இந்நாளின் இலகுவுக்கு

ஏதோ ஒன்று

குறைந்தபடியே இருந்தது.

வாலடியில் சிவந்திருக்கும் சிறுகுருவி

இன்று காலையில்

ஏனோ வரவில்லை.

அழுத்திப் பல் தேய்க்கையில்

ஈறு காயமாகிவிட்டது.

குளிக்கையில்

கண்ணுக்குள் நுரையிறங்கிவிட

படாதபாடு பட்டேன்.

இணையக்கடையில் வாங்கிய

விலை உயர்ந்த புதுச்செருப்பை

இரவு காத்த வீட்டு நாய்

கடித்துவைத்திருந்தது.

இன்னும் இரண்டு மிடறுகள்

குடிக்க விரும்பி உறிஞ்சியபோது

தேநீர் தீர்ந்துவிட்டது.

கிளம்புகையில் மனைவி

'நடுராத்திரியில் யாரோடவோ பேசுறீங்க’ என்று

கண் ததும்பினாள்.

சாய்நிறுத்தியை அகற்றாமலேயே

வண்டியை ஓட்டிக்கொண்டு

அலுவலகம் வந்தேன்.

சந்திக்க வந்த ஏற்றுமதியாளர்

'இப்படியே ஐரோப்பிய நிலை நீடிக்குமெனில்

நம் பாடு திண்டாட்டம்’ என்று அச்சுறுத்தினார்.

மண்டை உடைய ஆராய்ந்து

வாங்கிய பங்குகள்

விலை தாழ்ந்திருந்தன.

மதிய உணவு

குழம்போடு ஊறி

புதுப்பெயர் வைக்கும் அளவுக்கு

மாறியிருந்தது.

இந்தப் பிற்பகல்

என்றைக்குமில்லாத சோம்பலில்

கழிந்தது.

வீடு திரும்புகையில்

மனையாளின் நிறைகண்கள்

நினைவுக்கு வர

மல்லிகை விடுபூக்கள்

கால் கிலோ வாங்கிக்கொண்டேன்.

ஒரு பூப்பொட்டலம் கைவந்ததும்

அந்தியின் அழகிய சுடர்

மனத்துள் மஞ்சள் மழையாய் இறங்கிற்று.

சாலை நாய் ஏறிட்டுப் பார்த்து

வாலாட்டியது.

அருகிலிருந்த கடைக்குள் நுழைந்து

ஒரு டீ சொன்னேன்.

இந்நாளின் இலகுவுக்கு

ஏதோ ஒன்று

குறைந்தபடியே இருந்தது.

வாலடியில் சிவந்திருக்கும் சிறுகுருவி

இன்று காலையில்

ஏனோ வரவில்லை.

அழுத்திப் பல் தேய்க்கையில்

ஈறு காயமாகிவிட்டது.

குளிக்கையில்

கண்ணுக்குள் நுரையிறங்கிவிட

படாதபாடு பட்டேன்.

இணையக்கடையில் வாங்கிய

விலை உயர்ந்த புதுச்செருப்பை

இரவு காத்த வீட்டு நாய்

கடித்துவைத்திருந்தது.

இன்னும் இரண்டு மிடறுகள்

குடிக்க விரும்பி உறிஞ்சியபோது

தேநீர் தீர்ந்துவிட்டது.

கிளம்புகையில் மனைவி

'நடுராத்திரியில் யாரோடவோ பேசுறீங்க’ என்று

கண் ததும்பினாள்.

சாய்நிறுத்தியை அகற்றாமலேயே

வண்டியை ஓட்டிக்கொண்டு

அலுவலகம் வந்தேன்.

சந்திக்க வந்த ஏற்றுமதியாளர்

'இப்படியே ஐரோப்பிய நிலை நீடிக்குமெனில்

நம் பாடு திண்டாட்டம்’ என்று அச்சுறுத்தினார்.

மண்டை உடைய ஆராய்ந்து

வாங்கிய பங்குகள்

விலை தாழ்ந்திருந்தன.

மதிய உணவு

குழம்போடு ஊறி

புதுப்பெயர் வைக்கும் அளவுக்கு

மாறியிருந்தது.

இந்தப் பிற்பகல்

என்றைக்குமில்லாத சோம்பலில்

கழிந்தது.

வீடு திரும்புகையில்

மனையாளின் நிறைகண்கள்

நினைவுக்கு வர

மல்லிகை விடுபூக்கள்

கால் கிலோ வாங்கிக்கொண்டேன்.

ஒரு பூப்பொட்டலம் கைவந்ததும்

அந்தியின் அழகிய சுடர்

மனத்துள் மஞ்சள் மழையாய் இறங்கிற்று.

சாலை நாய் ஏறிட்டுப் பார்த்து

வாலாட்டியது.

அருகிலிருந்த கடைக்குள் நுழைந்து

ஒரு டீ சொன்னேன்.