“கள்ளிக்குளத்தார் கடை முட்டக்கோஸ் என்னை 'வா... வா...’னு கூப்பிடுதுடே!' என்றார் குமார். சாயங்காலம் ஆகிவிட்டால், குமாரை இப்படி ஏதாவது ஒரு கடையின் நொறுக்குத்தீனி அழைத்துவிடும்.

''நான் ஒண்ணும் எனக்காகச் சாப்பிடலவே. நாகராஜனுக்கு முட்டக்கோஸ் பிடிக்கும்; அவன் ஞாபகமா சாப்பிடுதேன்'' என்பார்.

யார் பெயரைச் சொல்லியாவது எதையாவது சாப்பிட்டுவிடும் பழக்கம் குமாருக்கு. நாங்கள் குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு பூதத்தான்கோயில் வழியாக, கள்ளிக்குளத்தார் கடையை நோக்கி நடந்தோம். பூதத்தான்கோயில் காம்பவுண்டு சுவருக்கு முட்டுக்கொடுத்தபடி ஒரு டாஸ்மாக் குடிமகன் நின்றிருந்தான்.

'நாங்கதான் போராட்டம் பண்ணி பஜாருக்குள்ள கடை இருக்கக் கூடாதுனு சொல்லி மாத்தவெச்சோம். கடைசியில நம்ம வீட்டுப் பக்கம் கடையை மாத்திப் போட்டானுக. எப்படியும் வாரத்துக்கு ரெண்டு மூணு இந்த முடுக்குக்குள்ள பீஸாகிக் கிடக்கும்' எனச் சொல்லியபடியே வந்தார் குமார்.

பூதத்தான்கோயிலுக்குச் சுற்றுச்சுவர் கட்டியிருந்தார்கள். முன்னர் கட்டமண் சுவரோடு இருக்கும் காலத்தில் பூதத்தான் மீது ஒரு பயம் இருந்தது. ஓடைக்கரை இசக்கியம்மன் கோயிலைக் கடக்கும்போதும் சரி, பூதத்தான்கோயிலைக் கடக்கும்போதும் சரி... பயம் இல்லை எனக் காட்டிக்கொள்ளும் வேகத்தோடு ஓடுவது பழக்கம். அந்தப் பழக்கத்தின் நீட்சியாக, இப்போதும் நான் வேகமாக நடந்தேன்.

''என்னடே... பூதத்தான் மேல இன்னும் பயம் போவலியோ?'' என்று கிண்டலாகக் கேட்டார் குமார்.

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. நடுத் தெருவுக்குள் வரும்போது, பழனி ஆசான் வீட்டுக்கு அருகே சிலர் நின்றிருந்தார்கள். ஒரு ஹிட்டாச்சி வண்டி நின்று கொண்டிருந்தது.

வீரபாண்டி அண்ணனும் பண்டாரம் தாத்தாவும் மண்வெட்டிகளுடன் மண் தோண்டிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஏதோ ஒரு புதையலைத் தோண்டி எடுப்பதுபோல, ஒரு பேரமைதி. அருகே ஒரு மேஸ்திரியைப் போல இருந்த பட்டன் சாமி, ''எப்பய்யா வந்தே?' என்று என்னைப் பார்த்துக் கேட்டுவிட்டு, என் பதிலை எதிர்பார்க்காமல் வீரபாண்டி அண்ணன் தோண்டுவதையே பார்த்தபடி இருந்தார்.

பட்டன் சாமிக்கான பதிலைச் சொல்லிவிட்டு, நாங்கள் அவரைக் கடந்து சென்று, சற்றுத் தள்ளி நின்றோம். கருத்துக்களில் நிறைய முரண்கள் இருந்தாலும் எனக்கு பட்டன் சாமியின் உடல்மொழி பிடிக்கும். தன்னை விவேகானந்தர்போல காட்டிக்கொள்ள அவர் பிரயத்தனப்படுவதை, நான் சின்ன வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். இன்று வரை அதில் ஒரு மாற்றமும் இல்லை.

''என்ன தோண்டுதாவ தெரியுமாடே'' என்று கேட்டார் குமார்.

நான் தெரியாது என்பதுபோல தலை அசைத்தேன்.

''அதுக்குள்ளதான் திரவியம் செட்டியார் கல்செக்கைச் சாச்சுப் போட்டிருக்காவ. அதைத்தான் தோண்டி எடுக்கப் போறாவ'' என்றார் குமார்.

