பிரீமியம் ஸ்டோரி

மிழ் காமிக்ஸ் உலகின் ராஜாதி ராஜா, செல்லம் என்கிற செல்லப்பன், ஆகஸ்ட் 28 அன்று மறைந்துவிட்டார்.

1960 முதல் 2000 வரையிலான 40 ஆண்டு காலகட்டத்தில் பிறந்தவர்களின் குழந்தைப் பருவத்தைக் குதூகலம் ஆக்கியவர் செல்லம்.

காமிக்ஸ் ராஜா!

ஏப்ரல் 7, 1940-ல் நாகர்கோவிலின் ‘இக்கியானம்’ என்ற கிராமத்தில் பிறந்தவர் செல்லப்பன். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் கெட்டிக்காரர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, நாகர்கோவிலின் சித்ரா ஓவியப் பள்ளியில் டிப்ளோமா முடித்தார். ‘கன்னியாகுமரி’ என்ற பத்திரிகையில், அவரது முதல் ஓவியம்  வெளியானது.

பிறகு, முரசொலி பத்திரிகையில் கேலிச்சித்திரம் (Cartoon) வரைய ஆரம்பித்தார். கலைஞரின் ‘வெள்ளிக்கிழமை’ மற்றும் அறிஞர் அண்ணாவின் ‘உன்னைத்தான் தம்பி’ என்கிற தொடர்கள் மூலம்  பிரபலமானார். அரசியல் பத்திரிகையின் ஓவியர் என்கிற முத்திரையில் இருந்து விடுபட, வாரப் பத்திரிகைகளுக்கும் காமிக்ஸ் கதைகளுக்கும் படம் வரைய ஆரம்பித்தார். அது, அவரை புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது.

காமிக்ஸ் ராஜா!

தமிழில் காமிக்ஸ் என்றால் ‘செல்லம்’; செல்லம் என்றால் ‘காமிக்ஸ்’ எனச் சொல்லும் அளவுக்கு முத்திரை பதித்தார். குழந்தை எழுத்தாளர் வாண்டுமாமாவின் பல காமிக்ஸ் கதைகளுக்கு உயிர் கொடுத்தவர் செல்லம். பலே பாலு, சமர்த்து சாரு, புலி வளர்த்த பிள்ளை, திகில் தோட்டம், சிறுத்தைச் சிறுவன்... என வாண்டுமாமாவும் செல்லமும் இணைந்து உருவாக்கிய காமிக்ஸ் ஒவ்வொன்றும் இன்றைய அனிமேஷன் படங்களுக்கு இணையான விறுவிறுப்புக்கொண்டது.

கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர், சுட்டி விகடன்... என இவரது ஓவியங்கள் வெளிவராத சிறுவர் பத்திரிகைகளே கிடையாது. இவர் கடைசியாக காமிக்ஸ் வரைந்தது சுட்டி விகடனில்தான்.

செல்லம் மறைவு, தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு. (சுட்டி விகடனில், வெளியான அவரது ஒரு படக்கதை, அடுத்த பக்கத்தில்.)

- கிங் விஸ்வா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு