சுந்தர் புதுசாக கார் வாங்கியிருந்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை... காரைப் பார்க்கவும் அதில் ஒரு ரவுண்டு போய்விட்டு வரவும் எங்களை அழைத்திருந்தான். எங்கள் நண்பர்கள் வட்டத்தில் நான்கே பேர்தான். நான், 'சயின்டிஸ்ட் சண்முகம்’, சுந்தர் ஆகிய மூன்று பேரும் அண்ணாசாலையில் ஒரு பிரபலமான வங்கியில் பணிபுரிந்தோம். சண்முகம் எல்லாவற்றுக்கும் அறிவியல் காரணங்களைச் சொல்லக்கூடியவர். அவருக்கு 'சயின்டிஸ்ட் சண்முகம்’ என சுந்தர்தான் பெயர் வைத்தான். எங்களைத் தவிர, பக்கத்தில் இருந்த அரசு அலுவலகத்தில் இருந்து எங்கள் வங்கி கேன்ட்டீனில் காபி சாப்பிட ஓர் இளைஞன் வருவான். அவன் பெயர் திலீபன். நடுத்தர வயதுக்காரர்களான எங்களோடு திலீபன் நட்பு கொள்ள காரணம், எங்களின் கலகலப்புதான். யோகா, சித்தர்கள், அமானுஷ்ய விஷயங்கள் பற்றி எல்லாம் திலீபன் பேசுவான். அடிக்கடி ராமகிருஷ்ண மடத்துக்குப் போவான். சாயங்கால வேளை அங்கே விவேகானந்தரின் 'எழுக துறவியே...’ என்ற பாடலும் தியானமும் சேர்ந்த அனுபவம் எங்களுக்கு அவனால் கிடைத்தது.

நான் போவதற்கு முன்பே மற்ற இரண்டு பேரும் சுந்தர் வீட்டில் ஆஜராகி இருந்தார்கள். வீட்டுக்கு வெளியே புத்தம் புதுசாக ஓர் அழகான கார் நின்றிருந்தது. புதுசாகக் கல்யாணமான பெண்ணின் உடம்பில் ஒரு நிகுநிகுப்பு இருக்குமே, அப்படி வழவழவென நின்றது வண்டி.

நண்பர்கள் காரைச் சுற்றி வந்தார்கள். 'சயின்டிஸ்ட்’ நன்றாகக் கார் ஓட்டக் கூடியவர். ஒருமுறை உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தார்.

''சுந்தர், நீ எப்போ கார் ஓட்டக் கத்துக்கிட்டே?'' எனக் கேட்டேன்.

''எனக்கு கார் ஓட்டத் தெரியாது. இங்கே பக்கத்தில் டிரைவர்கள் கிடைப்பார்கள். வெளியில் போக வர ஒரு டிரைவரை வைத்துக்கொள்ள வேண்டியதுதான்!''

அடை, அவியல், காபி என சுந்தரின் மனைவி விழுந்து விழுந்து உபசரித்தார்.

''காஞ்சிபுரம் வரை போய்ட்டு வருவோமா?'' என்றான் சுந்தர் திடீரென்று.

பாலாற்றில் தண்ணீர் இல்லாவிட்டாலும், ஆற்றை ஒட்டியே செல்லும் நெடுஞ்சாலை எனக்குப் பிடிக்கும். இரண்டு பக்கமும் தோப்பும் துரவுமாக இருக்கும்.

நாங்கள் புறப்படும்போது மப்பும் மந்தாரமுமாக இருந்தது. 'சயின்டிஸ்ட்’ காரின் சாரதி. நான் முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டேன். திலீபனும் சுந்தரும் பின்னால் உட்கார்ந்து கொண்டார்கள்.

காருக்குள் பெட்ரோல் வாசனை அடித்தது. உள்ளே தொங்கவிட்டிருந்த மல்லிகைச் சரத்தின் வாசனை ரம்மியமாக இருந்தது. கார் வழுக்கிக்கொண்டு போயிற்று.