வீரபாண்டி அண்ணன் புரட்டிப் போட்ட மண்ணில், ஒரு செக்கின் அசைவை என்னால் உணர முடிந்தது. உள்நீச்சலடிக்கும் வீரனைப்போல அது மண்ணுக்குள் மூழ்கிக்கிடந்தது.

வீரபாண்டி அண்ணன், செக்கைச் சுற்றியிருந்த மண்ணைக் கிளைத்து, செக்கை அடையாளம் காட்டினார். ஹிட்டாச்சி வாகனம் ஒரு பெரிய சிலந்தியாக மெள்ள ஊர்ந்தபோது, 'செக்கு இருக்கிறப்ப இந்த இடம் எப்படி இருந்திச்சுன்னு உனக்கு ஞாவகம் இருக்காடே?' என்று கேட்டார் குமார்.

'இல்ல குமார், ஊரு எவ்வளவோ மாறிருச்சு. சரியா ஞாவகம் இல்லை' என்றேன்.

'பழசை நெனக்கணும்னா, புதுசா இருக்கிறதை எல்லாம் அழிச்சிட்டுப் பாக்கணும்வே' என்று சொன்னார் குமார்.

குமார் சொன்ன மாதிரி, புதியனவற்றை அழித்துவிட்டு, பழசாக எல்லாவற்றையும் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கும் எனத் தோன்றியது. நாங்கள் கள்ளிக்குளத்தார் கடைக்குப் போவதை மறந்து, அந்த ஹிட்டாச்சியையே பார்த்தபடி இருந்தோம்.

ஹிட்டாச்சி மெள்ள செக்கைப் புரட்ட முயற்சித்துக்கொண்டிருக்க, ''இவனுவ செக்கைத் தோண்டல, திரவியம் செட்டியார் ஞாவகத்தைத் தோண்டிட்டுக் கிடக்கானுவ'' என்றார் குமார்.

'ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து சாய்ந்த ஒரு பெருமரம்போல இருக்கும் அந்த செக்கின் அளவுக்கு, செட்டியாரின் நினைவு யாருக்கேனும் இருக்குமா..!’ என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.

திரவியம் செட்டியாரை எனக்கு நன்றாகத் தெரியும். சனிக்கிழமை தோறும் திரவியம் செட்டியார் வீட்டில் எண்ணெய் வாங்க, ஒரு நீண்ட வரிசை இருக்கும். சின்னப் பிள்ளைகள் எண்ணெய் வாங்க வந்தால், கொசுறாக ஒரு சின்னத் துண்டு எள்ளுப் புண்ணாக்கும் கொடுப்பார். செட்டியாரின் மனைவி உண்ணாமலை அம்மா பட்டறையில் இருந்தால், புண்ணாக்கு கொஞ்சம் பெரிதாகக் கிடைக்கும்.

'அப்பல்லாம் இந்த ஏரியா முழுக்க எள்ளு வாசனையும் நல்லெண்ணெய் வாசனையும் ஆளத் தூக்கும்டே என்னா...' என்றார் குமார்.

மண்ணுக்குள் புதைந்துகிடந்த செக்கு என் மனசுக்குள் சுழலத் தொடங்கியது.

'ஏ... செதுக்கியுள்ளயளா...’ என்கிற சொல்லும், 'ட்ர்ர்ரம்ட்ரூம்டர்ர்ர்...’ என்கிற சத்தமும் மெள்ள மேலே எழுந்து வந்தன. ஒரு சாதி சங்கமாக இருந்த கட்டடம் மனதுக்குள் சரிந்து விழுந்து, அந்த இடத்தில் ஒரு வாதமடக்கி மரம் வந்து அமர்ந்தது. ஒரு செவலை மாடும் வெள்ளை மாடும் பூட்டப்பட்ட செக்கின் தாங்கு கட்டையில், திரவியம் செட்டியார் அமர்ந்திருந்தபடி 'இந்தேரு...’ என மாட்டை ஓட்டிக்கொண்டிருக்கும் காட்சி விரிந்தது.

நெஞ்சுக்கு நடுவே குறுக்கே ஒரு தாவணி மறைப்பைப்போல ஒரு துண்டு. நாலு முழ வேட்டி - இதுதான் செட்டியாருக்கு எனச் சொந்தமாக இருந்த ஆடை. இது தவிர்த்து ஒரே ஒரு சட்டை வைத்திருப்பார். அது எப்போதாவது எள் வாங்க, திருநெல்வேலி போகும்போது போட்டுக் கொள்வதற்கு. எள் வாங்கப் போகும் தருணம் தவிர்த்து, வேறு எப்போதும் அவர் சட்டை அணிந்த சரித்திரம் இல்லை.

உள்ளூர் திருமண வீடுகளுக்கு வரும் போதுகூட சட்டை இல்லாமல் வெறும் துண்டோடு வந்துவிடுவார்.

''என்ன செட்டியாரே, கல்யாண வீட்டுக்குமா இப்படி வரணும்?'' எனக் கேட்டால், செட்டியார் சிரித்தபடி, 'சட்டையைப் போட்டுட்டு வந்தா மட்டும் நாமளா தாலியைக் கட்டப் போறோம். பந்தில இருந்து ரெண்டு உருண்டையை அள்ளிப்போட்டுட்டு, மொய் எழுதிட்டுப்போறதுக்கு ஒரு நடையும் நடந்து, உடையும் உடுத்திட்டு வரணுமாக்கும்'' என எதிர்க் கேள்வி கேட்பார்.

செட்டியாருக்கும் தெவனாப்பேரியில கடை வெச்சிருந்த பீர்க்கண்ணுக்கும்தான் ஏழாம்பொருத்தம். 'பேருல கஞ்சத்தனம் புடிச்ச பெரிய மனுஷன்’ என திரவியம் செட்டியாரைக் கேலி செய்வார் பீர்க்கண்ணு.

திரவியம் செட்டியாருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவனுக்கு 'இசக்கி’ என பெயர் வைத்தார். இரண்டு வருடங்கள் கழித்து இரண்டாவது பையன் பிறந்தபோது, 'அவனுக்கு ஒரு பேரு, இவனுக்கு ஒரு பேருன்னு ரெண்டு பேரு எதுக்கு? மூத்தவனை 'பெரிய இசக்கி’னு வெச்சுக்குவோம்; சின்னவனை 'சின்ன இசக்கி’னு வெச்சுக்குவோம்'' என முடிவெடுத்தவர் திரவியம் செட்டியார்.

'நல்லவேள வேய்... நீரு என்னை மாதிரி வதவதன்னு ஒம்போது புள்ளயள பெத்துப்போடல. அப்படிக்கண்ணும் உமக்குப் புள்ளய இருந்திச்சோ அம்புட்டுத்தான். பெரிய இசக்கி, ரெண்டாவது இசக்கி, மூணாவது இசக்கினு அது பாட்டுக்குப் போயிட்டேருக்கும்' என்பார் பீர்க்கண்ணு.

'ஒம்போது புள்ளையளப் பெத்துப்போட்டு பயபுள்ளைக்குப் பேச்சைப் பாரு. ஒம்போதுல அஞ்சு

பொட்டப்புள்ளைய... இப்படி விண்ணானமா பேசிட்டுத் திரிஞ்சா, குமருங்க இருந்து பட்டுப்போவும். செட்டி சிக்கனம் இருந்தாத்தாம்வே புள்ளையள கரைசேர்க்க முடியும்' எனச் சொல்வார் திரவியம் செட்டியார்.

வியாபாரத் தொடர்பு தாண்டி, ரெண்டு பேருக்கும் இருந்த நட்பு அப்படிப்பட்டது. சமயங்களில் அதிகாலை மூன்று மணிக்கு செட்டியார் செக்கு ஆட்ட வந்துவிடுவார். அது மாதிரி நாட்களில் வீட்டில் செட்டியார் அம்மாவுக்கும் செட்டியாருக்கும் சண்டை வரும்.

மாடுகளின் சீரான மணிச் சத்தமும் செக்கு உலக்கையின் உராய்வுச் சத்தமும், அந்த அதிகாலையில் ஒரு துயரக்குரல்போல ஒலிக்கும். அது மாதிரியான சந்தர்ப்பங்களில் செட்டியார் தனக்குள் ஒரு மந்திரத்தை முணுமுணுப்பதுபோல எதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பார். தன் சுய ஆவலாதிகளைத் தீர்த்துக்கொள்ள, எல்லா மனிதனுக்கும் ஏதோ ஓர் இடம் தேவைப்படுகிறது. திரவியம் செட்டியாருக்கு அந்த இடம், செக்குப் பலகைதான்.

