அந்தக் கிராமத்தில், ஒரு பெரிய மாமரம் இருந்தது. அதில் ஒரு சிறுமி தினமும் ஏறி, இறங்கி, பழங்களைப் பறித்து உண்டு வந்தாள். மரத்தோடு பேசுவாள், விளையாடுவாள். கிளையில் படுத்து உறங்குவாள்.

அவளுக்கு அப்பா, அம்மா இல்லை. தூரத்து உறவினர் வீட்டில்தான் இருந்தாள். அவர்கள், அந்தச் சிறுமிக்கு கடனே என்றுதான் உணவு கொடுப்பார்கள். அதனால், அந்தச் சிறுமி எந்த நேரமும் அந்த மரத்தின் அருகில்தான் இருப்பாள். அந்த மாமரமும் அவளுடன் ஆனந்தமாக விளையாடியது.

ஒரு நாள் அந்தச் சிறுமி, மாமரத்தின் முன் வந்து சோகமாக நின்றாள்.

‘‘என்ன ஆச்சு?” என்று கேட்டது மாமரம்.

‘‘நான் வளர்ந்துவிட்டேன். எத்தனை நாட்களுக்குத்தான் இந்தப் பழைய ஆடைகளையே அணிந்திருப்பது? என் வயதுடைய சிறுமிகள் எல்லாம் புதுப் புது ஆடைகளில் வலம் வருகிறார்கள். எனக்கும் புதிய ஆடைகள் வாங்க வேண்டும்’’ என்றாள் சிறுமி.

“இவ்வளவுதானா விஷயம்? என்னிடம் இருக்கும் கனிகளைப் பறித்துச்சென்று சந்தையில் விற்றால், நிறைய பணம் வரும். அதில், உனக்குப் பிடித்த ஆடைகளை வாங்கிக்கொள்” என்றது மாமரம்.

அவள் மிகவும் மகிழ்ச்சியுடன் எல்லா கனிகளையும் பறித்துச்சென்றாள். ஒரு கனியைக்கூட விடவில்லை. மரத்துக்கு வருத்தமாக இருந்தாலும், தன் தோழிக்காகப் பொறுத்துக்கொண்டது.

மாங்கனிகளுடன் சென்ற அந்தச் சிறுமி, பல மாதங்களாக வரவேயில்லை. நாட்கள், வாரங்கள் ஆனது. வாரங்கள், மாதங்களாகின. மாதங்கள் வருடங்களாகக் கடந்தன. தோழியை எண்ணி மாமரம் சோகமாக இருந்தது.

ஒரு நாள், ஓர் இளம்பெண் அங்கே வந்தாள். அவளைக் கண்டதும் முதலில் குழம்பிய மாமரம், அடையாளம் தெரிந்ததும், ‘தன் மீது ஏறி விளையாடிய சிறுமியா இவள்?’ என வியந்து நின்றது.

‘‘வா... வா... உன்னைப் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன. என்னோடு விளையாடு!” என்றது மாமரம்.

“எனக்கு விளையாடுவதற்கு நேரம் இல்லை. எனக்கு திருமணம் ஆகிவிட்டது. குழந்தையும் பிறந்து இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஒரு தொட்டில் வேண்டும். நீ உதவி செய்வாயா?” எனக் கேட்டாள்.

‘‘அவ்வளவுதானே! என் கிளைகளை வெட்டி, அதில் தொட்டில் செய்துகொள். உன் குழந்தையை ஒரு நாள் அழைத்து வா. பார்க்க ஆசையாக இருக்கிறது” என்றது மாமரம்.

அந்தப் பெண் தலையாட்டிவிட்டு, மாமரத்தின் கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றாள். மாமரத்துக்கு மிகவும் வலித்தது. எனினும், தனது தோழியின் மகிழ்ச்சிக்காக பொறுத்துக்கொண்டது. தோழியின் குழந்தையை எதிர்பார்த்து, வழி மேல் விழிவைத்துக் காத்திருந்தது.

ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் அந்தப் பெண் வரவே இல்லை. தன்னந்தனியாக வருத்தமாக இருந்தது மாமரம்.