ஓடும் காரில் உட்கார்ந்துகொண்டு உலகைப் பார்க்கும்போது, குழந்தையாக மாறிவிடுகிறோம். குழந்தை, வாழ்க்கையை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கிறது. அதில் பங்கெடுத்துக்கொள்ள முயல்வது இல்லை. மனிதனின் எல்லா துயரங்களுக்கும் காரணம், இப்படி எல்லாவற்றையும் தூக்கித் தலையில் போட்டுக்கொள்வதுதான்! ஒரு காரில் சவாரி கிடைத்தால், மனசு தத்துவம் பேச ஆரம்பித்துவிடுகிறது. சிரித்துக்கொண்டேன்.

அப்போதுதான் கவனித்தேன். மப்பும் மந்தாரமுமாக இருந்த வானம் இருட்டிக்கொண்டு வந்தது. ஏ.சி-யை நிறுத்திவிட்டு கார் ஜன்னலைத் திறந்தேன். மண் வாசனையுடன் காற்று அள்ளிக்கொண்டு போயிற்று. சிலீரென புழுதிப் புயல். வானம் கருங்'கும்’மென ஆகிவிட்டது. பழைய சீவரத்தைத் தாண்டிவிட்டோம்.

''இன்னும் அரை மணி நேரத்தில் காஞ்சிபுரம் போய்விடலாம்'' என்றார் சயின்டிஸ்ட். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் சடசடவென மழைத் துளிகள். பயங்கர இடிச் சத்தம். யானைக் கூட்டத்தின் முதுகில் சவுக்கால் அடித்த மாதிரி மேகக் கூட்டத்தின் நடுவே மின்னல் வெட்டுகள்.

பெருமழை பிடித்துக்கொண்டு விட்டது.

''ஓ காட்!'' என்றார் சயின்டிஸ்ட்.

''என்ன சார், என்ன ஆச்சு?''

''வைப்பர் வேலை செய்யலை!''

''இப்ப என்ன பண்றது?''

''ரோட்டின் ரெண்டு பக்கமும் மரங்களா இருக்கு. இங்கே காரை நிறுத்த வேணாம்!''

மழைக் கம்பிகள் காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் பிரகாசித்தன. மழை, காரின் முன் கண்ணாடியில் பளார் பளாரென அறைந்தது.

''அதோ... அங்கே பாருங்கள்!''

ராட்சஸ பல்பு ஒன்று திடீரென எரிந்து அணைந்ததுபோல வெட்டிய மின்னலில், அந்தக் காட்சி பளீரெனத் தெரிந்தது.

சற்றுத் தொலைவில் நெடுஞ்சாலை ஓரமாக ஒரு கிளைச்சாலை. அந்தச் சாலையின் முடிவில் ஒரு பங்களா. விசித்திரமாக இருந்தது அந்தக் கட்டடம். போர்ட்டிகோவுடன் கூடிய பங்களா.

''இப்படி சர்க்குலர் மாடலில் நம் ஊரில் யாரும் பங்களா கட்டுவது இல்லை. இது பிரிட்டிஷ் பாணி...'' என்றார் சயின்டிஸ்ட்.

''காரை பேசாமல் அந்த போர்ட்டிகோவில் நிறுத்திவிட்டு, மழை நின்றதும் புறப்படலாம்'' என்றார் சுந்தர்.

கார் திரும்பியது. சேறும் சகதியுமாக இருந்த மண்சாலையில் உறுமியபடி நுழைந்தது.

இப்போது காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் சாலையின் முடிவில் பங்களா தெரிந்தது.

அடுத்த மின்னல் வெட்டு.

எங்களைச் சுற்றி இருண்டிருந்த உலகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு மறைந்தது.

''அதோ பாருங்கள்'' எனக் கத்தினார் சயின்டிஸ்ட்.

காரின் இருபுறமும் பிரமாண்டமான மரங்கள். மழையில் பேயாட்டம் போட்ட ராட்சசக் கொடிகள்.

