Published:Updated:

சொல்வனம்

ஓவியங்கள்: ராஜ்குமார் ஸ்தபதி

நிபந்தனைக்கு உட்பட்டது! 

மாட்டுவண்டி ஓட்டிய

மாரிமுத்தண்ணன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சூப்பர் எக்ஸலில்

வாட்டர் கேன் போடுகிறார்.

வெள்ளரிக்காய் விற்ற

வெள்ளியங்கிரி சித்தப்பா

வெளிநாடு சென்றுவிட்டார்.

'பதநீர்’ புகழ் பார்த்திபன் மாமா

ஏ.டி.எம் இயந்திரத்துக்கு

காவல் நிற்கிறார்.

முதல் ஆளாய் கல்லூரி சேர்ந்த

முத்துசாமிப் பய

பேப்பர் போடுகிறான்.

மரத்தடியில் முடிதிருத்திய

மகாலிங்கம்

ஈமக்கடன் முடியிறக்க

சிறப்பு அழைப்பாளராகிவிட்டார்.

சொல்வனம்

பட்டினப்பிரவேசத்துக்குப் பின்னான

ஊர் திரும்பலில்

'மாடசாமி மவனா நீயி’

என விளிக்கிற...

ஊர்த் தலைவரின் கேள்வியில்

சுருண்டுகிடக்கிறது

வாழ்க்கை!

- சூ.சிவராமன் 

நீர்த்தாரைப் பாம்பு!

இரைத்த நீர் வழிய

நிலத்தில் பாய்ந்து

வாய்க்கால் இறங்கி

வரப்பு கடந்து

மூச்சுக் குமிழ்விட்டபடி

துரத்தி ஓடிவருகிறது

முகம், கண், உடல் என அனைத்தையும்

தத்ரூபமாய் அமைத்துக்கொண்ட நீர்த்தாரைப் பாம்பு!

- ஸ்ரீநிவாஸ் பிரபு

ஆனந்தி 

அரசாங்க உத்தியோக

அப்பனுக்குப் பணிமாற்றம்.

பாசத் தோழிகளை

நீரூற்றி வளர்த்த

ரோஜாச் செடிகளைவிட்டுப் பிரிய மனமின்றி

சுற்றிச் சுற்றி வந்து

பள்ளியைவிட்டு

வெளியேற மனமில்லாமல்

ஓர் அகதியைப்போல

வெளியேறுகிறாள்

ஆறாம் வகுப்பு ஆனந்தி!

- தரணி வேந்தன்

கருணை!

பேருந்து வாசலில்

புரையோடிய கண்ணும்

கையில் குழந்தையுமாக

அழுக்குப் பெண்ணுருவம்

கை நீட்ட

சட்டைப்பை துழாவி

இரண்டு ரூபாய் நாணயமிட்டேன்.

தடி ஊன்றி

தள்ளாடிய பெரியவர் ஒருவரின்

கை நீட்டலுக்கு

ஒரு ரூபாய் இட்டேன்.

காத்திருப்பின் நீட்சியில்

'அண்ணா...’ என

ஒரு சிறுமி கையேந்தியபோது

என் சட்டைப்பையில்

கருணை தீர்ந்து

ரூபாய்த்தாள்களே

மிச்சமிருந்தன!

- மு.மகுடீசுவரன்

அவன் செயல்!

படியேற முடியாத முதியவரொருவர்

அடிவாரத்திலிருந்தபடியே

வணங்கிக்கொள்கிறார்

மலையுச்சி சிவனை.

இறங்கி வருவானா எம்பெருமான்

தெரியவில்லை!

- அ.நிலாதரன்