உணர்ந்தறிதல்

வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க...

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து...

கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து...

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க...

பெருமுச்சுக் குவியலில்
உயிர்மூச்சுக் கலகலத்து...

இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு...

முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி...

பூமிப் பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு...

கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,

உடலெல்லாம் சிலிர்ப்போடி
உள்ளம் வியர்த்து நின்றேன்

வீட்டில்

கர்ப்பிணியாய்

மனைவி!

- ராஜ திருமகன்

காணாமல் போன நிலா!

நிலவை
இடியாப்பமென யாரோ
சொல்லிவைத்திருந்தார்கள்

தெருவில் இடியாப்பம் விற்கும்
ஆச்சியின் குரல் கேட்ட திசையில்
தட்டை நீட்டிவிடுகிறாள் யாத்வி குட்டி
ரூபாய்க்கு இரண்டு
நிலவைத் தரச் சொல்லி

அப்பா படித்துவிட்டுப் போன
புத்தகத்தைப் புரட்டி
'கல்பனா சாவ்லா’வைக் காண்பிக்கிறாள்

'பறந்து போன இந்த அக்காதான்
பசிக்கும்போது தெனமும்
இடியாப்பத்தைப் பிச்சுப் பிச்சுத் தின்றாளா?'வென
தாத்தாவிடம் கேட்டுவைக்கிறாள்

தேடிய பதிலேதும் கிடைக்காமல்
சின்னதாய்ப் பொய் சொல்லி
படுக்கைக்கு அழைக்கிறோம்
'யாத்வி... சீக்கிரம் படுடா
பறக்கும் தட்டு வந்துடும்''
'அப்ப அதுல இடியாப்பம் இறங்கி வருமா?'வென்கிறாள்

மேகம் மூடி மறைத்துவிட்ட
நிலவைக் காணாது
இடியாப்பத்தை எவரோ
திருடிவிட்டதாய்ச் சொல்லி
தேம்பித் தேம்பி அழுகையைத்
துவக்குகிறாள்

பெரும் இடி இரைச்சலோடு
அழத் தொடங்கியது பெருமழை

தொலைந்துபோன நிலவை
காலையில் தேடித் தருவதாய்ச் சொன்ன
அம்மாவின் பதில் கேட்டு
விரல் சூப்பிக்கொள்கிறாள்.

- கொ.மா.கோ.இளங்கோ

சாமியாடி கருப்பையா

தனக்காய் நேர்ந்துவிட்ட
ஆடுகளை அறுக்க
கருப்பையாவிடம்
இறங்கியுள்ளார் கருப்பசாமி.
அதற்கீடாய்
ஆடறுக்கும் இடைவெளிகளில்
கருப்பையாவை
ஒரு பீடி வலிக்க
அனுமதிக்கிறார் கருப்பசாமி.

- கு.விநாயகமூர்த்தி

கால அதிர்வு

பள்ளிக்குச் செல்லும்
அக்காவைப் பார்த்துவிட்டு,
'இன்னிக்கே என்னை
ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போ’
என அடம்பிடித்தது குழந்தை
'நாளைக்குப் போகலாம்’
சமாதானம் சொன்னாள் அம்மா.
'அப்படீன்னா...
என்னை இன்னிக்கே
நாளைக்குக் கூட்டிட்டுப் போ!’
என்றது குழந்தை
திடுக்கிட்டது காலம்.

- ப.உமாமகேஸ்வரி

உணர்ந்தறிதல்

வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க...

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து...

கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து...

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க...

பெருமுச்சுக் குவியலில்
உயிர்மூச்சுக் கலகலத்து...

இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு...

முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி...

பூமிப் பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு...

கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,

உடலெல்லாம் சிலிர்ப்போடி
உள்ளம் வியர்த்து நின்றேன்

வீட்டில்

கர்ப்பிணியாய்

மனைவி!

- ராஜ திருமகன்

காணாமல் போன நிலா!

நிலவை
இடியாப்பமென யாரோ
சொல்லிவைத்திருந்தார்கள்

தெருவில் இடியாப்பம் விற்கும்
ஆச்சியின் குரல் கேட்ட திசையில்
தட்டை நீட்டிவிடுகிறாள் யாத்வி குட்டி
ரூபாய்க்கு இரண்டு
நிலவைத் தரச் சொல்லி

அப்பா படித்துவிட்டுப் போன
புத்தகத்தைப் புரட்டி
'கல்பனா சாவ்லா’வைக் காண்பிக்கிறாள்

'பறந்து போன இந்த அக்காதான்
பசிக்கும்போது தெனமும்
இடியாப்பத்தைப் பிச்சுப் பிச்சுத் தின்றாளா?'வென
தாத்தாவிடம் கேட்டுவைக்கிறாள்

தேடிய பதிலேதும் கிடைக்காமல்
சின்னதாய்ப் பொய் சொல்லி
படுக்கைக்கு அழைக்கிறோம்
'யாத்வி... சீக்கிரம் படுடா
பறக்கும் தட்டு வந்துடும்''
'அப்ப அதுல இடியாப்பம் இறங்கி வருமா?'வென்கிறாள்

மேகம் மூடி மறைத்துவிட்ட
நிலவைக் காணாது
இடியாப்பத்தை எவரோ
திருடிவிட்டதாய்ச் சொல்லி
தேம்பித் தேம்பி அழுகையைத்
துவக்குகிறாள்

பெரும் இடி இரைச்சலோடு
அழத் தொடங்கியது பெருமழை

தொலைந்துபோன நிலவை
காலையில் தேடித் தருவதாய்ச் சொன்ன
அம்மாவின் பதில் கேட்டு
விரல் சூப்பிக்கொள்கிறாள்.

- கொ.மா.கோ.இளங்கோ

சாமியாடி கருப்பையா

தனக்காய் நேர்ந்துவிட்ட
ஆடுகளை அறுக்க
கருப்பையாவிடம்
இறங்கியுள்ளார் கருப்பசாமி.
அதற்கீடாய்
ஆடறுக்கும் இடைவெளிகளில்
கருப்பையாவை
ஒரு பீடி வலிக்க
அனுமதிக்கிறார் கருப்பசாமி.

- கு.விநாயகமூர்த்தி

கால அதிர்வு

பள்ளிக்குச் செல்லும்
அக்காவைப் பார்த்துவிட்டு,
'இன்னிக்கே என்னை
ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போ’
என அடம்பிடித்தது குழந்தை
'நாளைக்குப் போகலாம்’
சமாதானம் சொன்னாள் அம்மா.
'அப்படீன்னா...
என்னை இன்னிக்கே
நாளைக்குக் கூட்டிட்டுப் போ!’
என்றது குழந்தை
திடுக்கிட்டது காலம்.

- ப.உமாமகேஸ்வரி