மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இந்துக்கள் பிறப்புவிகிதம் குறைந்துள்ளது’ இந்திய சென்சஸ் துறை அறிவிப்பு.

''நமஸ்தே... மொத்தம் 743 பேர் இருக்கிறீர்கள்'' என்ற குருஜி, ''எண்ணிக்கை சரிதானே?'' என்றார் அருகில் இருந்த ஆசாமியைப் பார்த்து. 'அருகில் ஆசாமி’ கையால் வாயைப் பொத்திக்கொண்டு தலையை மட்டும் அசைத்தார்.

அந்த இடம் அமைதியாக இருந்தது. வெண்மையாக இருந்தது. அநியாயத்துக்கு வெண்மை. தரை, திரைச்சீலை, சுவர், சாய்ந்துகொள்ளும் திண்டு எல்லாமே. சுற்றுப்புறத்தை மழுங்கடிக்கும் ஒரே மாதிரியான வெளிச்சம். ஒரே மாதிரியான சீதோ மட்டும்... உஷ்ணம் இல்லை. எனக்கு எதிரே அமர்ந்திருந்த பெண்ணின் கூந்தலில் இருந்து, ஒரு மல்லிகை சிந்தினாலும் சத்தம் உண்டாகும் எனத் தோன்றியது. அப்படி ஓர்அமைதி. குருஜி பேசுவது ஒவ்வொருவரின் காதிலும் வந்து பேசுவதுபோல மென்மையாகக் கேட்டது. குருஜி, எங்களுக்கு எதிரே ஒரு மேடையில் மெல்லிய படுக்கையில் அரசர் போல அமர்ந்திருந்தார்.

''உங்களில் எத்தனை பேருக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது?'' என்றார்.

எனக்குப் பக்கத்தில் இருந்தவர், என்னை ஏதோ அனுமதி கேட்பதுபோலப் பார்த்துவிட்டு, கையை உயர்த்தினார். பிறகு, அங்கு இருந்த முக்கால்வாசி பேர் உயர்த்தினார்கள். குருஜி புன்னகை பூத்தார்.

''எத்தனை பேருக்கு மூட்டுவலி?'

இப்போதும் நிறையப் பேர் கையை உயர்த்தினார்கள்.

''எத்தனை பேருக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது?''

இதற்கும் சிலபேர்.

''எத்தனை பேருக்கு மனக் கவலை இருக்கிறது?''

கொஞ்சம் தயங்கி அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக கைகள் உயர்ந்தன.

குருஜி கண்ணை மூடித் திறந்தார்.

''650 பேருக்கு சர்க்கரை, 384 பேருக்கு மூட்டுவலி, 280 பேருக்கு ரத்த அழுத்தம்... 180 பேருக்கு மனக் கவலை.''

'ஹே’ என்ற மெல்லிய ஆச்சர்யம் எங்கள் பக்கம் இருந்து வெளிப்பட்டது.

''இங்கே யாருக்கோ கேன்சர் இருக்கிறது...'' குருஜி கூட்டத்தைக் கூர்ந்தார்.

''ஆமாம் குருஜி'' எனக் கையை உயர்த்தி, கேவி அழுதார் ஒருவர். சமீபத்தில்தான் பென்ஷன் வாங்க ஆரம்பித்திருப்பார்போல இருந்தார்.

''இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே சொல்லப்பட்ட எந்தப் பிணியும் யாருக்கும் இருக்காது. உடம்பே காற்றுபோல மாறப்போகிறது. ஆஸ்துமா, கிட்னி பழுது, லிவர் வீக்கம், வயிறு உப்புசம்... எல்லாமே நிவர்த்தியாகும். தாமரை இலை மீது முத்துப்போல இருக்கும் பனி நீர் சூரியன் வந்ததும் மறைவதுபோல பரிசுத்தம் ஆகும்.

இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய மனோசக்தியால் உங்களுக்கு வரம் அளிக்க முடியும். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை. ஆன்ம சக்தியை அப்படியே உங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் போகிறேன்... இதோ... இன்னும் சிறிது நேரத்தில்...''

அவருடைய பேச்சு ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக ஒலித்தது. நிறுத்தி நிதானமான ஆங்கில உச்சரிப்பு. கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தாலே, அவரவர் தாய்மொழிபோல புரியும்படியான பாந்தமான தொனி.

''எல்லோரும் பத்து நிமிடம் அறைக்கு வெளியே உங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டு உள்ளே வாருங்கள்.''

