Published:Updated:

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவு

கவிதை: இசை, ஓவியம்: ஹாசிப்கான்

வள் அழைத்த அப்போது 

ரயில் படிக்கட்டில் அமர்ந்திருந்தேன்.

வானத்தில் பூர்ணிமை பொங்கி வழிந்துகொண்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்பொழுது அதனுடன் மட்டுமே பேசத் தோன்றியது

எனவே போனை எடுக்கவில்லை.

திரும்பவும் வந்த அழைப்பை

வேறு உலகத்திலிருந்து வந்து விழும் கல்போல் உணர்ந்தேன்.

ஆகவே அதைத் துண்டித்துவிட்டேன்.

இன்னொரு நாள் அழைக்கையில் அலுவலகத்தில்

பழைய ஃபைலொன்றைத் தேடிக்கொண்டிருந்தேன்.

அவளைவிடவும்

அப்படியொன்றும் முக்கியமான ஃபைலில்லைதான்.

ஆனாலும் எடுக்கவில்லை.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவு

மூன்றாவது முறையாக அழைத்தபோது

இரண்டு காரணங்களைச் சொல்லவேண்டியிருந்ததால்

எடுக்கவில்லை.

நான்காவது முறைக்கு மூன்று காரணங்களையும்

ஐந்தாவது முறைக்கு நான்கு காரணங்களையும்

கண்டறியவேண்டியிருந்தது.

அடுத்தடுத்த அழைப்புகளில்

பிரியம் பூதமென்றாகிவிட்டது.

விட்டுவிடவே கூடாத அன்புதான்

ஆனாலும் விட்டுவிட்டேன்.

எல்லாம் அந்த 'பூர்ணிமா’வைச் சொல்ல வேண்டும்!