1.

பிறர் தயவில்லாமல்

பெரிதாக வாழ்ந்தவர்கள்

எவருமில்லை

பிணங்க, பிதற்ற,

பிடிவாதம்கொள்ள,

பெருமைப்பட,

யாரோ ஒருவர் நமக்கு

எப்போதும் தேவைப்படுகிறார்

2.

ஒருவருடைய தயவு

தேவைப்படும் வரை

அவரை நாமோ அல்லது

அவர் நம்மையோ

சொல்லிக்கொள்கிறோம்

நேசிப்பதாக

3.

பாதகர்களோடும்

பழகத்தான் நேர்கிறது

அவர்களை நாம்

பகைக்கப் பயப்படுகிறோம்

விமர்சிக்கவோ

வெறுப்பை உமிழவோ

எந்தச் சந்தர்ப்பத்திலும்

எண்ணுவதில்லை

அவர்களை நெருக்கத்திலேயே

வைத்திருக்கிறோம்

என்றோ ஒருநாள் நம்முடைய

எதிரிகளைக் கொல்வதற்கு

4.

கூடிக் குடிக்கையில்

கொண்டாடிச் சிரிக்கையில்

நாடித் தளும்பேற

நக்கலடிக்கையில்

யாரோ ஒருவருடைய

அந்தரங்கத்துக்குள் பிரவேசிக்கிறது

நம்முடைய நாக்கு

இருப்பதைப் பகிரவும்

இல்லாததை நுகரவும்

ஏங்குகிற மனசுக்கு

ஒழுக்கமென்பது

ஒப்புக்கு

5.

ஊதியத்துக்காக

எந்த வேலையும் சரியெனில்

கூலிப்படையை ஏன் பார்க்கிறோம்

குற்றமாக?

உகந்த உணவென்றால்

உபாதையில்லை

சரியானவனைப் பாதிப்பதில்லை

சகவாசதோஷம்

கட்டுக்குள் வாழ்வதெனில்

கவலைதான்

6.

விருப்பங்களை

வியாபாரமாக்கிய பின்

சில்லறைகளை உறவுகளாகவும்

சிந்தனைகளைப் பிரிவுகளாகவும்

கருதுவதில் என்ன தவறு?

வாங்கிக் குவிப்பதே

வாழ்க்கை

ஏங்கித் தவிப்பதே

யதார்த்தம்

7.

எங்கோ இருப்பவன் மேல்

அடி விழுந்தால் என்ன

இடி விழுந்தால் என்ன என்று

இருக்க முடியுமா

கடந்து போங்கள்

கவலையை விடுங்கள்

எல்லாம் விதிப்பயன்

என்ன செய்வது

எங்கோ இருப்பவன்தானே

உங்களுக்கு என்ன வந்தது

இப்படி நிறையச் சொல்கிறார்கள்

சிரிப்பு வருகிறது

எங்கோ இருப்பவன்தான்

இவர்களுக்கு வழங்குகிறான்

அருளையும் ஆசியையும்

8.

வரிசையில் நிற்கையில்

நம்மை முந்துவதற்கு ஒருவரை

அனுமதிக்கிறோமா

எனக்குப் பிறகே

எல்லோருமென்ற

பெருமிதம் தேவைப்படுகிறது

வாழ

9.

வாசலோடு சிலரை

வரவேற்பறையோடு சிலரை

கூடத்தில் சிலரை

கொல்லை வரை சிலரை

ஆள் பார்த்தே

அரும்புகிறது அன்பு

அவசியம் ஏற்படாத வரை

நம்முடைய இதயங்கள்

யாருக்காகவும் எதற்காகவும்

திறப்பதே இல்லை

10.

நடந்ததைப் பேச

நடப்பதை ஆலோசிக்க

ஒருவரைத் தேடுகிறபோது

அவருடைய நேசத்தின்

அளவு புரிகிறது

நெருக்கத்தில் விலகியும்

தயக்கத்தில் பழகியும்

முடியவே முடியாத உறவைத்தான்

காதலென்று சொல்கிறோமா!

