பதினோரு கூழாங்கற்களை

அடுக்கிவைத்த உயரத்தில் இருந்தாள்

அச்சிறுமி.

சிவனின் மூன்றாம் கண்

மெள்ளத் திறப்பதுபோல

சிரிக்கிறாள் பிச்சை இடுபவரைப் பார்த்து.

பாத்திரத்தின் விளிம்பில் வந்தமரும்

வண்ணத்துப்பூச்சிக்காக

கொஞ்ச நேரம் பிச்சை கேட்காமல் இருக்கிறாள்.

அது பறந்துபோகும் வரை

அவள் பறந்துகொள்கிறாள்.

பறந்துபோனதும்

சில்லறைகளை ஜேப்பில்

நிரப்பிக்கொண்டு நடக்கத் தொடங்குகிறாள்.

பட்டாம்பூச்சி விற்பவனிடம்

சில்லறை எல்லாம் தந்து

நிறைய வாங்கி நிரப்பிக்கொண்டு செல்கிறாள்.

ஆறு மழைத்துளிகளை அடுக்கிவைத்த

உயரத்தில் தவழும்

தன் தங்கையிடம் எல்லா

பட்டாம்பூச்சிகளையும் பறக்கவிட்டுக் காட்டுகிறாள்.

அப்போது அங்கு பெய்யத் தொடங்கிய மழையில்

அமைதிகொண்டன

எல்லாம் எல்லாம்.

பதினோரு கூழாங்கற்களை

அடுக்கிவைத்த உயரத்தில் இருந்தாள்

அச்சிறுமி.

சிவனின் மூன்றாம் கண்

மெள்ளத் திறப்பதுபோல

சிரிக்கிறாள் பிச்சை இடுபவரைப் பார்த்து.

பாத்திரத்தின் விளிம்பில் வந்தமரும்

வண்ணத்துப்பூச்சிக்காக

கொஞ்ச நேரம் பிச்சை கேட்காமல் இருக்கிறாள்.

அது பறந்துபோகும் வரை

அவள் பறந்துகொள்கிறாள்.

பறந்துபோனதும்

சில்லறைகளை ஜேப்பில்

நிரப்பிக்கொண்டு நடக்கத் தொடங்குகிறாள்.

பட்டாம்பூச்சி விற்பவனிடம்

சில்லறை எல்லாம் தந்து

நிறைய வாங்கி நிரப்பிக்கொண்டு செல்கிறாள்.

ஆறு மழைத்துளிகளை அடுக்கிவைத்த

உயரத்தில் தவழும்

தன் தங்கையிடம் எல்லா

பட்டாம்பூச்சிகளையும் பறக்கவிட்டுக் காட்டுகிறாள்.

அப்போது அங்கு பெய்யத் தொடங்கிய மழையில்

அமைதிகொண்டன

எல்லாம் எல்லாம்.