Published:Updated:

திருச்செந்தூர் டிராவல்ஸ்

கவிதை: லக்ஷ்மி மணிவண்ணன், ஓவியம்: செந்தில்

தேள்கடி பட்டுத் துடித்த 

வாழைக்கன்றுகளை அறுத்துக் கட்டி

தயாராகிக்கொண்டிருக்கிறது

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'அலர்மேல் வள்ளி’ அமர்ந்து

பயணிக்க இருக்கிற டெம்போ

அது ஒரு வில்வண்டியின் பாங்கை

அடையும் வரையில்

அலங்காரத்தை நிறுத்துவதற்கில்லை.

யாத்திரைக்குத் தயாராகும் சொப்பனம் சூழ் வில்வண்டியாய் அது உருமாற வேண்டும்.

அவள் எங்கோ போக விரும்பும் திசையை

அது கனவின் மனதுடன்

நெறிகட்ட வேண்டும்.

போகவே இயலாது என்பதை

அது நினைவுபடுத்தவே கூடாது.

திருச்செந்தூர் டிராவல்ஸ்

ஓலைகள் கட்டி

மணல் மெத்தைகள் தயாரித்து

டெம்போ உட்புறத்தின் அழகு கசிய தோல்ப்பாடை அணிந்து

வில்வண்டியின் காலத்திற்குள் நுழைந்ததை

ஸ்பீக்கர் செட் துள்ளலில் அறிவித்தது.

பல்வேறு காலங்கள் பயணிக்கும்

தேசிய நெடுஞ்சாலையில்

வெற்றிலை எச்சிலாய்ச் சிரித்துப் பயணிக்கிறாள் 'அலர்மேல் வள்ளி’.

அவள் பயணிக்கும்போதுதான்

பல்வேறு காலங்கள் உருகியோடுவதை

சாலைகள் மயங்குகின்றன.

பழுத்துப் பழுத்துக் கனிந்து

வடியும் ஒரு பழம் பாடலாய்...

உள்ளிருக்கும் சிற்பங்களை ஒத்த சிறுவர்கள்

புடைசூழ...

கிரகங்கள் கிறங்க...

டெம்போ

முருகனை நோக்கிச் செல்கிறதா

முருகன் டெம்போவை நோக்கி வருகிறானா

என்பதறியாமல்.