''ரோட்டில் இருந்து பார்க்கும்போது இவ்வளவு பெரிய காடு தெரியலையே!'' என்றார் சயின்டிஸ்ட்.

''நாம பங்களாவைத்தானே பார்த்தோம்.''

''ஆமாம்'' என மெள்ள முணுமுணுத்தார் சயின்டிஸ்ட். அவர் முகத்தில் ஏன் இத்தனை கலவரம் எனத் தெரியவில்லை.

''சார்... வாலாஜாபாத் வந்து விட்டதா?'' எனப் பரிதாபமாகக் கேட்டான் சுந்தர்.

''வாலாஜாபாத்துக்கு வெளியேதான் இருக்கிறோம். நான் போர்டு பார்த்தேன்... ஆனால், எனக்குத் தெரிஞ்சு வாலாஜாபாத் இடது பக்கம் இப்படி ஓர் இருண்ட கானகத்தை நான் பார்த்ததே இல்லை. என்னவோ வேற்றுக்கிரகத்துக்கு வந்துவிட்ட மாதிரி இருக்கு. அதோ பாருங்கள்... அந்த மாதிரி ராட்சசக் கொடிகள்; பெரிய அகன்ற இலைகள்; நூறு வருஷத்துக்கு முந்தைய தாவர ஜாதி... இப்போது அற்றுப்போய்விட்டது. எப்படி முளைத்தது திடீரென்று?

எங்கள் காரின் மீது இடி விழுந்தது போல் கிடுகிடுத்தது. கண் எதிரே ஒரு மரம் பற்றி எரிந்தது.

''வேண்டாம்... மரத்தின் கீழ் நிற்காதீர்கள். போய்க்கொண்டே இருங்கள்...''

இடி, மின்னல், மழை. இப்படி ஒரு பயங்கரமான ஊழித் தாண்டவத்தை நான் பார்த்ததே இல்லை.

அவ்வளவுதான்... ஃபுல் ஸ்டாப். எங்கள் கதை முடிந்தது. 'புது காரில் சென்ற நண்பர்கள்...’ என நாளை பேப்பரில் வரும். நாளை என்ற ஒன்று வந்தால்... வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

மறுபடி மின்னல். இந்த முறை ஓர் அதிர்ச்சியைத் தந்து மறைந்தது. மின்னல் வெளிச்சத்தில் சற்று முன் சாலையின் முடிவில் காட்சி தந்த பங்களாவைக் காணோம்!!

''பதினைந்து நிமிஷம் இருக்குமா, இந்த மண் ரஸ்தாவில் திரும்பி?''

யாரிடமும் பதில் இல்லை.

கார் மட்டும் சென்றுகொண்டிருந்தது.

''நாம் வழி தவறிவிட்டோமா?'' என்றேன் மறுபடியும்.

என் கேள்விக்குப் பதில் அளிப்பது போல முன்னிலும் பயங்கரமான மரங்கள் வழிமறித்தன. மிகப் பெரும் புதர்கள்; காட்டுக்கொடிகள்.

இப்போது சாலையாகவே இல்லை. இதற்கு முன் வாகனங்கள் சென்ற அடையாளமே இல்லை. கற்கள், பள்ளங்கள், சின்னச் சின்னப் பாறைகள். அவற்றில் ஏறி இறங்கி பயங்கரமாகக் குலுங்கியது புது கார். சாலை போய்க்கொண்டே இருந்தது. சட்டென்று ஒரு திருப்பம்.

கார் திரும்பியது. காரின் ஹெட்லைட் வெளிச்சத்தில் அதோ அந்த பங்களா!

கார் சீறிக்கொண்டு போர்ட்டிகோவில் போய் நின்றது. காரின் ஹெட் லைட்டுகளை அணைத்துவிட்டால், எங்களை காரினுள் விழுங்கக் காத்திருந்தது.

பங்களாவின் கதவுகள் விரியத் திறந்து கிடந்தன.

