Published:Updated:

காட்டு யானை

கவிதை: முகுந்த் நாகராஜன், படம்: சி.சுரேஷ்பாபு

பிரீமியம் ஸ்டோரி

லைக் கிராமம் ஒன்றில் 

வழி தவறி இறங்கிய

காட்டு யானைக் கூட்டத்தை

பற்றிய செய்தித் தொகுப்பைப்

பார்த்துக்கொண்டிருந்தபோதுதான்

'யானெ’ எனச் சொன்னாள்

குட்டிப் பாப்பா

முதல்முறையாக.

இன்னொரு முறை அவளை

'யானெ’ சொல்லவைக்க

அப்பா, அம்மா

எடுத்த முயற்சிகள்

தோல்வியில் முடிந்தன.

காட்டு யானை

அப்புறம் ஒருநாள்

நடு இரவில் எழுந்து

கட்டிலை அடித்தபடி

உற்சாகமாக

'யானெ... யானெ...’ எனக்

கூவிக்கொண்டிருந்தாள்

குழந்தை.

காட்டு யானை ஒன்று

வழி தவறி

வீட்டில் இறங்கியது.

அப்பா அம்மாவால்

அதைச்

சமாளிக்கவே முடியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு