சுட்டீஸ்... நீங்க சொர்க்கம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீங்க. அங்கேயும் நம்ம பூமியில அலுவலகங்களில் இருக்கிற மாதிரி டிபார்ட்மென்ட்ஸ் இருக்கு. புதுசா சொர்க்கத் துக்குப் போன ஒருத்தர், அதைப் பார்க்க ஆசைப்பட்டார். சொர்க்கத்து சூப்பர்வைசர்களில் ஒருத்தர், ''சரி, வாங்க சுத்திப் பார்க்கலாம்'' என்று சொல்லி கூட்டிட்டுப் போனார்.

முதல் டிபார்ட்மென்ட்டுக்கு உள்ளே போனாங்க. அங்க வேலை பார்த்தவங்க எல்லாம் ரொம்பப் பரபரப்பா இருந்தாங்க. நிமிர்ந்து பார்க்கக்கூட அவங்களுக்கு நேரம் இல்லை. கட்டுக் கட்டா ஃபைல்கள் இருந்துச்சு. நொடிக்கு நொடி... கம்ப்யூட்டர்ல விஷயங்கள் அப்டேட் ஆகிட்டே இருந்துச்சு. அங்கே இருந்த போன், ஓயாம அடிச்சுட்டே இருந்துச்சு. அதில் ஒருத்தர், பதில் சொல்லிட்டே இருந்தார்.

''இது என்ன டிபார்ட்மென்ட்?'' என்று கேட்டார் நம்ம ஆள்.

''இது, வேண்டுதல் டிபார்ட்மென்ட். பூமியில வேண்டுதலுக்கா பஞ்சம்! ஜனங்களோட வேண்டுதலை எல்லாம் இவங்கதான் அப்லோட் பண்ணி சம்மந்தப்பட்ட கடவுளுக்கு பாஸ் பண்ணுவாங்க. ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒவ்வொரு டீம் இருக்கு. அதனால, எப்பவும் பிஸியா இருப்பாங்க. தினமும் மூணு ஷிப்ட் வேலை நடக்கும். பண்டிகை சமயத்துல ஸ்பெஷலா நான்காவது ஷிப்ட்கூட நடக்கும்'' என்றார் சூப்பர்வைசர்.

'இவங்க ரொம்பப் பாவம்தான்!’ அப்படின்னு நினைச்சுக்கிட்டு நகர்ந்தார் நம்ம ஆள்.

அடுத்த டிபார்ட்மென்ட்டுக்கு உள்ளே போனாங்க. முதலில் பார்த்த இடத்துக்கு நேர்மாறா இருந்துச்சு அந்த இடம். அங்கே வேலை பார்க்கறவங்க, சும்மா உட்கார்ந்து அரட்டை அடிச்சுட்டு இருந்தாங்க. கம்ப்யூட்டர்ல கேம் விளையாடிட்டு இருந்தாங்க. எப்பவோ ஒருமுறை போன் வந்துச்சு.

''இது என்ன டிபார்ட்மென்ட்?'' என்று கேட்டார் நம்மவர்.

''இது, வேண்டுதலை கடவுள் நிறை வேத்தினதும், அதுக்கு நன்றி சொல்ற டிபார்ட்மென்ட். யார் யார் நன்றி சொல்றாங்க என்கிற விஷயத்தைக் கணக்கு எடுப்பாங்க. ஆனா, மனுசங்க காரியம் முடிஞ்சதும் கடவுளை மறந்துடறாங்க. நூத்துல ஒருத்தர் கடவுளுக்கு நன்றி சொன்னாலே அபூர்வம். அதனால வேலை அதிகமா இருக்காது'' என்றார் சூப்பர்வைசர்.

நம்ம ஆள் திகைச்சுட்டார். 'ம்...கடவுள் பாவம்தான்!’ என்று நினைச்சுக்கிட்டார்.

கோட்டா டாட்டா !

