Published:Updated:

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

மை டியர்... 

10 செகண்ட் கதைகள்

லாக்ஆஃப் செய்யாமல் விட்டுச் சென்ற காதலியின் ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருந்தான் சேகர். அப்போது அவன் ஐ.டியில் இருந்தே காதலியின் ஐ.டிக்கு மெசேஜ் வந்தது... 'என்ன ராசா பண்ற என் ஐ.டியில?’

- திவாகர்

 பக்திமான்

10 செகண்ட் கதைகள்

மொபைலில் டெம்பிள் ரன்னில் எப்போதும் மூழ்கியிருக்கும் மகனைப் பார்க்கும்போது ஜோதிடர் சொன்னது நினைவுக்கு வந்தது, 'உங்க மகன் கோயில் கோயிலா ஏறி இறங்குவான்!’

- சாய்ராம்

கஷ்டம்!  

10 செகண்ட் கதைகள்

''இந்தத் தண்ணிக் கஷ்டம் பெரும் பாடால்ல இருக்கு'' என நொந்தபடி கேன் வாட்டரை சைக்கிளில் வைத்துத் தள்ளிக்கொண்டு, தெருவெங்கும் தேங்கியிருந்த மழைநீரில் சிரமத்துடன் நடந்தான் அவன்!

- பா.வெங்கடேஷ்

அடையாளம்

10 செகண்ட் கதைகள்

''பஸ் ஸ்டாண்ட்கிட்ட இருக்கிற டாஸ்மாக் கடைக்கு வெளியே நிக்கிறேன்'' என லேண்ட்மார்க் சொன்னவனிடம் தினேஷ் கேட்டான், ''பஸ் ஸ்டாண்டைச் சுத்தி ஆறு கடைகள் இருக்கு. எந்தக் கடை?''

- கமல்ராஜ்

 வீரம்

10 செகண்ட் கதைகள்

ஹீரோ சூரஜ், டைரக்டரிடம் துணிச்சலாகக் கூறினான், ''புலியோட சண்டைபோடுற சீன்ல எனக்கு டூப் வேண்டாம்; நானே சண்டை போடுறேன். புலியை மட்டும் கிராஃபிக்ஸ்ல பண்ணிடுங்க!''

  - எம்.ஆர்.மூர்த்தி

 காபந்து

10 செகண்ட் கதைகள்

வழியிலே கொலைசெய்யப்பட எடுக்கப்பட்ட எல்லா முயற்சி களையும் முறியடித்து, பலத்த போலீஸ் துணையுடன் கோர்ட்டில் இருந்து பாதுகாப்பாக சிறைக்குக் கொண்டுவரப் பட்டான், மறுநாள் தூக்கில் போடப்படவிருக்கும் தீவிரவாதி!

- ஜீஜோ

 யாரும் இல்லா...

10 செகண்ட் கதைகள்

''இன்னிக்கு நைட் எங்க வீட்ல யாருமே இருக்க மாட்டாங்க!'' என தினேஷிடம் அலைபேசிக் கொண்டிருந்தாள் ப்ரியா. இரவு குளித்துவிட்டு கனவுகளின் புது நறுமணம் பறக்க விரைந்தான் ப்ரியா வீட்டுக்கு... வீடு பூட்டி இருந்தது!

- செ.விமல்குமார்

10 செகண்ட் கதைகள்

 'தங்கள் தந்தை தவறியதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’  பக்கத்து வீட்டுக்காரருக்கு 'வாட்ஸ் அப்'பினார் வாஞ்சிலிங்கம்!

- ரிஷிவந்தியா

மாமா நலமா?

அம்மா: ஏண்டா... மாமா கையை உடைச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல  இருக்கான். போய்ப் பார்த்துட்டு வந்தா ஆறுதலா இருக்கும்ல!

10 செகண்ட் கதைகள்

மகன்: எத்தனை தடவைம்மா சொல்வ நீ? போய்ட்டு வந்துட்டேன். நீ நம்ப மாட்டேனுதான் மாமாகூட செல்ஃபி எடுத்திருக்கேன் பாரு!  

- நித்யா துரைசாமி

பரிசு

10 செகண்ட் கதைகள்

'இன்றைக்காவது மகன் கேட்ட 'லவ் பேர்ட்ஸ்’ வாங்கிவிட வேண்டும்’ என யோசித்துக்கொண்டே அலுவலக லிஃப்ட்டில் ஏறிய நான், பவர் ஷட் டௌன் ஆகி உள்ளே சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு, பின் வெளியே வந்த அந்த நிமிடம்... பறவைகள் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்!

- சாய்ராம்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய 'நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!