சமயங்களில் பீர்க்கண்ணுவும் திரவியம் செட்டியாரும் செக்குப் பலகையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பேச்சுவார்த்தை, அந்தச் செக்குவட்டத்தைத் தாண்டி வராது.

''அப்படி என்ன ரகசியத்தைப் பேசினிய?'' என பீர்க்கண்ணுவிடம் கேட்டால், ''செத்தாலும் வராது செட்டி ரகசியம்'' எனச் சொல்வார்.

பீர்க்கண்ணுவுக்கு, திரவியம் செட்டியார் மீது நட்பைத் தாண்டி, ஒரு தனித்த பாசம் இருந்தது. ஒருவகையில் வியாபாரத்தில் தனக்கு குருநாதராக பீர்க்கண்ணு, திரவியம் செட்டியாரைத்தான் கொண்டிருந்தார்.

''ஒரு குத்து எள்ளை எடுத்து மோந்து பாத்தா, ஆட்டற எண்ணெய் வாசனை அந்த எள்ளுல தெரியணும்'' என்பார் திரவியம் செட்டியார். அந்தச் சொல்தான் பீர்க்கண்ணுவின் மந்திரம்.

''திரவியம் செட்டியார் எள்ளு வாங்கற மாதிரி சரக்குப் போட்டுட்டு வரணும்டா'' என பீர்க்கண்ணு டவுனுக்கு சரக்குப் பிடிக்கப்போகும் தன் மக்களுக்குச் சொல்லி அனுப்புவது உண்டு.

எள்ளுச் செக்கு வைத்திருந்ததாலா என தெரியாது... திரவியம் செட்டியாரின் தினப்படி வாழ்க்கை ஒரேவிதமாக இருக்கும். அந்த மாற்றம் இல்லாத வாழ்வின் மீதான விமர்சனம்தான் உண்ணாமுலையம்மாவுக்கும் செட்டியாருக்கும் சண்டையாக உருவெடுக்கும். உண்ணாமுலையம்மா என்ன பேசினாலும் செட்டியார் அதிர்ந்து பேசவோ, பதில் சொல்லவோ மாட்டார். மாடுகளை அவிழ்த்துக் கொண்டு செக்கு சுத்த வந்துவிடுவார்.

''புருஷன் பொண்டாட்டி கோவத்துல என்ன சொல்லு சொன்னாலும் பத்து நிமிஷத்துல செத்துப்போயிரும். அந்த ஈசல் சொல்லைச் சொல்லி எதுக்கு எழவெடுக்கணும்?'' எனச் சொல்வார்.

அவருக்குள் தேங்கிக்கிடக்கும் கோபம் எல்லாம் பள்ளிக் குழந்தைகள் முன்தான் வெளியே வரும். ஒருவேளை பெரிய இசக்கியும் சின்ன இசக்கியும் படிப்பில் அத்தனை கூறு இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.

எலிமென்டரி ஸ்கூல் விட்டுவிட்டால் போதும்... திரவியம் செட்டியாருக்கு டென்ஷன் உச்சந்தலைக்கு ஏறிவிடும். தெக்கமாரப் போற புள்ளைகள் எல்லாம் திரவியம் செட்டியார் கல்செக்கு இருக்கும் இடத்துக்கு அட்டெண்டன்ஸ் போடாமல் போக மாட்டார்கள். கட்ட மண் சுவர் முழுக்க பள்ளிச் சிறுவர்களும் சிறுமிகளுமாக அமர்ந்திருக்க, செக்கு கட்டையில் அமர்ந்திருக்கும் செட்டியாருக்கு வரும் வேசடை இன்ன மட்டும் என இருக்காது.

'என்ன அலுவுசத்தைக் கண்டுட்டியன்னு இங்க வாரீய? போங்க... போங்க...'' எனப் பதனமாகச் சொல்லிப் பார்ப்பார். ஆனால், யாரும் செட்டியார் சொல்லை வகைவைப்பது இல்லை. அது அவருக்குக் கோபத்தைக் கிளறி விட்டுவிடும்.

''ஏ செதுக்கியுள்ளயளா, எவனாவது செக்குல கையை வெச்சியன்னா சொட்டை எலும்ப ஒடிச்சுப்போடுவேன்'' எனச் சொன்னபடி, அவர் சாட்டையைச் சுழற்றி மண்ணில் அடிக்க, புழுதி பறக்கும்.

