Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

காலம் 

சிறுவயதில்

காடா விளக்கு வெளிச்சத்தில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏலமிட்ட ஏலக்காரர் பிறகு

ஊருக்குள் வருவதில்லை

ஊராருடன் சண்டையிட்டு

ஏலமெடுத்த தாத்தாவும்

இப்போது உயிருடனில்லை

ஜமுக்காளம் மட்டும்

இன்னமும்

அவ்வப்போது வேலியில்

காய்ந்துகொண்டிருக்கிறது.

- அருண் காந்தி

 பாதிப்பு

வந்தமர்ந்த பறவையைப் பார்த்தபோது

இலைகள்கூட

அசைந்து கொடுக்கவில்லை

எழுந்து சென்ற பறவையை

உற்றுக் கவனித்தபோது

பெருமரமே ஆட்டம் கண்டுகொண்டிருந்தது.

- அ.கார்த்திகேயன்

பறவைகளை எழுதுதல்

எத்தனையோ முறை

கடந்து சென்ற இந்த மரத்தில்

இத்தனை பறவைகள்

இராத் தங்குவதை

இன்றுதான் அறிந்தேன்.

சொல்வனம்

கருமேகங்களைக் கரைத்து

சாம்பல் நிறம் பூணும்

இவ்வந்திப் பொழுது

அடர்ந்த இலைத் திரைகளின்

உள்ளிருந்து உருவாகும்

ஓர் இசை நிகழ்ச்சியின்

ஒற்றைப் பார்வையாளனாக

என்னை நிறுத்தியிருக்கிறது.

எதற்கும் நீ சற்று

தாமதமாகவே வா.

- எஸ்.பாபு

ரகசியம்

ரகசியங்களோடு

கரையேறத் துடிக்கிறது அலை.

காலைப் பிடித்திழுத்துக்

கரைத்துக்கொள்கிறது

கடல்.

நன்றி

இரை தேடித் திரிந்த இடங்களில்

இசை நிரப்பிச் செல்கின்றன

பறவைகள்.

நிழலுறக்கம்

நிழல் தேடிக் கண்ணயர்ந்தேன்

கண்கள் கூச விழித்துப் பார்த்தேன்

நகர்ந்து படுத்திருந்தது

நிழல்.

துணை

தேங்கி நின்றிருந்தேன்

வா... வா.. என்றது ஆறு.

தயங்கினேன்

உதிர்ந்து விழுந்தது இலை.

அழைத்துச் சென்றது ஆறு.

- இரா.சிவசுப்பிரமணியன்