FA பக்கங்கள்
Published:Updated:

டாய் ஸ்டோரி

டாய் ஸ்டோரி

டாய் ஸ்டோரி

சுட்டிகளின் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் பொம்மைகள். ‘என் பொம்மையைத் தொட்டால் அவ்வளவுதான்” எனப் பல வீடுகளில் உலகப் போரே நடக்கும். ஒவ்வொரு சுட்டியின் பொம்மைகளுக்குப் பின்னாலும் ஒவ்வொரு ஃபீலிங்.

சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த யு.கே.ஜி படிக்கும் புவன், டாய் பாக்ஸில் இருந்த  பொம்மைகளை அடுக்கிவெச்சுக்கிட்டே சொன்ன ஃபீலிங் ஸ்டோரி இது.

டாய் ஸ்டோரி

‘‘இந்த நாய் பொம்மையை நான் சின்ன வயசா(?) இருந்தப்ப, அப்பா வாங்கி வந்தாராம். கீ கொடுத்தா, குரைச்சுக்கிட்டே நகரும். என் அம்மா, நான் சாப்பிடும்போதெல்லாம் இதை  ஓடவிட்டு, சாப்பாடு ஊட்டுவாங்களாம். நானும் இதுக்கு சாப்பாடு ஊட்டுவேனாம். இந்தப் பொம்மை முதல்,

டாய் ஸ்டோரி

போன வாரம் வாங்கின ட்ரெய்ன் பொம்மை வரை பெரிய கதை இருக்கு” என்றான்.

அப்போது உள்ளே வந்தான், பக்கத்து வீட்டு அபினவ். இவங்க ரெண்டு பேருக்கும் ஓர்  ஒப்பந்தம் இருக்காம்.

டாய் ஸ்டோரி

“நாங்க எவ்ரி சண்டே ஒண்ணா விளையாடுவோம். ஒரு வாரம் புவன் பொம்மைகளை வெச்சுக்கிட்டு விளையாடினா,  இன்னொரு வாரம் என்னோட பொம்மைகளை வெச்சுக்கிட்டு விளையாடுவோம். இன்னிக்கி, புவன் பொம்மைகளை வெச்சு விளையாடும் நாள். இதோ, காயத்ரி அக்காவும் வந்துட்டாங்க” என்றான் அபினவ்.

எதிர் வீட்டு காயத்ரி உள்ளே நுழைய, ‘‘உங்களுக்குள்ள என்ன ஒப்பந்தம்?” எனக் கேட்டோம்.

‘‘என்ன ஒப்பந்தம், என்ன வேலைனு கொஞ்ச நேரத்தில் தெரியும் பாருங்க” என்றாள் காயத்ரி.

“வாடா விளையாடலாம். மெட்ரோ ட்ரெய்ன் வந்துச்சுல்ல... அப்பவே, எனக்கும் ஒரு ட்ரெய்ன்

டாய் ஸ்டோரி

பொம்மை வேணும்னு அப்பாகிட்டே கேட்டேன்.  லாஸ்ட் சண்டேதான் இதை வாங்கிட்டு வந்தார்” என்றபடி புவன், தண்டவாளத்தை செட் செய்ய ஆரம்பித்தான்.

எட்டு வடிவில் பிரமாண்டமான தண்டவாளம் ரெடி.

“ட்ரெய்ன்ல எந்த ஊருக்குடா போகலாம்?” எனக் கேட்டான் அபினவ்.

“நான், அமெரிக்காவுக்குப் போகப்போறேன்” என்றான் புவன்.

டாய் ஸ்டோரி

“அமெரிக்காவுக்கு ட்ரெய்ன்ல போக முடியாதுடா. டெல்லிக்குப் போ” என்றாள் காயத்ரி.

பேட்டரியை இயக்கியதும், தண்டவாளத்தில் வளைந்து நெளிந்து ரயில் ஓட ஆரம்பித்தது.  புது டெல்லிக்குப் போன ரயிலை, சென்னைக்குத் திருப்பினான். மீண்டும் புது டெல்லிக்கு என மாற்றி மாற்றி ட்ரிப் அடிக்க ஆரம்பித்தான்.

“என்னடா புவன், நீயே விளையாடிட்டு இருக்கே, எனக்குக் குடுடா” என்றான் அபினவ்.

“கொஞ்ச நேரம் இருடா” எனச் சொல்லிவிட்டு, தொடர்ந்து புவன் விளையாடினான். பொறுமை

டாய் ஸ்டோரி

இழந்த அபினவ், திடீரென தண்டவாளத்தை நகர்த்திவிட்டான். ரயில் பாதியில் கவிழ்ந்தது. “‘ஏண்டா இப்படிப் பண்ணினே?” என புவன் பாய, இரண்டு பேருக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது.

‘‘போடா, நான் வீட்டுக்குப் போறேன்” என அபினவ் கிளம்பியபோது, இடையில் புகுந்து, பஞ்சாயத்து பண்ணினாள் காயத்ரி.

டாய் ஸ்டோரி

பிறகு, ‘‘கோவிச்சுக்காதே அபி. இந்தா விளையாடு” என்றான் புவன்.

‘‘இந்த காயத்ரி எதுக்குனு இப்போ தெரியுதுங்களா?” என்றாள் காயத்ரி.

ரயில் ஆட்டம் முடிந்ததும் மூவருமாகச் சேர்ந்து வீடு கட்ட ஆரம்பித்தார்கள்.

‘‘கொஞ்ச நேரம் இருங்க. வீடு கட்டி முடிச்சு, கிரகப்பிரவேசம் செய்யப்போறோம். சாப்பிட்டுப்

டாய் ஸ்டோரி

போங்க” என்றான் புவன்.

‘‘அதுக்கு முன்னாடி கிஃப்ட் வாங்கிட்டு வாங்க”- என சிரித்தபடி துரத்தினான் அபினவ்.   

டாய் ஸ்டோரி

17-ம் நூற்றாண்டு வரை எல்லா வகைப் பொம்மைகளும் கையால் செய்யப்பட்டு வந்தன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு முறை வேட்டைக்குச் சென்றபோது, கரடி ஒன்றை வேட்டையாட மறுத்துவிட்டார். இந்தச் செய்தி உலகம் முழுக்கத் தெரிந்தது. அதிபரைப் பாராட்டி, அன்பளிப்பாக ஒரு பொம்மை கரடிக்குட்டியைக் கொடுத்தனர். அதற்கு, டெட்டியின் கரடி என்று பெயர் சூட்டினர். இப்போது டெடி பேர் உலகம் முழுவதும்  பிரபலம்.

மருத்துவக் குணங்கள்கொண்ட மரத்தில் செய்யப்படும் மரப்பாச்சிப் பொம்மைகள் மற்றும் தலையாட்டிப் பொம்மைகள் இந்தியாவில் மிகப் பிரபலம்.

இன்று விற்பனையாகும் பிளாஸ்டிக் பொம்மைகள் பலவும் ரசாயனக் கலவைகளால் உருவாக்கப்படுகின்றன. அவற்றை வாயில்வைப்பது ஆபத்தானது. ஆகவே, உங்களின் குட்டித் தம்பி, தங்கைகளிடம் பொம்மைகளைத் தரும்போது உஷார்.

- ஐ.மா.கிருத்திகா

படம்: ம.நவீன்