கொடும்வாதையான நேற்றைய இரவிலிருந்து
தப்பி வந்தவனில் நானொருவன்.
என்னவெல்லாமோ செய்தேன்.
மெழுகுவத்தியை உயிர்ப்பித்து இரவை எரித்தேன்.
மின்விசிறியைச் சுழலவிட்டுக் கிழித்தேன்.
போர்வைக்குள் புதைந்து இரவிலிருந்து எனைத் துண்டித்தேன்.
தகித்த இரவின் தலையில் வாளி நீரைக் கொட்டினேன்.
வேட்டையாடும் கண்கள் வாய்த்திருந்தன இரவுக்கு.
கொய்யென மொய்க்கும் தேனீக்களின் கொடுக்குகளால் ஆனது
என்றுகூடச் சொல்லலாம்.
விடியலின் பொன்கீற்றொன்று துளைக்க
உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்.
ஆம்
என் மார்பு கேசம் கோதும்
உன் விரலெனப் பற்றிக்கொண்டேன்.
இத்துணை ஆதுரமானதா உன் விரல்
இத்துணை ஆதுரமானதா உன் பகல்?!

எனக்கான முதிரிளம் பருவத்து முலையே!

ஓர் உயரிய மதுப்புட்டியென அத்துணை வாளிப்பாக
என் முன்னே இருக்கிறது என் நிலம்.
நான் அதை முத்தமிட்டு முன் பின் தட்டித் திறப்பேன்;
மிடறுமிடறாகப் பருகுவேன்.
அப்போது திறந்துகொள்ளும் என் ஆன்மாவுக்கும்
அதனைப் பருகக் கொடுப்பேன்.
முதிரிளம் பருவத்துள் நுழையும் கூர்ந்த முலையென
அதனை நக்கி, மென்கடி கடித்துச் சுவைக்கவும் செய்வேன்.
அது என் நாடி நரம்புகளுக்குள் ஊடுருவி
எனக்குள் புழுதி புரட்டி
என்னை உழுது செப்பனிடும்.
மண்டைக்குள் சுறுசுறுவென ஏறும் போதையை
நிலம் தந்த வெள்ளாமையெனக் கொண்டாடிக் களிப்பேன்.
கண்களுக்குள் உடையும் மீச்சிறு மின்னல்களில்
என் கருவேலத்து மினுக்கட்டான்களைக் கண்டெடுப்பேன்.
உச்சப் போதையில் என்னுடல் முறுக்குகையில்
சடசடவென உதிரும் நெட்டிகளில்
நீங்கள் புளியம்பழங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அவைதாம் இம்மதுவுக்கு புளிப்புச்சுவை கூட்டியவை.
என் கண்களில் செவ்வரியோடியிருப்பது
வெடிப்புறச் செம்மாந்திருக்கும் கோடைகுடித்த என் நிலம்தான்.
நிலமே...
மதுவே...
உனை எவருக்கும் கொடேன்
ஓரேர் உழவனாய் கைக்கொள்வேன்
அயலான் அருந்த உனை எப்படிக் கை நெகிழ்வேன்