மழைக்காலத்தில் ஒரு நாள், ஒரு நடுத்தர வயது பெண்மணி அங்கே வந்தாள். இந்த முறை பார்த்ததுமே அது யார் என்பது மரத்துக்கு தெரிந்துவிட்டது.

“வா என் தோழியே! இப்போதாவது என் நினைவு வந்ததே. வா, விளையாடுவோம்!” என்றது மாமரம்.

“எனக்கு விளையாடும் மனநிலை இல்லை. என் மகன், கடல் கடந்துசென்று வியாபாரம் செய்ய நினைக்கிறான். அவனுக்கு ஒரு படகு தேவைப்படுகிறது” என்றாள் அந்தப் பெண்மணி.

‘‘ஓகோ... உன் குழந்தை அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டதா? மிகவும் சந்தோஷம். என் வேர்களை விட்டுவிட்டு உடலை வெட்டி, அதில் படகு செய்யலாம். நான் மீண்டும் துளிர்த்து வளர்வேன். அடிக்கடி என்னை வந்து பார்த்தால் சந்தோஷப்படுவேன்” என்றது மாமரம்.

அந்தப் பெண் தலையாட்டிவிட்டு, மாமரத்தின் உடலை வெட்டி எடுத்துச்சென்றாள்.

மொட்டையாக இருந்த மாமரம், மெள்ளத் துளிர்த்து வளர்ந்தது. சிறிய கிளைகள், பசும் இலைகளோடு அது மாறுவதற்குப் பல ஆண்டுகள் ஆனது.

அப்போது, ஒரு மூதாட்டி அங்கே வந்தார். சுருக்கம் விழுந்த அவர் முகத்தைப் பார்த்த மாமரம், அது தனது தோழிதான் என்பதைப் புரிந்துகொண்டது. முன்பு போன்ற உற்சாகம் மாமரத்திடம் இல்லை. எனினும், தன் தோழிக்கு உதவ வேண்டும் என்று நினைத்தது.

‘‘என்னிடம் உனக்குத் தர எதுவும் இல்லை. இனிமேல்தான் பூக்கள் பூக்கும். பிறகு, அவை கனிகள் ஆகும். என் கிளைகளும் மிகவும் லேசாகத்தான் இருக்கும். மன்னித்துவிடு” என்று சோகமாகச் சொன்னது மாமரம்.

‘‘மாமரமே, உன் உயர்ந்த குணத்தால் என்னை வெட்கப்பட வைத்துவிட்டாய். இப்போது, மாங்காய்களைக் கடித்துத் தின்ன என்னிடம் பற்கள் இல்லை. மரத்தில் ஏறவும் வலிமை இல்லை. எனக்கு இனி எதுவும் வேண்டாம். அமர்ந்து ஓய்வெடுக்க ஓர் இடம் வேண்டும்.

எனது சிறு வயதில் எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது நீதான். அந்த வயதில் நானும் சுயநலம் இல்லாமல், உன்னை நேசித்தேன். ஆனால், நான் வளர வளர பல மனிதர்களுக்கே உரிய சுயநலக் குணத்தோடு உன்னை மறந்தேன். உன்னை பல வகைகளில் பயன்படுத்தினேன். அதற்கு நன்றிகூடச் சொல்லவில்லை. நினைத்துப் பார்க்கவே இப்போது வெட்கமாக இருக்கிறது” என்று வருந்தினார் அந்த மூதாட்டி.

‘‘நடந்ததை நினைத்து வருந்தாதே தோழியே. நீ தினமும் இங்கே வரலாம். என் நிழலில் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்” என்றது மாமரம்.

அந்த மூதாட்டி, மரத்தின் கீழே அமர்ந்தார். மாமரம் மகிழ்ச்சியாகச் சிரித்தது. மூதாட்டியும் நன்றியோடு சிரித்தார்.

இரா.புவனேசன்

எஸ்.பி.ஓ.ஏ.மெட்ரிக் மே.நி.பள்ளி,

நாகமலைப் புதுக்கோட்டை, மதுரை.

ராம்கி