அறையின் மூன்று புறமும் விசாலமான மடிப்புக் கதவுகள் திறந்தன. தியான மண்டபத்தில் இருந்து காந்த ஈர்ப்புப்போல மூன்றாகப் பிரிந்து, மூன்று வாயில்கள் வழியாக வெளியே வந்தனர். சத்தம் இல்லாமல் ஆயிரம் பேரும் அங்கு இருந்து வெளியேறி அரங்கத்தைச் சுற்றியிருந்த தாழ்வாரப் பகுதிக்கு வந்தனர்.

வெள்ளைத் துணிகளால் வேயப்பட்ட தடுப்புகள். ஆசிரம சிப்பந்திகள் ஒவ்வொருவரையும் கருணையான முகத்தோடு அணுகி, சுத்தப்படுத்திக் கொள்ளும் முறையை விவரித்தனர்.

'தனித்தனியே குளிக்க வேண்டும். உடம்பில் பொட்டுத் துணி இருக்கக் கூடாது. பூ, ஆபரணம் எதுவும் இருக்கக் கூடாது. அனைத்தையும் கழற்றி அந்த அறைக்குள்ளேயே போட்டுவிடுங்கள். அங்கே ஒரு வெள்ளாடை இருக்கும். பெண்கள், ஆண்கள் இருவருக்குமானது, வெள்ளை அங்கி. அதை அணிந்து கொண்டு மீண்டும் அரங்கில் சென்று அமருங்கள்.’

சிஷ்யர், ஒருவரை அழைத்தார்.

''தூக்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்றுதானே நினைத்தாய்?''

''ஐயோ இல்லை சுவாமி... மன்னித்து விடுங்கள்... அப்படித்தான் நினைத்தேன்.''

''பாவ மூட்டைகளைச் சுமக்காத, பரிசுத்தமான உடலைத்தான் குருஜி சுகப்படுத்த முடியும். உங்கள் ஆடைகள், ஆபரணங்கள் எல்லாவற்றிலும் பாவக் கறை இருக்கிறது... உங்கள் சொத்துக்கள் எங்கேயும் போய்விடாது. அதைப் பத்திரமாகப் பூட்டிவிட்டு வாருங்கள். உங்களுக்கான பிரத்யேக எண்ணைப் பொருத்துங்கள். அதை யாரும் திறக்க முடியாது. போதுமா?''

''குருஜி நார்த்ல இருந்து வந்திருக்காரா? இப்படி ஒரு சாமிஜியை இதுவரை எந்த மீடியாவிலும் பார்க்கவில்லையே...'' சிலர் விசாரித்தார்கள்.

''குருஜி ஆண்டு முழுதுமே தியானத்தில் இருப்பார். இமயமலை சிகரத்தில் இடுப்புத்துணி மட்டும்தான். குளிர் அவரை நெருங்காது. உடம்பைச் சுற்றி ஒளி வீசும்.''

அது ஓர் ஐந்து நட்சத்திர ஹோட்டல். நான் மெள்ள மாடியில் இருந்து இறங்கி ரிசப்ஷனுக்கு வந்தேன். கூட்டம் நடத்தும் சுவாமிஜி பற்றி கேட்டேன்.

''ஹரித்துவார்ல இருந்து ரூம் புக் பண்ணாங்க. ஏதோ யோகா கிளாஸ்னு சொன்னாங்க'' என்றான் ஃப்ரன்ட் ஆபீஸ் ஊழியன்.

''எனக்கு இவர்கள் மேல் சின்ன சந்தேகம் இருக்கிறது. அவர்களின் முகவரி, போன் நம்பர் ஏதாவது தர முடியுமா? என் பெயர் கணேசன்... அசிஸ்டென்ட் கமிஷனர்'' என் காவல் துறை பதவி அடையாள அட்டையைக் காட்டினேன்.

''ஏன்? என்ன சந்தேகம்? ஏதாவது பிரச்னையா?''

''இதுவரை ஒரு பிரச்னையும் இல்லை. வந்திருப்பவர்களை ஏமாற்றிவிட்டுப் போய்விடுவார்களோ என ஒரு யூகம்.''