செட்டியாருக்குத் திருத்தமாக தமிழ் பேச வரும். ஆனாலும் குழந்தைகளை கெட்ட வார்த்தையில் திட்டக் கூடாது என்ற எண்ணத்தில்தான் 'செதுக்கியுள்ளயளா’ எனத் திட்டுவார்.

குழந்தைகள் கட்டமண் திண்டில் அமர்ந்தபடி செக்கு சுற்றுவதைத் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். செக்கு தென்கிழக்குப் பக்கமாக இருக்கும் வேப்பமரத்தைக் கடக்கும்போது, செக்கு உலக்கை மரப்பட்டையோடு உராயும் சத்தம் 'ட்ட்ட்ட்ராண்ட்ட்ட்ரூம்ம்ம்ம்ட்ட்ட்ர்ர்ர்ரூ...’ எனக் கேட்கும். சொல்லி வைத்தமாதிரி குழந்தைகள் 'ஹே’ எனச் சிரிப்பார்கள்.

''இதுல என்ன அதிசயத்தைடா கண்டுட்டிய?'' என்று செட்டியார் சத்தக்காடு போடுவார்.

''செக்கு குசுவுனா சிரிக்க மாட்டாவளா?'' என்றபடி குழந்தைகள் உற்சாகமாக, 'ட்ட்ட்ட்ட்ராண்ட்ட்ட்ரூம்ம்ம்ம்ட்ட்ட்ட்ர்ர்ர்ரூ’ எனக் கத்தியபடி செட்டியாருக்குப் பழிப்பு காட்டிவிட்டுப் போவார்கள்.

குழந்தைகள் போன பின், செக்கு தென்கிழக்குப் பக்கம் வரும்போது செட்டியாருக்கும் தன்னை அறியாமல் சிரிப்பு வந்துவிடும்.

'செக்கு குசுவுதாம்ல, கோட்டிக்காரப் பயபுள்ளையளுவ’ எனச் சொன்னபடியே சிரித்துக்கொள்வார்.

திரவியம் செட்டியார் செக்கு எண்ணெய்க்கு சுற்று வட்டாரத்தில் மவுசு அதிகம்.

''தங்கத்தை நிறுத்த மாதிரி அளந்து ஊத்துதீரே... ஒரு சொட்டு எண்ணெய்தான் கூட விட்டா என்ன?'' எனக் கேட்டால், எண்ணெயைத் திரும்ப வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்து விடுவார். அந்த அளவுக்குக் கறாரான வியாபாரம். யார் எண்ணெய் வாங்கப் போனாலும் அவர்கள் கையைப் பிடித்து, புறங்கையில் ஒரு சொட்டு எண்ணெயைத் தடவிவிடுவார். அது... 'மோந்துப் பாரு... புடிச்சிருந்தா வாங்கிட்டுப் போ’ எனச் சொல்லாமல் சொல்வதுபோல இருக்கும்.

திரவியம் செட்டியாருக்கு வியாபாரத்தில் இருந்த கம்பீரம், வாழ்க்கையில் இல்லை. தன் இரண்டு மகன்களில் ஒருவனையாவது செக்குக்கு இழுக்கலாம் என அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. உண்ணாமுலைதான் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டாள் என, செட்டியார் அம்மா மீது அவரது கோபம் திரும்பியது.

ஒருமுறை செட்டியார் சண்டை போடுவதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பெரிய இசக்கி என நினைக்கிறேன். அவர் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தார். 'நோட்டு நோட்டா எடுத்துச் செலவழிக்க இங்க ஒண்ணும் விளையல தம்பி. உலகம் சுத்தறதவிட ஒரு சுத்து அதிகம் சுத்தி சம்பாதிச்ச காசு... பதனமா செலவு பண்ணணும்' என்றார் திரவியம் செட்டியார்.

''எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணு; ஆனா, என் ஆயுசு இருக்க வரைக்கும் அந்தச் செக்கு ஓடிட்டிருக்கணும். அதுக்குக் கொஞ்சம் ஒத்தாசையா இரு'' என்கிற அவரது கோரிக்கை, அவரது பிள்ளைகளிடம் எடுபடவே இல்லை.

மெஷின் எண்ணெய், செக்கு எண்ணெயைவிட மலிவாகவும் கவர்ச்சிகரமான வண்ணத்துடனும் கிடைக்கத் தொடங்கியது. வியாபாரிகளுக்கு மெஷின் எண்ணெயில் வரும் டின்கள் உபரி லாபமாகக் கிடைத்தன. அந்த விஞ்ஞான மிருகத்தோடு போட்டியிட முடியாமல் திணறின, திரவியம் செட்டியாரின் வெள்ளைக் காளையும் செவலைக் காளையும்.

