ஆலமர விழுதிறங்கும்

சோனை பெட்டிக்கடைக்கும்

அங்கமுத்து மெஸ்ஸுக்கும்

இடையே நிற்கும்

ரஷ்யன் பேக்கரி.

காய்ச்சலென்றால்

அறுப்பு ரொட்டியோ ரஸ்க்கோ வாங்குவது தல்லாகுளத்தின் வழக்கம்.

கேக் என்பது அதற்கு மிக தூரம்

எட்டு மணிக்கு மேல்

தூள் கேக் கிடைக்குமென்பது

பின்னாளைய ஞானம்.

இரவுகளில்

அடைத்த கதவின் இடுக்கின்

ஊடே கசியும்

காயவைத்த ரொட்டிகளுக்குப் பின்

சுடரும் நெருப்பு.

மாநகராட்சி சாலையை

அகலப்படுத்த

ரஷ்யாவின் நடுமுற்றம் வரை அடிபட்டது.

அலாதியான

பீங்கான் ஜாடிகளோடு

எங்கோ போயினர்

வர்க்கீஸ் குடும்பத்தினர்.

எரியும் நெருப்பை

பாட்டிலில் அடக்கியதாய்

நிமிர்ந்து நிற்கிறது

ஒரு குளிர்பான வரைபடம்

அவ்விடம் இப்பொழுது.

ஆலமரம் அறியும்

பாட்டிலுக்குள்

மிதக்கும் பேக்கரியை.

சமயத்தில் கோபத்தில்

தன் பழங்களை

வீசியெறியும்

பாட்டிலின் கருத்த நிழல் மீது!

ஆலமர விழுதிறங்கும்

சோனை பெட்டிக்கடைக்கும்

அங்கமுத்து மெஸ்ஸுக்கும்

இடையே நிற்கும்

ரஷ்யன் பேக்கரி.

காய்ச்சலென்றால்

அறுப்பு ரொட்டியோ ரஸ்க்கோ வாங்குவது தல்லாகுளத்தின் வழக்கம்.

கேக் என்பது அதற்கு மிக தூரம்

எட்டு மணிக்கு மேல்

தூள் கேக் கிடைக்குமென்பது

பின்னாளைய ஞானம்.

இரவுகளில்

அடைத்த கதவின் இடுக்கின்

ஊடே கசியும்

காயவைத்த ரொட்டிகளுக்குப் பின்

சுடரும் நெருப்பு.

மாநகராட்சி சாலையை

அகலப்படுத்த

ரஷ்யாவின் நடுமுற்றம் வரை அடிபட்டது.

அலாதியான

பீங்கான் ஜாடிகளோடு

எங்கோ போயினர்

வர்க்கீஸ் குடும்பத்தினர்.

எரியும் நெருப்பை

பாட்டிலில் அடக்கியதாய்

நிமிர்ந்து நிற்கிறது

ஒரு குளிர்பான வரைபடம்

அவ்விடம் இப்பொழுது.

ஆலமரம் அறியும்

பாட்டிலுக்குள்

மிதக்கும் பேக்கரியை.

சமயத்தில் கோபத்தில்

தன் பழங்களை

வீசியெறியும்

பாட்டிலின் கருத்த நிழல் மீது!