சற்று யோசனைக்குப் பிறகு,

அவர்களின் லெட்டர் பேடில் யோகா வகுப்பு நடத்துவதற்கான அனுமதிக் கடிதம் எழுதப்பட்ட நகலைக் காண்பித்தான். நான் நம்பரையும் முகவரியையும் குறித்துக்கொண்டு, என் டெல்லி நண்பருக்கு போன் போட்டேன். இங்கே நடப்பவற்றை விவரித்தேன். விசாரிக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் யோகா வகுப்பு நடக்கும் இடத்துக்கு வந்தேன்.

''எங்கே போய்விட்டீர்கள்... சீக்கிரம் சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்'' என்றார் ஒரு சிப்பந்தி.

எல்லோரும் குளித்துவிட்டு வெள்ளை அங்கியோடு இருந்தார்கள். 999 ஆடுகள். ஆட்டு மந்தைக் கூட்டம்.

வேகமாக தண்ணீரில் தலையைச் சிலுப்பிவிட்டு அங்கியை மாட்டிக் கொண்டு வந்தேன். என்னுடைய லாக்கரில் செல்போனும் வாட்ச்சும் மட்டும்தான். பர்ஸில் நானூத்திச் சொச்சம் பணம் இருந்தது. போனால் போகட்டும்... கையும் களவுமாகச் சிக்கவைத்தால் போதும்; சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்போம்.

சின்னச்சின்ன ஆசனங்களை, அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை மெதுவாக விளக்கினார். 36 ஆசனங்களைக் கற்பித்தார் குருஜி. ''எல்லா வயதினரும் எல்லா பாலினரும் செய்யக்கூடியவை'' எனச் சொன்னார்.

அடுத்து வாழ்வின் நிலையாமை குறித்த சிறிய பிரசங்கம். பிறகு, ஓர் ஆண்டு தவப்பலனை அப்படியே தலைக்குள் இறக்கப்போவதாகச் சொன்னார். ஒவ்வொருவரும் அவர் அருகே குனிந்து நிற்க, அவர் தன் கையை தலை மீது வைத்து ஆசீர்வதித்தார். சிலர் அவருடைய கை தலையில் பட்டதும் உடல் சிலிர்த்து மின்சாரம் பாய்ந்ததுபோலத் துடித்தார்கள். சிலர் கோவென அழுதார்கள். என்னுடைய முறைக்காகக் காத்திருந்தேன். ஏறத்தாழ இதை எல்லாம் நம்பிவிடுவேன்போல இருந்தது. ஏதோ தவறு நடக்கிறது... எங்கோ இடித்தது. கண்டுபிடிக்க வேண்டும்.

நான் குருஜியை நெருங்கினேன். புன்முறுவினார். 'என்னையே எடை போடுகிறாயா?’ என்ற கிண்டல் போல இருந்தது.

'’டெல்லி நண்பர் என்ன சொல்வார் எனச் சொல்லட்டுமா?''

மிரட்சியுடன் ''அது வந்து...'' என்றேன்.

குருஜி கண்ணை மூடித் திறந்தார். ''ஹரித்துவாரில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்... அங்கே அப்படி யாரும் இல்லை எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்... எனக்கு முகவரி ஏது? அவசரமாக உனக்கு போன் செய்கிறார். ஓ! உன் போன் லாக்கரில் இருக்கிறதா?''

அவசரமாக, ''ஆமாம்'' என்றேன்.

''எல்லோரும் செல்போனை சைலன்டில் போட்டு வைக்குமாறுதான் சொன்னேன். பரவாயில்லை. வெளியில் போய் நிதானமாக அவருக்குப் பதில் சொன்னால் போதும்.''

அடுத்து வந்த ஒருவர், ''குருஜி எனக்கு பணக் கஷ்டம்'' என்றார். ''நான் பணம் அடிக்கும் எந்திரம் இல்லை'' குருஜி சிரித்தார்.

பணக் கஷ்டம் என்றவர் திடுக்கிட்டு, அவர் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்தார். ''குருஜி என் அக்கவுன்டுக்கு திடீரென நான்கு லட்சம் வந்திருக்கிறது'' என்றார் சந்தோஷமாக.

கூட்டத்தில் இருந்த ஒருவர், அவசரமாக அவருடைய செல்போனை எடுத்துப் பார்த்தார். ''அய்யா நான் இவருக்கு உதவலாம் என நினைத்தேன். என்னுடைய அக்கவுன்டில் இருந்து நான்கு லட்சம் குறைந்திருக்கிறது. உங்கள் மகிமையே மகிமை!'' - குருஜி அதேபோலச் சிரித்தார்.