ஒரு ஆமையும் ஒரு முயலும் ஒண்ணாம் வகுப்புல இருந்து ஒண்ணா படிச்சுட்டு இருந்தாங்க. ரெண்டு பேருக்கும் எப்பவும் போட்டிதான். ஆளுக்கு ஒரு கேங் சேர்த்துக் கிட்டு, ஸ்கூலையே அதகளம் செய்வாங்க. எல்லா போட்டியிலும் முட்டி மோதிப்பாங்க. ஒரு முறை முயல் ஜெயிச்சா... இன்னொரு முறை ஆமை ஜெயிக்கும். அதை ரெண்டு கேங்கும் கட்-அவுட் எல்லாம் வெச்சுக் கொண்டாடும். இவிங்க எப்படா ஸ்கூலைவிட்டுப் போவாங்க... நிம்மதியா இருக்கலாம்ன்னு டீச்சர்ஸ் நினைச்சாங்க.

அதுக்காக காலம் வேகமா ஓடுமா என்ன? எப்பவும் போல அது 'டிக்...டிக்...டிக்’ என்று ஒரு நாளைக்கு 24 மணி நேரமா போய்ட்டு இருந்துச்சு. முயலும் ஆமையும் ஒண்ணாம் வகுப்பில் இருந்து ரெண்டாம் வகுப்பு, மூணு... நாலு... இப்படிப் போக ஆரம்பிச்சு, ப்ளஸ் டூவுக்கும் வந்துட்டாங்க.

''இதுல, அவனைவிட நாம அதிக மார்க் எடுத்தே ஆகணும்டா'' என்று முயல் மாங்கு மாங்குனு படிச்சது. ஆமை அவ்வளவா அலட்டிக்கலை. பரீட்சையில தெரிஞ்சதை மட்டும் எழுதிட்டு வந்துடுச்சு.

ரெண்டு மாசத்துல ரிசல்ட் வந்துச்சு. ஆமை, 1109 மார்க்தான் எடுத்துச்சு. முயல் 1124 மார்க். அதுக்கு ஒரே குஷி! வழக்கம்போல முயலோட ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து 'அதிக மதிப்பெண் எடுத்து அசத்திய அண்ணலே...’ 'மதிப்பெண்களை வாரிக் குவித்த மகாபுத்திசாலியே...’ இப்படி டிஜிட்டல் பேனர்களை வெச்சு அசத்தினாங்க.

அப்புறம், முயல் அந்த ஊர்லயே ஃபேமஸான இன்ஜினியரிங் காலேஜ்ல அப்ளை பண்ணிச்சு. ஆமையும் அங்கேயே அப்ளை செய்துச்சு. அதுல ஆமைக்கு சீட் கிடைச்சது. முயலுக்குக் கிடைக்கலை. முயல் டென்ஷன் ஆயிடுச்சு. அப்பாவோடு போய் காலேஜ் பிரின்ஸ்பால் முன்னாடி நின்னது.

''என்னைவிடக் குறைஞ்ச மார்க் எடுத்த ஆமைக்கு எப்படி சீட் கொடுத்தீங்க. லஞ்சம் வாங்கினீங்களா?'' என்று கேட்டுச்சு.

''கண்டபடி பேசாதே... இது அந்த மாதிரி காலேஜ் கிடையாது.'' என்று சொல்லித் துரத்திட்டார் பிரின்ஸ்பால்.

முயல் வெளியே வர, அங்கே நின்னுட்டு இருந்த ஆமை, ''நண்பா... உனக்கு ஞாபகம் இருக்கா... ரெண்டாம் வகுப்புல படிக்கும்போது உன் அலட்சியத்தால ஓட்டப் பந்தயத்துல அப்ப நான் உன்னை ஜெயிச்சேன். அதான் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல எனக்கு இப்ப சீட் கிடைச்சது. டாட்டா...'' என்று சொல்லிட்டு கம்பீரமா நடந்துபோச்சு.