திடீரென நடுமுதுகில் சாட்டையைச் சொடுக்கியதுபோல ஒரு கூக்குரல் பங்களாவுக்கு உள்ளேயிருந்து...

அது ஒரு பெண்ணின் அலறல்.

அலறலா அது? அமானுஷ்ய ஊளை!

பங்களாவுக்குச் சற்றுத் தள்ளி இருந்தது அந்தச் சிறிய ஓட்டுக் கட்டடம். அதில் எல்லோரும் ஓடிப்போய் அடைக்கலம் ஆனோம்!

அங்கு நின்றபடி பங்களாவை உற்றுக் கவனித்தோம். பயம், அடிவயிற்றைப் பிசைந்தது.

என்ன நடக்கிறது என கவனிக்க, காரின் ஹெட்லைட்டை அணைக்காமல் விட்டு வந்திருந்தோம். மஞ்சள் வெளிச்சத்தில் பங்களாவின் உள்ளே இருந்து ஒரு பெண் தலைவிரி கோலமாக ஓடிவருவது தெரிந்தது. ஐயோ, என்ன அழகு!

சற்றுத் தொலைவில் தெரிந்த கானகம் நோக்கி அவள் ஓடினாள். மறுபடி அவளிடம் இருந்து ஓர் அலறல்.

பங்களாவின் உள்ளே மரத்தாலான மாடிப்படிகளில் தடதடவென யாரோ ஓடிவரும் சத்தம்.

இப்போது மழை நின்றுவிட்டது.

அதேசமயம், வானத்துக் கருமேகங்களைக் கலைத்து வெளிப்பட்டது பூரண சந்திரன்!

இதுவரை கார் இருளில் மூழ்கிக் கிடந்த அந்தப் பகுதி முழுவதும் நிலா வெளிச்சத்தில் பட்டப்பகல்போல் பளீரெனத் தெரிந்தது.

பால்கனியில் ஓர் உருவம் வந்து நின்றது. அந்தக் கால வெள்ளைக்கார ராணுவத் தளபதிபோலத் தோற்றம். அந்த வெள்ளைக்காரன் நல்ல குடி போதையில் இருந்தான்.

பால்கனியில் நின்றபடி கீழே நோக்கினான் அவன். சற்றுத் தொலைவில் ஓடிக்கொண்டிருந்த பெண்ணை நோக்கிக் கூக்குரலிட்டான்.

''மினாஷே! ஹே, மினாஷே!''

அந்தப் பெண் திரும்பிப் பார்க்கவில்லை.

அடுத்த நிமிஷம் சட்டென பால்கனியில் இருந்து சடாரெனத் தாவிக் குதித்தான் அந்த வெள்ளைக்காரன். கீழே சிமென்ட் தரை பாவிய இடத்தில் கால்பரப்பி ரத்த வெள்ளத்தில் கிடந்தது அவன் உடல். அவனுடைய வெள்ளை வெளேரென்ற ராணுவச் சீருடையில் ரத்தச் சகதி.

அவ்வளவுதான். நிலவை மறுபடி மேகக் கூட்டம் மறைத்துவிட்டது. இப்போது மங்கலான நிலா வெளிச்சத்தில் நிழல் பிம்பங்களாகிவிட்டன எல்லாமும்.

எங்கிருந்தோ நரிகளின் ஊளை. பங்களாவில் இருந்து ஒரே சமயத்தில் பத்துப் பதினைந்து வெளவால்கள் சிறகடித்துப் பறந்தன. அவ்வளவு பெரிய வெளவால்களை நான் பார்த்தது இல்லை. ஏ... அப்பா! என்ன ஒரு கீச்சிடல் அவற்றிடம் இருந்து!

எல்லோரும் ஒரே ஓட்டமாக அந்த வெள்ளைக்காரன் கிடந்த இடம் நோக்கி ஓடினோம்.

அங்கே -

யாருமே இல்லை! எங்கள் பார்வைக்குத் தப்பி அந்த உடலை யார் எடுத்துப் போயிருக்க முடியும்? அந்தப் பெண் என்ன ஆனாள்!