ஒருவர், ''அய்யா நான் ஒரு பாவம் செய்துவிட்டேன். பரிகாரம் வேண்டும்.''

''நீ செய்த பாவம் பரிகாரம் இல்லாதது. சொந்தச் சகோதரனையே கொன்றிருக்கிறாய்...''

''ஆமாம் குருவே... ஆமாம்... எனக்குப் பரிகாரம் அருளுங்கள்'' அழ ஆரம்பித்தார்.

''பாவத்தைப் பரிகாரத்தால் கரைக்க முடியாது. எப்படி பாவம் செய்தாயோ... அப்படியே புண்ணியம் செய்'' ஆசீர்வதித்தார்.

இந்த ஆளை நம்புவதா, கூடாதா?

என் முறை. என்னுடைய தலையிலும் கைவைத்தார். ஏதோ உள்ளே பாய்ந்தது போல... இல்லை அதிர்வதுபோல... சுகமாக இருந்தது.

ஆசி பெற்ற எல்லோருக்கும் ஓர் அதிர்வு. நோய் என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. பரவசம் பாய்ச்சப்பட்ட நிலை.

முடிந்தது. எல்லோரும் அவரவர் உடையில் வெளியே வந்தோம்.

என் டெல்லி நண்பர் போன் செய்தார். ''குருஜி என யாரும் இங்கே இல்லை. நம்பாதே'' என்றார்.

''குருஜியை நம்பக் கூடாது என நினைப்பதே பாவச் செயல்'' என்றேன்.

''என்ன சொல்கிறாய் நண்பா... நீதானே விசாரிக்கச் சொன்னாய்?''

''யாரைச் சந்தேகப்படுவது என ஒரு வரைமுறை இருக்கிறது.''

மறுமுனையில் நண்பனிடம் பேச்சு இல்லை.

நிற்க. இந்த விநாடியில் இருந்து இந்தக் கதையைச் சொல்லப்போவது கணேசனின் டெல்லி நண்பனாகிய நான். நான் ஒரு டாக்டர்.

நான் உடனே சென்னைக்குத் திரும்பினேன். கணேசன் ஒரு மாதிரி பரிபூரண நிலையில் இருந்தான். 'குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...’ பாடினான். அவனுடைய மனைவி சுமித்ரா, ''அங்க போய் வந்ததில் இருந்து இப்படித்தாங்க இருக்காரு'' என்றாள்.

''எப்படி?''

''எப்பவும் ஏகாந்தமா. குழந்தைக்கு ஃபீஸ் கட்றது... வீட்டு வாடகை தர்றது எல்லாம் எதுக்குன்னு கேட்கிறார். நான் கிட்ட போனா தெய்விகமா சிரிக்கிறார்... நெருங்க மாட்டேங்கிறார்.''

அந்த குருஜிதான் என்னவோ செய்திருக்கிறார்.

ஹோட்டலில் சென்று விசாரித்த போது, அந்த யோகா வகுப்பினர் தந்த லெட்டர் பேடைக் காட்டினர். அப்படி ஒரு முகவரியைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒரு வெட்டவெளி மலையைத்தான் அங்கே பார்க்க முடிந்தது. அந்த முகவரியைத் தேடும்போது, ஒரு போன் வந்தது நினைவுக்கு வந்தது. மறு முனையில் பேசியது யார் எனத் தெரியவில்லை. 'குருஜியைச் சந்தேகிக்காதே’ எனச் சொன்னது நினைவிருக்கிறது. அது சென்னை நம்பர். கணேசன் என்னிடம் குருஜியைப் பற்றி விசாரிக்கச் சொன்னதை அறிந்த யாரோ பேசியிருக்கிறார்கள். யோகா வகுப்பின்போது போன்களை ஓர் இடத்தில் வைக்கச் சொல்லியிருப்பார்கள். கணேசன் கடைசியாக என்னிடம் பேசிய எண்ணைப் பார்த்து, எனக்குப் பேசியிருக்கிறார்கள்.

யோகா வகுப்பில் எதையோ சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள். கணேசன், 'அங்கே எதுவும் சாப்பிடவில்லை... வீணாகச் சந்தேகப்படாதே’ என்கிறான். 'குண்டலினி யோகா... குண்டலினியை உச்சந்தலைக்குக் கொண்டுவந்தார் குருஜி’ என்கிறான்.

