சாந்திகளாய் மாறிய முனியம்மாக்கள்!

டெல்லியில்

சற்று வசதியானவர் வீடுகளுக்கு

வேலைக்குச் செல்கிறார்கள்

சாந்திகளாகவும் ராணிகளாகவும்

பெயர் மாற்றம்கொண்ட முனியம்மாக்கள்.

அலுவலகம் செல்வோரின் குழந்தைகளுக்கு

பகுதிநேரத் தாயாகி உணவூட்டுகையில்

நினைவுக்கு வருகிறார்கள்

கிளம்பும்போது உறங்கிக்கொண்டிருந்த

மூன்றும் நான்கும் படிக்கும்

தனது குழந்தைகள்.

பாத்திரங்கள் துலக்கியும்

துணிகள் துவைத்தும்

வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தபோதும்

அவ்விடம் எதிர்கொள்ள நேரிடுகிறது

மனதில் அழுக்கேறிய பாத்திரங்களை.

கால் வைக்குமளவு

தாராள இடம்கொண்ட வீடுகளில்

வசிக்கும் இவர்கள்

டெல்லியறியா உறவுகளின் கற்பனையில்

உயர்ந்து நிற்கிறார்கள்

செல்வச்சீமாட்டிகளாக.

தங்கள் விசுவாசத்தின் மீது

அவ்வப்போது விழும் கற்களை

சகிப்புடன் அகற்றியவாறு

வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள்

எப்பாடுபட்டேனும்

வருடம் ஒருமுறை உறவுகளுடன் குலவி

சுதந்திரமாய்ச் சுவாசித்து ஆசுவாசம்கொள்ள

சொந்த ஊருக்கு ரயிலில் பயணமாகிறார்கள்

தற்காலிகமாய்

தங்கள் இடத்தில்

வேறொரு சாந்தியையும் ராணியையும்

நியமித்துவிட்டு!

- ஜோதி பெருமாள்

சிறகுகள்

ஏழு கடல்

ஏழு மைல் தாண்டி

மந்திரவாதியின்

உயிரைத் தேடிப் போனவன்

எப்படிப் போனான்

என்று கேட்கவே இல்லை

எந்தக் குழந்தையும்

அவர்கள் வசம் சிறகுகள் இருந்தன!

ஒரு

ஒரே ஒரு ஊரில் இருக்கும்

ஒரே ஒரு ராஜாவுக்கு

இன்னும் வயசாகவுமில்லை;

சாகவுமில்லை!

வாசம்

அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்

குழந்தையின் அருகில்

அமர்ந்துகொண்டு

எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்

இக்கவிதையில் கமழும்

பால் வாசனையை

ரசிக்கிறீர்கள்...

சற்று நேரத்தில்

கிளம்பும் மூத்திர வாடையையும்

சகித்துக்கொள்வீர்கள்தானே!

- இரா.பூபாலன்

மின் குரலின் கட்டளை

'ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்’

என அதே பெண் குரல்தான்

தவறாது

மின் கட்டளை தருகிறது

அடுக்குமாடியின்

மின் ஏற்றத்தில்

நாம் தனியாகப்

பயணிக்க நேரிடும்

ஒவ்வொரு முறையும்.

நீதான்

தவறாக அர்த்தம்செய்து

உடல் மூடிக்கொள்கிறாய்

உன் மாராப்பு சேலையை!

- பிராஸ்பர்

பொய்ச் சோழிகள்

பாதையோரச் சோதிடன்

சோழிகள் குலுக்கி

எத்தனை முறை போட்டாலும்

விழவில்லை தாயம்

ஆதலால்

தன் காலைப் பசியின் தொடர்

மதியத்துக்குமென

தனக்கான சோதிடத்தால்

தளர்ந்தவன் நிமிர்ந்தான்

வாராத தலையோடு

வந்தமர்ந்தாள் ஒரு கிழவி

சோழிப் பொய் சொல்லியும்

சோறு கிடைக்கப்போவதால்

மகிழ்ந்தவன்

கைகளை இணைத்துப்

பொய்களை வேகமாய்க் குலுக்கத் தொடங்கினான்!

- செல்மா காமராசன்

சாந்திகளாய் மாறிய முனியம்மாக்கள்!