''மழை நின்றுவிட்டது. காரை எடுங்கள்'' எனக் கத்தினான் சுந்தர்.

நாங்கள் ஓடிப்போய் காரில் ஏறிக் கொண்டோம்.

கார் புறப்பட்டதும்தான் பெருமூச்சு விட்டோம்.

சயின்ட்டிஸ்டின் முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. இவ்வளவு களேபரத்துக்கு இடையிலும் எதுவும் பேசாமல் வந்தது திலீபன் மட்டும்தான்.

வண்டி திரும்பியதும் எங்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.

வழியில் நாங்கள் பார்த்த மரங்கள் செடி கொடிகள் எதுவும் இல்லை. ஒரே பொட்டல் வெளி. அதில் நேராகச் செல்லும் மண் ரஸ்தா. ஐந்தே நிமிடத்தில் அதைக் கடந்து நெடுஞ்சாலைக்கு வந்துவிட்டோம்.

வண்டி வேகம் எடுத்தது.

காஞ்சிபுரத்தை அடைந்தபோது, இரவு ஒரு மணிக்கு மேல் ஆகியிருந்தது. அதாவது, ஏறத்தாழ ஐந்து மணி நேரம் நாங்கள் வாலாஜாபாத்தில் இருந்திருக்கிறோம். இது மற்றொரு நம்ப முடியாத மர்ம முடிச்சு.

அந்த நள்ளிரவில் ஒரு விடுதியில் இடம் கிடைத்தது. காரை பார்க் செய்துவிட்டு, படுக்கையில் போய் விழுந்தோம்.

மறுநாள் காலை 8 மணிக்குத்தான் எழுந்தோம்.

கேன்ட்டீனில் மௌனமாக காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தோம்.

'சயின்டிஸ்ட்’ யாரோடோ போனில் பேசிவிட்டு வந்தார்.

''ஒரு நண்பரை வரச் சொல்லி இருக்கிறேன். இந்த அனுபவத்துக்கு எல்லாம் அவரிடம் விடை கிடைக்குமா பார்க்கலாம்!''

நண்பர் வந்துவிட்டார். சிவப்பாக உயரமாக இருந்தார். மெள்ளச் சிரித்தபடி பேசினார்.

''நான் புனேயில் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணிபுரிகிறேன். என் சொந்த ஊர் வாலாஜாபாத். நடந்ததை எல்லாம் நண்பர் சொன்னார்.''

''நடந்தது எல்லாம் உண்மையில் நடந்ததா என்றே தெரியவில்லையே...'' என்றான் சுந்தர்.

''இந்த ஊரைப் பற்றி எந்த வரலாறும் தெரியாத உங்களுக்கு, அந்த வரலாற்றோடு சம்பந்தப்பட்ட அனுபவம் கிடைத்திருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது...''

''என்ன சொல்கிறீர்கள்?''

''ஆமாம். பல வருஷங்களுக்கு முன்னால் கிழக்கு இந்தியக் கும்பினியார் காலத்தில் இருந்தே இங்கே வாலாஜாபாதில் ஆங்கிலேயர் முகாம் அமைத்து, ஆயிரக்கணக்கான ஆங்கிலச் சிப்பாய்களைத் தங்க வைத்திருந்தார்கள். நீங்கள் பார்த்த ரவுண்டு பங்களா, ராணுவத் தளபதிக்காகக் கட்டப்பட்டது. அதில் ஒரு சம்பவம் நடந்ததாகச் சொல்வார்கள்.

