Published:Updated:

பேரம்

கவிதை: வே.பாபு ஓவியம்: ஹாசிப்கான்

பூக்கடையில் அமர்ந்திருப்பது 

அனிச்சமலர் என்பதை

அறியாதவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எண்பது ரூபாய் சம்பங்கி மாலையை

நாற்பத்தைந்துக்குக் கேட்கிறான்

ஐம்பது

ஐம்பத்தைந்து

அறுபதுக்கு மேல் நகராதவன்

திணித்துச்செல்கிறான் பணத்தை

பேரம் பேசுபவர்கள்

பேரம்

இது

அனிச்சமலரென்று அறிக

அல்லது

அடுத்த கடை நோக்கிச் செல்க!