லௌகீகங்கள் அற்ற நிலைக்கு வந்துவிட்டான். சுமித்ரா நெருங்கினால், தெய்விகமாகச் சிரிப்பதாகச் சொன்னாள். ஏற்கெனவே சுமித்ராவை நெருங்காமல் இருந்தபோது நான் சில யோசனைகளையும் மாத்திரைகளையும் கணேசனுக்குத் தந்தேன்.

ஏதோ பிரெய்ன் கன்ட்ரோல் புரோகிராம். அன்று கலந்துகொண்ட எல்லோருக்கும் அப்படி ஆனதா? இவனுக்கு மட்டுமா?

மெனக்கெட்டு விசாரித்ததில் இன்னும் ஒரு நபர் அகப்பட்டார். அவரும் கணேசனின் நிலையில்தான் இருந்தார். ஒரே ஒரு வித்தியாசம். இவருக்கு ஒரு விஷயம் கூடுதலாகத் தெரிந்தது. வரப்போகிற உலக யோகா தினத்தில் குருஜி தலைமையில் 5,000 பேர் கலந்துகொள்கிறார்கள். அதற்கு முன்பணமும் வசூலிக்கப்பட்டுவிட்டது.

இந்த இரண்டு பேரை ஆராய்ந்ததில், நோய்கள் எல்லாம் குணமாக்கப்பட்டுவிட்டன என்பதைவிட, நோயை அலட்சியம் செய்யும் போக்குதான் அவர்களிடம் வெளிப்பட்டது. நோயை மதிக்கவிடாமல் செய்யும் யுக்தி.

அவசரமாக 15 ஆயிரம் ரூபாய் கட்டி, யோகா வகுப்புக்குப் பதிவு செய்தேன். அவர்கள் கொடுக்கிற பச்சை தண்ணீரையும் அருந்தாமல் கவனமாக இருக்க வேண்டும்.

உலக யோகா தினம்.

எல்லோரும் காரில் வந்தவர்கள்தான். பெரிய மைதானம் முழுக்க சாமியானா எழுப்பி, எப்படியோ சவுண்டு புரூஃப் ஆக இடத்தை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு சத்தத்தையும் சுத்தமாகத் துடைத்து வைத்த மாதிரி அப்படி ஓர் அமைதி. அங்கி மாட்டிக்கொண்டு வரச் சொன்னார்கள். பொருட்களை லாக்கருக்குள் வைக்கச் சொன்னார்கள். ஒருவனுக்கு பணம் தேவைப்பட்ட போது, இன்னொருவனின் அக்கவுன்டில் இருந்து பணம் பரிமாறப்பட்டது. 'இது ஏதோ தில்லுமுல்லு. அவர்களின் ஆட்கள் இருவர் நடத்துகிற நாடகம். அவங்களோட ஆள் எவனோ ஒருவன் அப்படியாக அவர்கள் இருவருக்கும் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான். நம்பாதே...’

யோகா வகுப்பு முடிந்து, குருஜி ஒவ்வொருத்தரையும் அழைத்து ஆசீர்வதித்தார்.

தலையில் அவர் கை வைத்ததும் எல்லோரும் ஒரு விநாடி சிலிர்த்தார்கள். அது வினோதமாக இருந்தது. குருஜிக்கு எதிரே தரையில் ஒரு சாக்பீஸ் வளையம்போல மெல்லிசாக வரைந்து வைத்திருந்தார்கள். யோகா அன்பர்கள் அதன் நடுவே நிற்கவைக்கப்பட்டார்கள்.

அதில்தான் ஏதோ விஷயம் இருக்கிறது. குருஜி ஆசீர்வதிப்பதற்கு வசதியாக, கை எட்டும் தூரத்தில் அங்கே நிற்க வைக்கப்படுவதாகச் சொல்லப்படுவது ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை. 'டேய் டேய் என்னடா பண்றீங்க?’

நான் மன உறுதியுடன் போய் வளையத்தில் போய் நின்றேன்.

குருஜி சிநேக... சந்தேகப் பார்வையோடு புன்னகைத்தார். தலையில் கையை வைத்தார். உடம்பு அதிர்ந்தது. குலுங்கியது போலவும் இருந்தது.

சாஷ்டாங்கமாக குருஜியின் காலில் விழ இருந்தே... விழவில்லை. சுதாரித்தேன்.

