அலமாரியில் இருந்து எடுத்த

கம்பளிப் போர்வையை

எறும்பு போல முயன்று

இழுத்துக்கொண்டு

கூடமெங்கும் திரிந்தாள்

குழந்தை.

அதட்டி அதட்டி

அதை

தன் செப்புச் சிமிழுக்குள்

அடைக்கப் பார்த்தாள்.

சிறுவிரல் நுனிபட்டு

உள்ளே செல்லும்

ஒரு துளிப் போர்வை

வெளியே வழிந்தோடிவிடும்

மறுநொடியே.

'போதும் விளையாட்டு’

என்று சிரித்தபடி

போர்வையைப் பிடுங்கி

எட்டாக மடித்த அப்பா

செப்புச் சிமிழளவு

சுருங்கியிருந்த அலமாரி அறையில்

வைக்க முயன்று திகைத்தான்.

செப்புக்குள் மெள்ள

கையிட்டுப் பார்த்தான்.

உள்ளிருந்து அவன் கையைப் பற்றியது

குழந்தையின் சிறுவிரல்.

அதில் படிந்திருந்தது

கடற்கரை விளையாட்டில்

கட்டிய சுரங்கத்தின்

ஈர மணல்.

அலமாரியில் இருந்து எடுத்த

கம்பளிப் போர்வையை

எறும்பு போல முயன்று

இழுத்துக்கொண்டு

கூடமெங்கும் திரிந்தாள்

குழந்தை.

அதட்டி அதட்டி

அதை

தன் செப்புச் சிமிழுக்குள்

அடைக்கப் பார்த்தாள்.

சிறுவிரல் நுனிபட்டு

உள்ளே செல்லும்

ஒரு துளிப் போர்வை

வெளியே வழிந்தோடிவிடும்

மறுநொடியே.

'போதும் விளையாட்டு’

என்று சிரித்தபடி

போர்வையைப் பிடுங்கி

எட்டாக மடித்த அப்பா

செப்புச் சிமிழளவு

சுருங்கியிருந்த அலமாரி அறையில்

வைக்க முயன்று திகைத்தான்.

செப்புக்குள் மெள்ள

கையிட்டுப் பார்த்தான்.

உள்ளிருந்து அவன் கையைப் பற்றியது

குழந்தையின் சிறுவிரல்.

அதில் படிந்திருந்தது

கடற்கரை விளையாட்டில்

கட்டிய சுரங்கத்தின்

ஈர மணல்.