி என்னை சோம்பேறி என்று கேலி செய்கிறார்கள். அது என் மனதைப்  புண்படுத்துகிறது. இனி நண்பர்களின் முகத்தில் முழிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறேன். நான் எங்கே செல்வது என்று தெரியவில்லை. மனக் குழப்பத்தில் இருக்கிறேன்'' என்றது கொக்கு.

''கொக்கே! உன் சோகம் அர்த்தமற்றது. இந்த அர்த்தமற்ற சோகத்தினால் உனக்கு கவலைதான் உண்டாகும்'' என்றது நண்டு.

''ஏன் அர்த்தமற்ற சோகம் என்கிறாய்?'' எனக் கேட்டது கொக்கு.

''நீ யாரையும் சார்ந்து வாழவில்லை. உனக்குத் தேவையான இரையை நீயே தேடி உண்கின்றாய். உன் கஷ்ட நஷ்டங்களை நீயே சந்திக்கிறாய். அப்படி இருக்கையில் உன் நண்பர்களின் பேச்சை  ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறாய்? உண்மையான நண்பர்கள் நம்மை எப்போதும் இழிவு செய்ய மாட்டார்கள். அன்பில்லாத நபர்களே அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவார்கள். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. நீ மனதால் உற்சாகமாக இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆதரவற்ற நண்பர்களின் அர்த்தமற்ற பேச்சுக்களை மறந்து விடு!'' என்றது நண்டு.

தெளிவு பெற்ற கொக்கு, ''நண்டே... நீயே உண்மையான நண்பன். இனி நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன்'' என்று சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்து சென்றது. அன்று முதல் கொக்கும் நண்டும் நண்பர்களாக இருந்தனர்.

உண்மை நண்பன் !