வீட்டுக்கு வந்து சாவகாசமாக யோசித்தபோது, டென்மார்க்கில் நடைபெற இருக்கும் டாக்டர்கள் மாநாடு நினைவுக்கு வந்தது. நானும் அதில் ஒரு சிறப்பு விருந்தினன். அதில் டாக்டர்கள் சமர்ப்பிக்க இருக்கும் பேப்பர்... ஓ மை காட். எல்லாம் பனிக்காற்றின் ஊடே மலைச் சிகரம்போல பிசிறாகத் தெரிய ஆரம்பித்தன.

விவரமாக ஒரு கடிதம் எழுதினேன். பிரதமர், உளவுத்துறை, குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை, இந்திய மருத்துவக் கழகம் எல்லாவற்றுக்கும் ஒரு பிரதி அனுப்பிவைத்தேன்.

'அவசரம்... அவசியம்.

இப்படியான யோகா வகுப்பு இந்தியா முழுக்க உள்ள நகரங்களில் நடந்திருக்கிறது. குருஜியின் முன் அன்பர்கள் நிற்பதற்கான வளையம் ஒரு துத்தநாகத் தகரத்தால் ஆனது. குருஜி ஒரு செம்பு ஜடாரியை வைத்து ஆசீர்வதிக்கிறார். இதில் ஓர் எளிமையான விஞ்ஞானம் இருக்கிறது.

ஒரு பயாலஜி ஆய்வுக்கூடத்தில் தவளையை அறுத்து பாடம் நடத்திய ஆசிரியருக்கு ஷாக் அடித்தது. முதலில் தவளையின் உடம்பில் மின்சாரம் இருப்பதாக நினைத்தார்கள். பிறகுதான் உண்மையைக் கண்டறிந்தார்கள். தவளை வைக்கப்பட்டிருந்த மேடை ஒரு செம்புத் தகட்டால் ஆனது. பாடம் நடத்திய ஆசிரியர் துத்தநாக கத்தியால் தவளையை வெட்டியிருக்கிறார். தவளையின் உடம்பில் உப்புத் திரவம் அதிகமாக இருக்கும். தாமிரத்துக்கும் துத்தநாகத்துக்கும் இடையில் உப்புக் கரைசலை வைத்தால், மின்னோட்டம் ஏற்படும் என்பது ஐந்தாம் வகுப்புப் பாடம். சுவர் கடிகாரங்களுக்கு நாம் பயன்படுத்தும் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்.

அதைத்தான், அந்த அறிவியலைத்தான், கொஞ்சம் அதிகமாக்கி இருக்கிறார்கள். அந்த மின்னோட்டத்தை மூளையின் ஆர்கஸ்மிக் செயல்பாட்டுப் பகுதியோடு தொடர்புபடுத்தியிருக்கிறார்கள். மின் காந்தவியல் மையத்தில் மனிதர்களை நிறுத்தி, 0.8 செகண்டு பரவசத் துடிப்புகளாக... சிற்றின்பத்தையே பேரின்பமாக்கி இருக்கிறார்கள். உடனடியாக சில ஹார்மோன் இம்பேலன்ஸ் இதனால் நிவர்த்தியாவதால், நோய் தீர்ந்த உணர்வும் தற்காலிக உற்சாகமும் ஏற்படும். வெளித் தோற்றத்தில் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது புரியும். இன்னொரு முக்கியமான ஆபத்து, செக்ஸ் ஆர்வம் இன்மை. இது மனித இனத்தையே பாதிக்கும்.

கடந்த யோகா தினத்தில் இந்த அமைப்பினர் நடத்திய இந்தியக் கூட்டங்களில் சுமார் 80 ஆயிரம் பேர் செக்ஸ் ஆர்வம் இழக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது, மேலும் வேகமாக நிகழ்த்தப்படுகிறது. இதை நிவர்த்தி செய்வதற்கான மருந்தை வரும் நவம்பர் மாதம் டென்மார்க்கில் நடக்கும் செக்ஸாலஜிஸ்ட் மாநாட்டில் அறிவிக்க இருக்கிறார்கள். இது சர்வதேச மருந்து நிறுவனங்களின் சதி. விரைந்து நடவடிக்கை எடுக்கவும்.’

இதுதான் நான் அனுப்பிய கடிதத்தின் சாரம்.

பின்குறிப்பு: மனைவியிடம் விலகிப் போக வேண்டியிருக்கிறது. நானும் அந்த மருந்துக்காகத்தான் காத்திருக்கிறேன் நண்பர்களே!