Published:Updated:

யார் முட்டாள் ?

யார் முட்டாள் ?

யார் முட்டாள் ?

யார் முட்டாள் ?

Published:Updated:
யார் முட்டாள் ?
##~##

வியாபாரி ஒருவர் கடைவீதி வழியாகச் சென்றுகொண்டு இருந்தார். ஒரு பழைய கடையின் கண்ணாடிப் பெட்டியில் நிறைய வைரக்கற்கள் இருந்தன. அதில் இருந்த  வைரக்கல்  ஒன்று வியாபாரியின் கவனத்தை ஈர்த்தது.

''இந்த வைரக்கல் என்ன விலை?'' என்று கடைக்காரரிடம் கேட்டார் வியாபாரி.

''இங்கு இருப்பவை எல்லாம் போலி வைரங்கள். இந்தக் கல்லும் போலிதான். இதன் விலை பத்து ரூபாய்'' என்றார் கடைக்காரர்.

'என் கண்கள் என்னை ஏமாற்றாது. இதன் உண்மையான மதிப்பை இவன் அறியவில்லை இது விலை உயர்ந்த வைரம்தான். எப்படி இந்தக் கடைக்கு வந்தது?’ என நினைத்தார்.

''ஐந்து ரூபாய்க்குத் தருகிறாயா?'' என்று கேட்டார் வியாபாரி.

''பத்து ரூபாய்க்குக் குறைந்து தரமாட்டேன்'' என்றார் கடைக்காரர்.

'சொன்ன விலைக்கே வாங்கினால் இவன் ஐயப்படுவான். திரும்பும்போது விலை குறைத்துக் கேட்போம்’ என்று நினைத்த வியாபாரி, அங்கிருந்து சென்றுவிட்டார்.

மறுநாள்... அவர் அந்த வழியாக வந்தார். கடையில் அந்த வைரக்கல் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டார். ''எங்கே அந்த வைரக்கல்?'' என்று கேட்டார்.

''நீங்கள் சென்ற பிறகு ஒருவர் வந்தார். பத்து ரூபாய் கொடுத்து அந்தப் போலி வைரத்தை வாங்கிச் சென்றார்'' என்றார் கடைக்காரர்.

வியாபாரி ''முட்டாளே! அது உண்மையான வைரம். ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலைக்குப் போகும். அதை பத்து ரூபாய்க்கு விற்ற உன்னைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை'' என்றார்.

அதற்கு கடைக்காரர் அமைதியாக, ''ஐயா அந்த வைரக் கல்லின் உண்மையான மதிப்பு எனக்குத் தெரியாது. அதனால் பத்து ரூபாய்க்கு விற்றேன். அதன் மதிப்புத் தெரிந்தும் பத்து ரூபாய்க்கு வாங்காமல் பேரம் பேசிய நீங்கள்தான் பெரிய முட்டாள்'' என்றார்.

வியாபாரி தலை குனிந்து சென்றார்.

-பி.விவின்-(X),
புனித ஆரோக்கிய அன்னை
மேல்நிலைப் பள்ளி, கீரனூர்.