என்.ஸ்ரீதரன்

நெடுங்குடி கிராமத்தில் முனியாண்டி என்ற சலவைக்காரர் இருந்தார். திருவிழா சமயங்களில் மட்டும் சிலர் அவரிடம் துணி கொடுத்து, கஞ்சி-இஸ்திரி போடுவார்கள். அறுவடை சமயம்... முடிந்த அளவு நெல் கொடுப்பார்கள். அவரிடம் ஒரு கழுதை இருந்தது. வருமானம் குறைவு என்பதால் அவரால் கழுதைக்கு சரியாக தீனிபோட முடியாமல் அது மெலிந்துவிட்டது.

அந்தக் கிராமத்தின் எல்லையில் வயதான சாமியார் இருந்தார். முனியாண்டி தினமும் சென்று அவருடைய உடைகளைத் துவைத்துத் தருவார். கூலி பெற்றுக்கொள்ளமாட்டார். சாமியாருக்கு சேவை செய்யும் புண்ணியமே போதும் என்பார். ஆகவே, சாமியாருக்கும் முனியாண்டி மீது தனிப் பிரியம்.

சாமியாருக்கு மரண வேளை நெருங் கியபோது முனியாண்டியை அழைத்து, ''உன் சேவைக்குப் பரிசாக இந்தப் புலித் தோலை எடுத்துக்கொள்'' என்றார். முனியாண்டியும் அவ்வாறே செய்தார். சாமியாரும் இறந்துவிட்டார்.

முனியாண்டி புலித்தோலை வீட்டில் தொங்கவிட்டார். சாமியார் நினைவாக அதை தினமும் வணங்குவார். ஒருநாள் அவருக்கு ஓர் எண்ணம் உதித்தது. அதன்படி தினமும் இருட்டியதும் தன் கழுதையைப் புலித் தோலால் போர்த்தி, வயல் பக்கம் விரட்டி விடுவார். அது மேய்ந்து விட்டுத் திரும்பும்.

'இரவில், வயல்களில் ஒரு புலி தானியங்களைச் சாப்பிடுகிறது.’ என்ற செய்தி பரவியது. ஒன்றிரண்டு தைரிய சாலிகள் மரத்தில் ஏறிப் பார்த்து, இருட்டில் புலி அலைவதை உறுதிப் படுத்தினர். இருட்ட ஆரம்பித்ததும் யாரும் வயல் பக்கம் போவதில்லை.

இந்தப் பிரச்னை பஞ்சாயத்துத் தலைவர் வேலாயுதத்துக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. இருட்டிய பிறகு வரும் இந்தப் புலி, பகலில் எங்கே மறைந்து தூங்குகிறது? மாமிச பட்சிணியான புலி ஏன் வயலில் வந்து மேய்கிறது?’ என்று குழம்பினார்.

ஆடி மாதம் பிறந்தது. கிராமத்தில் திரு விழா. பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் ஒன்று, பலகுரல் மன்னன் பக்கிரிசாமியின் நிகழ்ச்சி. அதற்கு வேலாயுதம்தான் தலைமை. பக்கிரிசாமி பல வகையான பறவைகள், விலங்குகளைப் போல் ஒலி எழுப்பினான்.இதைப் பார்த்த வேலாயுதம் மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது. அவர் பக்கிரிசாமியைத் தனியாக அழைத்து ''எங்க ஊர் வயல்ல ஒரு புலி வந்து மேயுது. புலி ஏன் தானியம் தின்னுது? அது புலிதானா... இல்ல புலி மாதிரி தெரியிற புதுவகை மிருகமான்னு கண்டுபிடிக்கணும்'' என்றார்.

பக்கிரிசாமி, ''நானும் அந்தப் புலி பத்திக் கேள்விப்பட்டேன். அதனாலதான் நிகழ்ச்சியில புலி மாதிரி உறுமலை. அதைக் கேட்டு அந்தப் புலி வந்துடுமோன்னு பயம். சரி, உங்களுக்கு என்ன உதவி வேண்டும் சொல்லுங்க'' என்றான்.

வேலாயுதம் தமது திட்டத்தை விளக்கினார். அதன்படி மறுநாள்... வயல் பகுதியில் ஒரு மரத்தில் பரண் கட்டப்பட்டது. இருட்ட ஆரம்பித்ததும், வேலாயுதமும் பக்கிரிசாமியும் பரணில் உட்கார்ந்துகொண்டனர். நிலவொளி லேசாகப் பரவியிருந்தது. மங்கலான அந்த வெளிச்சத்தில் புலித்தோல் போர்த்திய கழுதை, ஒரு வயலில் நுழைந்து மேய ஆரம்பித்தது. அதைப் பார்த்து வேலாயுதமும் பக்கிரிசாமியும் முதலில் நடுங்கினர். பிறகு சமாளித்துக்கொண்டு... வேலாயுதம் கண்சாடை காட்ட, பக்கிரிசாமியிடம் இருந்து குரல்கள் வெளிப்பட்டன.

மே... மே... மே...

மா... மா.... ம்மா...

ஹை... ஹை... ஹை...

பதிலுக்கு வயலில் இருந்து எந்த ஒலியும் கேட்கவில்லை. புலியின் உறுமலைத் தவிர பல வகையான மிருகக் குரல்களை பக்கிரி சாமி ஒலித்தான். பயனில்லை. புலி உயரத்தில் இருக்கும் எல்லா விலங்குகளின் குரலையும் ஒலித்தாகிவிட்டதா என்று மனதில் பட்டியல் போட்டுப் பார்த்தான். சட்டென்று அவனுக்கு ஏதோ நினைவுக்கு வந்தது. தன் தலையில் செல்லமாகத் தட்டிக்கொண்டு, ''நான் ஒரு மடக் கழுதை!'' என்றான்.

மறு நிமிடமே அவனிடமிருந்து கழுதையைப் போல் பலமாகக் குரல் எழுந்தது... 'டேன்ச்சு...! டேன்ச்சு...!''

அவன் நிறுத்தியதும் வயல் பக்கம் இருந்து பதில் வந்தது ''டேன்ச்சு..! டேன்ச்சு..!''

இதைக் கேட்டு வேலாயுதம் சிரித்துவிட்டார். இருவரும் வயலை அடைந்து, புலித்தோல் போர்த்திய கழுதையைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள்.

கிராமத்தில் முனியாண்டியிடம் மட்டுமே கழுதை இருந்ததால், பஞ்சாயத்தில் நிறுத்தப் பட்டார். அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார். கழுதைக்குத் தீனி போட முடியாமலே இப்படி மோசடி செய்ததாகச் சொன்னார்.

வேலாயுதம் தீர்ப்புக் கூறினார். ''ஒரு கழுதைக்குத் தீனி போதாம இப்படி நடந்து இருக்கிறது நம்ம எல்லாருக்குமே அவமானமான விஷயம். இனி இந்தக் கழுதை நம் கிராமத்தின் பொதுச் சொத்து. இதுக்கு நாமே தீனி போடணும். முனியாண்டிக்கும் அறுவடை சமயம் கூடுதலா நெல்லு தரணும்.'' என்றார்.

இந்த நல்ல தீர்ப்பை மக்கள் கைதட்டி வரவேற்றனர். எல்லோரும் சிரித்தபடி கழுதையை அன்புடன் நோக்கினர். இதைக் கவனித்த கழுதை, ''டேன்ச்சு..! டேன்ச்சு..! டேன்ச்சு..!'' என்று கத்தியது.