செக்கின் ஓட்டம் நின்றதும், திரவியம் செட்டியாரால் அந்த ஊரில் இருக்க முடியவில்லை. ஒருநாள் மாலை செக்கின் தாங்குக்கட்டையில் அமர்ந்து பீர்க்கண்ணுவும் திரவியம் செட்டியாரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். 'பீர்க்கண்ணு உள்ளங்கையில் முகம்புதைத்து நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தார் திரவியம் செட்டியார்’ என செக்கு மைதானத்தின் அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள். அதற்கு மறுநாள் திரவியம் செட்டியாரின் குடும்பம் ஊரைவிட்டுப் போயிருந்தது.

'கடைசியா திரவியம் செட்டியார் என்ன சொன்னார்?’ எனக் கேட்டதற்கு, 'செத்தாலும் வெளிய வராது செட்டியார் ரகசியம்’ என்ற சொல்லோடு முடித்துக்கொண்டார் பீர்க்கண்ணு.

எந்த விசனமும் இல்லாமல் அமைதியாகப் போய்விட்டார் திரவியம் செட்டியார். வலிமையான கோபம் அவரிடம் எப்போதும் இருந்தது இல்லை. ஒரு வேளை தொழிலைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான கோபம் இல்லாததுதான், திரவியம் செட்டியாரின் செக்கை சாய்த்துவிட்டதா எனத் தெரியவில்லை.

ஒரு தொல்லியல் ஆய்வுக்குத் தோண்டுவது போல ஒரு நேர்த்தியோடு, வீரபாண்டி அண்ணன் மண்ணைத் தோண்டிவைத்தார். ஹிட்டாச்சியில் இருந்து ஒரு சங்கிலி போட்டு செக்கைக் கட்டினார்கள். மூன்றரை அடி கல்மரம் போல நீண்டுகிடந்தது. இன்னும் பாதிச் செக்கு மண்ணுக்குள் புதைந்தே இருந்தது. ஹிட்டாச்சி அதைப் பெயர்த்து எடுத்துவிடும் என்கிற நம்பிக்கை எல்லோரிடமும் இருந்தது. ஹிட்டாச்சி லீவர் தூக்கப்பட, மண் பிளந்து செக்கு அசைந்து கொடுத்தது.

''இந்த செக்கு நின்னு பத்து வருஷம் இருக்குமா?'' என்றேன்.

'ச்சே... இருவது வருஷத்துக்கு மேலவாவது இருக்கும். செக்கு ஓடலைன்னதும் ஒரு வருஷத்துல திரவியம் செட்டியார் இறந்து போயிட்டாரு' என்றார் குமார். இருவரும் அமைதியாக இருந்தோம். செக்கின் கனம் எல்லாம் மனதுக்குள் இறங்கியிருந்தது.

''இதுதான் கடைசி எள்ளு; இதுதான் கடைசி சுத்துன்னு திரவியம் செட்டியார் யோசிச்சு, கடைசி எண்ணெயை ஆட்டியிருப்பாரா தம்பி'' என்று கேட்டார் குமார். அந்தக் கேள்வி இன்னும் வலித்தது. இப்போது அந்தச் செக்கு வெறும் கல்செக்காகத் தெரியவில்லை. அதை வெளியில் எடுத்து, உடைத்து, கட்டப்பட இருக்கும் கட்டடத்துக்கு வானம் தோண்டிய குழியை நிரப்பிவிடுவார்களோ என்கிற அச்சம் எழுந்தது.

பட்டன் சாமியிடம், ''இதை எடுத்து என்ன பண்ணப்போறீங்க?'' எனக் கேட்டேன். ஆடிட்டிருந்த செக்கை சாச்சு போடக் கூடாது. இதை எடுத்து எங்களுக்கு தெவனாப்பேரி போற வழில ஓர் இடம் இருக்கு. அங்க நட்டுவச்சு திரவியம் மாமா ஞாபகமா சாமியா கும்பிடப் போறோம்'' என்றார். எனக்கு பட்டன் சாமி மீது மிகுந்த மரியாதை எழுந்தது.

குமாரிடம், ''அவங்க கோயில் கட்டினா, நாம மொத பொங்கல் வைக்கணும்'' என்றேன்!