மாநகரப் பூங்காவின் வடமேற்கு மூலையில்

இறகுப் பந்து விளையாடுகிறார்கள்

இருவர்.

புள்ளிகளின் எண்ணிக்கைக் கவலையற்று

விளையாட்டில் லயித்து

எதிர்ப்பக்கம் பந்தை அடித்தடித்து விளையாடுகிறார்

ஒருவர்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதெனில்

பந்துகளைத் தடுத்தாடுவதில் சிறிது அலைக்கழிகிறார்.

இவருக்கு கிராமத்தில் சொந்தமாக நிலம் இருக்கிறது.

அதைச் செப்பனிட்டுப் பயிர்செய்து பராமரிக்கும்

தாய் தந்தை இருக்கின்றனர்.

ஊருக்குப் போகும்போது மறவாமல்

நிலத்தின் நலம் பராமரித்துவிட்டு வருகிறார்.

கூடவே சில விதைகளை எடுத்துவந்து

தன் சிறுதோட்டத்தில் விதைத்து மரமாக்கிப் பராமரிக்கிறார்

அதில் சில பறவைகள் வசித்துவருகின்றன.

இன்னொருவர்

எதிராளியைத் திணறடித்து

புள்ளிகளைக் குவிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்.

பந்து தவறும்போது பதற்றத்தில் அவர் முகத்தசை இறுகுகிறது.

பந்தை எதிர்ப்பக்கம் அடித்து விரட்டும்போது

விதியின் அனுமதிக்கப்பட்ட சில குயுக்திகளைப் பிரயோகிக்கிறார்.

இவர் பக்கம் புள்ளிகள் அதிகமாகக் குவிகின்றன.

இவருக்கு

பன்னாட்டு நிறுவனமொன்றில்

மனிதவள மேம்பாட்டுத் துறையில் மேலாளர் பணி.

உதட்டில் உறையவைக்கப்பட்ட புன்னகையோடும்

உள்ளுக்குள் பற்களைக் கடித்துக்கொண்டு

மிக லாகவத்தோடும் இன்முகத்தோடும் பணிபுரிகிறார்.

ஆகாயம் தொடும் குடியிருப்பு ஒன்றின்

பதினான்காவது மாடியில் குடும்பம் நடத்துகிறார்.

கறுப்பு மேகங்கள் திரளும்போது

கண்ணாடியிட்ட ஜன்னல்களை இழுத்துச் சாத்திவிடுவார்.

இப்போது பாருங்கள்

இருவரும் விளையாடுகிறார்கள்!