''கேப்டன் துரை குதிரை மீது ஏறி ஊரைச் சுற்றிப் பார்த்துவரும்போது, அங்கே பாலாற்றங்கரையில் குளித்துக் கொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்து அவள் மீது மையல் கொண்டுவிடுகிறான். அவளைச் சந்திக்க தினம்தோறும் வருகிறான். அவளுக்கும் அவன் மீது ஈர்ப்பு உண்டாகிவிடுகிறது. இந்தச் சேதி கும்பினிச் சிப்பாய்களுக்கும் ஊராருக்கும் தெரிந்துவிடுகிறது. அந்தச் சமயத்தில் முகாம்களில் தங்கி இருந்த கும்பினிச் சிப்பாய்கள், கொத்துக் கொத்தாகச் சாக ஆரம்பிக்கிறார்கள். வாந்தி பேதி மாதிரி ஒரு கொள்ளை நோய்; எந்த மருந்துக்கும் கட்டுப்படாத பயங்கர நோய். ஊர் ஜனங்கள் யாருக்கும் வராத இந்த நோய், ஆங்கிலச் சிப்பாய்களை மட்டும் தாக்குவானேன்! தினம்தோறும் செத்துவிழும் சிப்பாய்களை கோரியில் புதைத்து, சிலுவை நட்டு, கண்ணுக்கு எட்டிய தூரம் சிலுவை வரிசைகள்! மரண பீதி! சிப்பாய்களின் சந்தேகப் பார்வை மீனாட்சி மீது! கேப்டன் துரைக்கு காதல், கண்ணை மறைத்துவிட்டதாம்! மீனாட்சியின் தகப்பன் காவடிக் கூலிப்படையில் வேலை பார்ப்பவன்!

இந்த காவடிக் கூலிப்படை, பாலாற்றில் இருந்து ஆங்கில சிப்பாய்களுக்குத் தண்ணீர் கொண்டுவர ஏற்படுத்தப்பட்டது. 'அந்தத் தண்ணீரில் மீனாட்சி பச்சிலையைக் கலந்துவிடுகிறாளாம்... சுதேசிகளின் சதி. மீனாட்சி அவர்களின் கையாள். கேப்டன் துரையைக் கைக்குள் போட்டுக்கொண்டு அவள் செய்யும் காரியம் இது’ என சென்னை கோட்டைக்குச் செய்தி போகிறது. கேப்டன் துரை உடனே முகாமைக் காலிசெய்து, படையணிகளோடு வந்தவாசிக்குச் செல்லுமாறு தாக்கீது வருகிறது. கேப்டன் துரை, மீனாட்சியை ஒருநாள் குதிரையில் தூக்கிக்கொண்டு ரவுண்டு பங்களாவுக்குக் கொண்டுவந்து விடுகிறான். ஊரார் ரவுண்டு பங்களாவை முற்றுகையிடுகின்றனர். பால்கனியில் மீனாட்சியே தோன்றி, தான் விரும்பித்தான் கேப்டன் துரையுடன் வந்துவிட்டதாகச் சத்தியம் செய்கிறாள். கலவரக்காரர்கள் கலைகிறார்கள். ஆனாலும், ரவுண்டு பங்களாவைச் சுற்றி பகை நாகங்கள் நாக்கைச் சுழற்றிச் சுழல்கின்றன. படையினர் வந்தவாசிக்குச் சென்ற பின்னும் கேப்டன் துரை மீனாட்சியுடன் ரவுண்டு பங்களாவிலேயே தங்கிவிடுகிறான்.

ஒரு நாள் காலை ரவுண்டு பங்களா எதிரில் இருந்த புளியமரத்தில் மீனாட்சியின் உடல் தூக்கில் தொங்குகிறது. கும்பினிச் சிப்பாய்கள் பழி தீர்த்துக்கொண்டுவிட்டார்கள். மீனாட்சியின் சாவுக்குப் பிறகும், கேப்டன் துரை ரவுண்டு பங்களாவை விட்டுச் செல்லப் பிடிக்காமல், மீனாட்சியின் நினைவாக அங்கேயே தங்கிவிடுகிறான். குடிப்பது, மீனாட்சியை அழைத்துக் கூக்குரலிடுவது... ஒரு நாள் பௌர்ணமி அன்று, மீனாட்சி அவன் கண் எதிரே நடந்துசெல்வதாகக் கூவியபடி ஓடிவந்து பால்கனியில் இருந்து கீழே குதித்து உயிர்விடுகிறான். அந்த பங்களாவில் பௌர்ணமி சமயத்தில் பெண்ணின் சிரிப்புச் சத்தமும், கேப்டன் துரையின் கூச்சலும் கேட்பதாக என் தாத்தா சொல்வது உண்டு...''