டெல்லியில்

சற்று வசதியானவர் வீடுகளுக்கு

வேலைக்குச் செல்கிறார்கள்

சாந்திகளாகவும் ராணிகளாகவும்

பெயர் மாற்றம்கொண்ட முனியம்மாக்கள்.

அலுவலகம் செல்வோரின் குழந்தைகளுக்கு

பகுதிநேரத் தாயாகி உணவூட்டுகையில்

நினைவுக்கு வருகிறார்கள்

கிளம்பும்போது உறங்கிக்கொண்டிருந்த

மூன்றும் நான்கும் படிக்கும்

தனது குழந்தைகள்.

பாத்திரங்கள் துலக்கியும்

துணிகள் துவைத்தும்

வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தபோதும்

அவ்விடம் எதிர்கொள்ள நேரிடுகிறது

மனதில் அழுக்கேறிய பாத்திரங்களை.

கால் வைக்குமளவு

தாராள இடம்கொண்ட வீடுகளில்

வசிக்கும் இவர்கள்

டெல்லியறியா உறவுகளின் கற்பனையில்

உயர்ந்து நிற்கிறார்கள்

செல்வச்சீமாட்டிகளாக.

தங்கள் விசுவாசத்தின் மீது

அவ்வப்போது விழும் கற்களை

சகிப்புடன் அகற்றியவாறு

வாழ்க்கையை நகர்த்தும் இவர்கள்

எப்பாடுபட்டேனும்

வருடம் ஒருமுறை உறவுகளுடன் குலவி

சுதந்திரமாய்ச் சுவாசித்து ஆசுவாசம்கொள்ள

சொந்த ஊருக்கு ரயிலில் பயணமாகிறார்கள்

தற்காலிகமாய்

தங்கள் இடத்தில்

வேறொரு சாந்தியையும் ராணியையும்

நியமித்துவிட்டு!

- ஜோதி பெருமாள்

சிறகுகள்

ஏழு கடல்

ஏழு மைல் தாண்டி

மந்திரவாதியின்

உயிரைத் தேடிப் போனவன்

எப்படிப் போனான்

என்று கேட்கவே இல்லை

எந்தக் குழந்தையும்

அவர்கள் வசம் சிறகுகள் இருந்தன!

ஒரு

ஒரே ஒரு ஊரில் இருக்கும்

ஒரே ஒரு ராஜாவுக்கு

இன்னும் வயசாகவுமில்லை;

சாகவுமில்லை!

வாசம்

அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும்

குழந்தையின் அருகில்

அமர்ந்துகொண்டு

எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்

இக்கவிதையில் கமழும்

பால் வாசனையை

ரசிக்கிறீர்கள்...

சற்று நேரத்தில்

கிளம்பும் மூத்திர வாடையையும்

சகித்துக்கொள்வீர்கள்தானே!

- இரா.பூபாலன்

மின் குரலின் கட்டளை

'ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்’

என அதே பெண் குரல்தான்

தவறாது

மின் கட்டளை தருகிறது

அடுக்குமாடியின்

மின் ஏற்றத்தில்

நாம் தனியாகப்

பயணிக்க நேரிடும்

ஒவ்வொரு முறையும்.

நீதான்

தவறாக அர்த்தம்செய்து

உடல் மூடிக்கொள்கிறாய்

உன் மாராப்பு சேலையை!

- பிராஸ்பர்

பொய்ச் சோழிகள்

பாதையோரச் சோதிடன்

சோழிகள் குலுக்கி

எத்தனை முறை போட்டாலும்

விழவில்லை தாயம்

ஆதலால்

தன் காலைப் பசியின் தொடர்

மதியத்துக்குமென

தனக்கான சோதிடத்தால்

தளர்ந்தவன் நிமிர்ந்தான்

வாராத தலையோடு

வந்தமர்ந்தாள் ஒரு கிழவி

சோழிப் பொய் சொல்லியும்

சோறு கிடைக்கப்போவதால்

மகிழ்ந்தவன்

கைகளை இணைத்துப்

பொய்களை வேகமாய்க் குலுக்கத் தொடங்கினான்!

- செல்மா காமராசன்