Published:Updated:

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

10 செகண்ட் கதைகள்
10 செகண்ட் கதைகள்

வரலாறு

ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பார்க்க விரும்பி, டைம் மெஷினில் பயணித்து இறங்கிய பி.ஏ வரலாறு படிக்கும் சரவணனின் நெஞ்சை, குறிபார்த்துக்கொண்டிருந்தது ஜெனரல் டயரின் துப்பாக்கி!

- கே.லக்ஷ்மணன்

10 செகண்ட் கதைகள்

உடன்பிறப்பு

அவன்: உனக்கு மொத்தம்

எத்தனை அண்ணன்?

அவள்: உன்னோடு சேர்த்து மூணு!

- சக்திபிரியா

10 செகண்ட் கதைகள்

சாவி

''தம்பி... இந்த

ஸ்மார்ட்போன் லாக் ஆகிடுச்சு. எப்படி ரிலீஸ் பண்றதுனு தெரியலையேப்பா'' என, பேரனிடம் கேட்டுக்கொண்டிருந்தார் பிரபல பூட்டு வியாபாரி 'திண்டுக்கல்’ தனபாலன்!

- எஸ்கா

10 செகண்ட் கதைகள்

தவணை

வாங்கும் சம்பளத்தை EMI கட்டியே காலியாக்கும் நண்பனிடம்  10 செகண்ட் கதை ஒன்றை சொல்லச் சொன்னேன். 'ரெண்டு செகண்ட் கதை அஞ்சு சொல்லட்டுமா?’ என்கிறான்!

  - அஜித்

10 செகண்ட் கதைகள்

நிம்மதி

சோதனையில் அந்தப் பையில் வெடிகுண்டு இல்லை எனத் தெரிந்ததும், நிம்மதிப் பெருமூச்சுவிட்ட இன்ஸ்பெக்டர் பையைத் திறந்தார். உள்ளே இருந்த ஒரு பெண்ணின் தலையின் கண்கள் அவரை வெறித்துப் பார்த்தன!

- பக்ருதீன்அலி அகமது

10 செகண்ட் கதைகள்

என்ன ஆச்சு?

ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது, ஊர் கூடியதுபோல. அனைவரும் 'ஜே.ஜே’ என முழங்கிக் கொண்டிருந்தனர்... கலகலவென கூத்தும் கும்மாளமும்தான். சட்டென ஓர் அமைதி. ஒவ்வொருவராக வெளியேற, இப்போது நான் மட்டும் என்ன செய்வது என அறியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்... அந்த வாட்ஸ்அப் குரூப்பில்!

- முருகேஸ்வரி ரவி

10 செகண்ட் கதைகள்

விடுமுறை

''அம்மா... வாரம் பூரா ஆபீஸ் வேலை. வீக் எண்டுக்கு நானும் புவனாவும் பிக்னிக் போறோம். சப்பாத்தி, தயிர் சாதம் பண்ணிடு!''

''வீக் எண்டா... அப்படின்னா என்னடா?''  கோதுமை மாவைப் பிசைந்துகொண்டே கேட்டாள் அம்மா!  

-நந்தகுமார்

10 செகண்ட் கதைகள்

ரகசியம்

''அண்டாகா கசம், அபுகா ஹுகும்... திறந்திடு சீசே...''  அலாவுதீன் சொன்னதும் வெளியே வந்த பூதம் சொன்னது, 'எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு.

பாஸ்வேர்டை மாத்துப்பா!''

- கே.ஆனந்தன்

10 செகண்ட் கதைகள்

ஆயுள்

விபத்தில் அடிபட்டு இறந்துபோன ராமசாமியின் சட்டைப் பையில் துருத்திக் கொண்டிருந்தது சற்றுமுன் வாங்கிய லைஃப்டைம் சிம் கார்டு!

- முஸாமில்

10 செகண்ட் கதைகள்

சூது

'முதல் பால்ல சிக்ஸ் அடிச்சீங்கன்னா, எட்டு லட்சம் தர்றோம்’ என்ற விளம்பர ஏஜென்டைப் பார்த்துச் சிரித்தான், அதே முதல் பாலில் டக்அவுட் என மேட்ச் ஃபிக்ஸிங்குக்கு புக்கியிடம் 20 லட்சம் வாங்கியிருந்த பேட்ஸ்மேன் ஜீவா!

- எஸ்கா

திகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய 'நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com  என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!