''இந்தக் கதை எல்லாம் தெரியாமலேயே நாங்கள் எப்படி அந்தக் காட்சிகளைப் பார்க்க முடிந்தது?''

பேராசிரியர் யோசனையில் மூழ்கியவராகச் சொன்னார்:

''பாரலாக்ஸ் யுனிவர்ஸ் என்றால் தெரியுமா? நான் படித்திருக்கிறேன். உக்கிரமான சில சம்பவங்கள் நடக்கும்போது, கடைசி நிமிடங்கள் திரும்பத் திரும்ப காலவெளியில் ரிபீட் ஆகும். அந்த டைம் காப்சூலுக்குள் நீங்கள் போயிருக்கிறீர்கள்... இதை அறிவியல் ரீதியாக விளக்க முடியும். ஆனால், அது வேறு அறிவியல். ஆனால், ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். டைம் காப்ஸ்யூலுக்குள் (Time Capsule) உங்களைச் செலுத்த யாரோ முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்...''

பேராசிரியர் பேசுவதற்குச் சும்மா தலையாட்டி வைத்தோம். பகுத்தறிவுக்கு எட்டாத சில சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழத்தான் செய்கின்றன. இதைப் பகுத்தறிவின் துணைகொண்டு ஆராய்வது அபத்தம் அல்லவா?

திலீபனின் மௌனம்தான் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அதற்குப் பிறகு நாங்கள் திலீபனைப் பார்க்கவில்லை. சுந்தர், இங்கிலீஷ் நாவலில் இருந்து தலைநிமிர்த்திச் சொன்னான்:

''பையன் பயந்துட்டான்போல!''

அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

ஒரு வேலையாக காஞ்சிபுரம் வரை போக வேண்டி வந்தது. முகூர்த்த நாள் போலும்.

பேருந்தில் கூட்டம் முண்டியடித்தது. வாலாஜாபாத்தை நெருங்கியதும் வயிறு பகீரென்றது. 'என்ன ஓர் அதிபயங்கர அனுபவம்!''

திடீரென்று கண்டக்டரின் விசில் சத்தம் பலமாகக் கேட்டது. ''இங்கே எல்லாம் பஸ் நிக்காது சார். அதுக்கு நீங்க டவுனு வண்டீலதான் வரணும்...'' என அவர் கத்துவது கேட்டது.

எட்டிப் பார்த்தேன். நாங்கள் திரும்பிய கிளைச் சாலை. கண்ணுக்கெட்டிய தூரம் பொட்டல் வெளி.

பஸ்ஸில் இருந்து இறங்கிய நபரின் முதுகுப்புறம் தெரிந்தது. பஸ் புறப்பட்டு விட்டது. இப்போது அந்த நபரை நன்றாகப் பார்க்க முடிந்தது.

கிளைச் சாலையில் இறங்கி வேகம் வேகமாக நடந்துகொண்டிருந்தான் திலீபன்!

காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ள வாலாஜாபாத்தில் ரவுண்டு பங்களாவும், ஆங்கிலச் சிப்பாய்கள் புதைக்கப்பட்ட கோரியும் இன்றும் உள்ளன. கேப்டன் துரை ஒரு தமிழ்ப் பெண்ணை, குதிரையில் அவள் விருப்பப்படி கொண்டுசென்று திருமணம் செய்துகொண்டு ரவுண்டு பங்களாவில் வாழ்ந்ததும், அவள் இறந்ததும் அவள் நினைவாகவே குடித்து மரித்ததும் வரலாற்றுச் செய்திகள். அதன் அடிப்படையில் புனையப்பட்ட கற்பனைக் கதை இது!