1.

பிறர் தயவில்லாமல்

பெரிதாக வாழ்ந்தவர்கள்

எவருமில்லை

பிணங்க, பிதற்ற,

பிடிவாதம்கொள்ள,

பெருமைப்பட,

யாரோ ஒருவர் நமக்கு

எப்போதும் தேவைப்படுகிறார்

2.

ஒருவருடைய தயவு

தேவைப்படும் வரை

அவரை நாமோ அல்லது

அவர் நம்மையோ

சொல்லிக்கொள்கிறோம்

நேசிப்பதாக

3.

பாதகர்களோடும்

பழகத்தான் நேர்கிறது

அவர்களை நாம்

பகைக்கப் பயப்படுகிறோம்

விமர்சிக்கவோ

வெறுப்பை உமிழவோ

எந்தச் சந்தர்ப்பத்திலும்

எண்ணுவதில்லை

அவர்களை நெருக்கத்திலேயே

வைத்திருக்கிறோம்

என்றோ ஒருநாள் நம்முடைய

எதிரிகளைக் கொல்வதற்கு

4.

கூடிக் குடிக்கையில்

கொண்டாடிச் சிரிக்கையில்

நாடித் தளும்பேற

நக்கலடிக்கையில்

யாரோ ஒருவருடைய

அந்தரங்கத்துக்குள் பிரவேசிக்கிறது

நம்முடைய நாக்கு

இருப்பதைப் பகிரவும்

இல்லாததை நுகரவும்

ஏங்குகிற மனசுக்கு

ஒழுக்கமென்பது

ஒப்புக்கு

5.

ஊதியத்துக்காக

எந்த வேலையும் சரியெனில்

கூலிப்படையை ஏன் பார்க்கிறோம்

குற்றமாக?

உகந்த உணவென்றால்

உபாதையில்லை

சரியானவனைப் பாதிப்பதில்லை

சகவாசதோஷம்

கட்டுக்குள் வாழ்வதெனில்

கவலைதான்

6.

விருப்பங்களை

வியாபாரமாக்கிய பின்

சில்லறைகளை உறவுகளாகவும்

சிந்தனைகளைப் பிரிவுகளாகவும்

கருதுவதில் என்ன தவறு?

வாங்கிக் குவிப்பதே

வாழ்க்கை

ஏங்கித் தவிப்பதே

யதார்த்தம்

7.

எங்கோ இருப்பவன் மேல்

அடி விழுந்தால் என்ன

இடி விழுந்தால் என்ன என்று

இருக்க முடியுமா

கடந்து போங்கள்

கவலையை விடுங்கள்

எல்லாம் விதிப்பயன்

என்ன செய்வது

எங்கோ இருப்பவன்தானே

உங்களுக்கு என்ன வந்தது

இப்படி நிறையச் சொல்கிறார்கள்

சிரிப்பு வருகிறது

எங்கோ இருப்பவன்தான்

இவர்களுக்கு வழங்குகிறான்

அருளையும் ஆசியையும்

8.

வரிசையில் நிற்கையில்

நம்மை முந்துவதற்கு ஒருவரை

அனுமதிக்கிறோமா

எனக்குப் பிறகே

எல்லோருமென்ற

பெருமிதம் தேவைப்படுகிறது

வாழ

9.

வாசலோடு சிலரை

வரவேற்பறையோடு சிலரை

கூடத்தில் சிலரை

கொல்லை வரை சிலரை

ஆள் பார்த்தே

அரும்புகிறது அன்பு

அவசியம் ஏற்படாத வரை

நம்முடைய இதயங்கள்

யாருக்காகவும் எதற்காகவும்

திறப்பதே இல்லை

10.

நடந்ததைப் பேச

நடப்பதை ஆலோசிக்க

ஒருவரைத் தேடுகிறபோது

அவருடைய நேசத்தின்

அளவு புரிகிறது

நெருக்கத்தில் விலகியும்

தயக்கத்தில் பழகியும்

முடியவே முடியாத உறவைத்தான்

காதலென்று சொல்கிறோமா!