சொல்லைத் தொலைத்துவிட்டேன்.
தேடுகிறேன்... இன்னும் தேடுகிறேன்.

பச்சை மண்ணைப்போல
பூமியில் வந்து விழுந்தபோது,
வாரியெடுத்து என் அம்மா
தன் மார்பில் புதைத்தபோது அழும்போது
என்னை ஆக்கிரமித்துக் காத்திருந்த
அந்த ஒரு சொல்லைத்
தேடுகிறேன்.

பருவம் வந்தபோது,
குணமும் மாறிப்போய்,
தான் என்ற எண்ணம்
தலைமுழுக்கக் குடியேறி
வானம் என்பது என் உள்ளங்கை அளவு,
உலகம் என்பது
நான் திரிந்தலையும் சோலை என
வாழ்க்கை என்பதையே
புதிதாக அர்த்தப்படுத்தி,
ஒவ்வொரு கணத்தையும்
சந்தோஷக் குவியலாய்
சுகம் கண்டு சொன்ன சொல் ஒன்றைத்
தேடுகிறேன்.

பகட்டான உலகத்தில்
பாதைகளின் கீழ் புதைந்த விஷப்பூக்களை
யார் யாரோ தூவிட்டதை
அறியாமல்
துக்கத்தை சுகித்த பின்னர்
பொட்டென்று மண்டையில் போட்டு,
வாழ்வின் புதிய அர்த்தத்தைச் சொல்லிக்கொடுத்த

காலம் பயன்படுத்திய
அந்த ஒரு சொல்லைத் தேடுகிறேன்.

இன்னும் கிடைக்கவில்லை...
அந்தச் சொல் கிடைக்காத நாள் வரையில்
நான் பேசும் பேச்செல்லாம்
வெறும் காற்றுதான்
மானுடரே!
அதற்குள் அர்த்தம் நீர் கண்டறிந்தால்
நான் பொறுப்பல்ல.

வாய் திறந்து நான் எழுப்பும் ஓசைகளை
பேச்சென்றும் பொழிவென்றும்
பாட்டென்றும் வசனமென்றும்
கோபம் என்றும் காதல் என்றும்
உளறல் என்றும் தத்துவம் என்றும்
உண்மை என்றும் பொய் என்றும்
நீங்களாக நினைத்துக்கொள்ள
நான் பொறுப்பல்ல.

எனக்குத் தெரிந்த அந்த ஒரு சொல்தான்
எனக்குச் சொந்தம்.
அது கிடைக்கும் வரையில்
நான் பேசும் பேச்செல்லாம்,
வெறும் ஓசைதான்.
இல்லையென்றால்
மௌனம் என
மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்!

சொல்லைத் தொலைத்துவிட்டேன்.
தேடுகிறேன்... இன்னும் தேடுகிறேன்.

பச்சை மண்ணைப்போல
பூமியில் வந்து விழுந்தபோது,
வாரியெடுத்து என் அம்மா
தன் மார்பில் புதைத்தபோது அழும்போது
என்னை ஆக்கிரமித்துக் காத்திருந்த
அந்த ஒரு சொல்லைத்
தேடுகிறேன்.

பருவம் வந்தபோது,
குணமும் மாறிப்போய்,
தான் என்ற எண்ணம்
தலைமுழுக்கக் குடியேறி
வானம் என்பது என் உள்ளங்கை அளவு,
உலகம் என்பது
நான் திரிந்தலையும் சோலை என
வாழ்க்கை என்பதையே
புதிதாக அர்த்தப்படுத்தி,
ஒவ்வொரு கணத்தையும்
சந்தோஷக் குவியலாய்
சுகம் கண்டு சொன்ன சொல் ஒன்றைத்
தேடுகிறேன்.

பகட்டான உலகத்தில்
பாதைகளின் கீழ் புதைந்த விஷப்பூக்களை
யார் யாரோ தூவிட்டதை
அறியாமல்
துக்கத்தை சுகித்த பின்னர்
பொட்டென்று மண்டையில் போட்டு,
வாழ்வின் புதிய அர்த்தத்தைச் சொல்லிக்கொடுத்த

காலம் பயன்படுத்திய
அந்த ஒரு சொல்லைத் தேடுகிறேன்.

இன்னும் கிடைக்கவில்லை...
அந்தச் சொல் கிடைக்காத நாள் வரையில்
நான் பேசும் பேச்செல்லாம்
வெறும் காற்றுதான்
மானுடரே!
அதற்குள் அர்த்தம் நீர் கண்டறிந்தால்
நான் பொறுப்பல்ல.

வாய் திறந்து நான் எழுப்பும் ஓசைகளை
பேச்சென்றும் பொழிவென்றும்
பாட்டென்றும் வசனமென்றும்
கோபம் என்றும் காதல் என்றும்
உளறல் என்றும் தத்துவம் என்றும்
உண்மை என்றும் பொய் என்றும்
நீங்களாக நினைத்துக்கொள்ள
நான் பொறுப்பல்ல.

எனக்குத் தெரிந்த அந்த ஒரு சொல்தான்
எனக்குச் சொந்தம்.
அது கிடைக்கும் வரையில்
நான் பேசும் பேச்செல்லாம்,
வெறும் ஓசைதான்.
இல்லையென்றால்
மௌனம் என
மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள்!