Published:Updated:

சொல்வனம்

ஓவியங்கள்: மருது

பொன்னையா ஆசாரி என்னும் பெருந்தச்சன் 

கனகாம்பர அம்பாளின் உயிர் ததும்பும் வடிவம் கண்டால்

முகம்புதைத்து மனம் பேதலிக்கும் அவன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பொன்னையா ஆசாரி என்னும் பெருந்தச்சன்.

முதிர்ந்து உதிர ஆயத்தமாகும்

கிழவனின் பழுத்த கண்கள்.

நிசப்தம் உடையாத பொழுதுகளில்

காலில்லா தேரிலேறி அம்பாளின் இருக்கையில் அமர்ந்து

'பெருந்தச்சன் நானென’

ராஜ கம்பீரமாகச் சத்தமிடுவான்

சொல்வனம்

தன்னிலை மறந்து!

தேர்க்காலின் ஒற்றைச் சக்கரத்துக்கு

கடையாணி செய்ய மாதங்கள் செய்யும் அவன்

காலையே செய்வதற்கு மாமாங்கம் செய்வானோ!

அம்பாளின் களிநடன அபிநய விரல்களில்

நூல் பற்றியறுந்த கணத்தில்

மகிழ்வோடு பிறந்த மார்பானான் பொன்னையா.

கோயில்வாசம் கொண்ட தச்சன்

சாயும்நேர அவளின் ஒளிகுறை எழில்கண்டு

அன்றலர்ந்து நகர்வான்.

அவளின் கடைக்கண் பார்வைபட்டால்

உறுமீன்கொண்ட கொக்கின் அவசரமெனப் புரையேறி

காகங்களை வணங்கிவிட்டு

சாஷ்டாங்கமாகத் தொப்பென சத்தமிட விழுவான்

கால்களில்

அம்பாளும் கடைவிழி துளி நீரின்மூலம்

அவன் தலை நனைப்பாள் யாருமறியாமல்

தனக்கு அவள்மேல்

மையலிருந்ததை ஒப்புக்கொண்ட நாளில்தான்

கடைவாயில் குருதிவழிய தேர்க்காலில் கண்மூடிக்கிடந்தான்

பைத்தியக்காரப்பயல் பொன்னையா

ஊழின்மேல் பழிபோட்டு உலகுநடத்தும் அம்பாள்

விரல்நடுங்க வீற்றிருந்தாள் கண்மூடியபடி!

- ஸச்சின்

ஹைர ஹைர ஹைரப்பா...

பக்கத்து வீட்டிலிருந்து

'ஹைர ஹைர ஹைரப்பா’வென

சத்தமாகப் பாடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்

பிரசாந்தும் ஐஸ்வர்யா ராயும்.

ஐஸ்வர்யா ராய்க்குத் திருமணமாகிவிட்டது.

பிரசாந்த் தற்போது பரபரப்பாக இல்லை.

பின்புலத்தில் வரும்

இரட்டைக்கோபுரமும் இப்போது இல்லை.

நட்பு வட்டம் சூழ

சொல்வனம்

'ஜீன்ஸ்’ படத்தை நான் ரசித்த

அந்தத் தியேட்டரும் இப்போது இல்லை.

யாரோ சேனல் மாற்றிவிட்டார்கள்

இப்போது அந்தப் பாடலும் கேட்கவில்லை.

இன்று முழுக்க என் முணுமுணுப்பில்

'ஹைர ஹைர ஹைரப்பா’வென

இரட்டை வரிகளுக்கு மட்டும்

ஆடிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும்!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

எல்லோருக்கும் தெரிந்த ஒருத்தி!

விஷேச விருந்துகளில்

கடைசி இருக்கையின் ஓரத்தில்

குழந்தைக்கு உணவு ஊட்டியபடியே

உண்ணும் அவளை நன்கறிவேன்

நண்பனும் நன்கறிவான்.

உணவு பரிமாறுபவரும் நன்கறிவார்

விஷேச வீட்டார்களும் நன்கறிவர்

சொல்வனம்

எல்லோருக்கும் தெரிந்த

அவளுக்குத் தாமதமாகத்தான்

உணவு பரிமாறப்படுகிறது.

கவனிப்பின் கண்கள் குருடாகின்றன.

சாதங்களில் இரு வகை குறைகின்றன.

அவளின் பல விக்கல்களுக்கு இடையில்

யாரோ ஒருவர் தண்ணீர் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறார்

'என்ன அவசரம்?’ என்ற சொல்லோடு.

கால்மணிநேரக் காத்திருப்புக்குப் பின்

இரண்டாம் முறை உணவு

கொடுக்கப்படுகிறது.

அழுக்குச் சேலையால்

குழந்தையின் முகம் துடைத்தபடியே பதில் ஏதும் கூறாது

சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்

எல்லோருக்கும் தெரிந்த

அந்த யாரோ ஒருத்தி!

- துரை