அன்புள்ள அம்மா, அப்பாவுக்கு...

இந்தக் கடிதத்தை என்னிடம் இருந்து எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ‘நமது மன உணர்வுகளை வெளிப்படுத்த, கடிதம் எழுதுவது சிறந்த வழி,’ எனப் பாட்டி சொல்வார். அது எத்தனை உண்மை என்பதை இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பித்ததும் உணர்ந்துகொண்டேன்.

‘என் மகள், ஒன்பதாம் வகுப்புதான் படிக்கிறாள். ஆனால், ஒரு கல்லூரி மாணவியைப் போல சிந்திக்கிறாள்’ என அடிக்கடி பெருமைப் படுவீர்களே... அந்த எஸ்க்போஷர்தான் என்னை இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது.

தினமும் காலையில், நம் வீட்டு மாடியில் காகங்கள் கரைகின்றன, மரத்தில் இருந்து மைனாக்கள் பாடுகின்றன. ஆனால், அவற்றை ரசிக்க எனக்கு அனுமதி இல்லை. அவசரமாக காலைக்கடன்களை முடித்து, எட்டரை மணி பள்ளிக்கு, ஏழு மணிக்கே மஞ்சள் நிறப் பேருந்தில் திணிக்கப்படுகிறேன். பின்னே, நகரின் தலைசிறந்த பள்ளியில் படிக்க, ஒரு மணி நேரப் பயணமாவது வேண்டாமா? போக்குவரத்து மிகுந்த நகர வாழ்க்கையை, குழந்தைப் பருவம் முதலே எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

பள்ளியில் என்ன நடக்கிறது? கணிதம், அறிவியல் என மாறிமாறி எங்கள் தலைக்குள் திணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாணவியும் கண்டிப்பாக நூற்றுக்கு 100 எடுக்க வேண்டும். இதில் நாங்கள் சோர்வு அடைந்துவிடக் கூடாது என்பதற்காக, பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களை அழைத்துவந்து, எங்களை உற்சாகமூட்டும் முயற்சிகளும் நடக்கின்றன.

அம்மா, அதில் உள்ள ஒரு முரண்பாடு எனக்குப் புரியவில்லை. பள்ளிக்கு வரும் விருந்தினர் அனைவரும், குழந்தைப் பருவம் மகிழ்ச்சியான பருவம். ஆடுங்கள், பாடுங்கள் என்கிறார்கள். ஆனால்... தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும்கூட ஹோம்வொர்க், அஸைன்மென்ட் எனக் கவலையுடன் நகரும் எங்கள் மன ஓட்டத்தை யார் அவர்களுக்குத் தெரியப்படுத்துவது? உறவினரின் வீட்டு விசேஷங்களுக்குக்கூட செல்லாமல் இருக்கும் நிலையை யார் அவர்களுக்குப் புரியவைப்பது?

அம்மா, மாலையில் வீட்டுக்கு வந்ததும் சிற்றுண்டி தருகிறாய். மொட்டை மாடியில் உலாவ அனுமதி தருகிறாய். சிறிது நேரம்தான். மாடியில் இருக்கும் ரோஜாச் செடிகளுடன் பேச ஆரம்பிக்கும்போது, அழைப்பு வந்துவிடுகிறது. கீழே வரக் கொஞ்சம் தாமதம் ஆனாலும் அப்பா படியேறி வந்துவிடுகிறார். நம் தெருவில் நடைவண்டி பழகும் சின்னப் பாப்பாவின் குதூகலத்தை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுதான் என் அதிகபட்சப் பொழுதுபோக்கு என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஹோம்வொர்க், படிப்பு, இரவு உணவு என எல்லாம் முடித்துவிட்டு படுக்கையில் சாய்கிறேன். அதிகாலையில் எழ வேண்டும் என்ற பதற்றமான தூக்கம். ஒவ்வொருநாள் பொழுதும் இப்படித்தான் கழிகிறது.

அப்பா, எனக்கு கூண்டில் அடைபட்ட குட்டிக் குரங்கு கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. கூண்டிலிருந்து தப்பிக்க வழி இல்லை என்பது அதற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் தப்பிவிட முடியாதா எனும் ஏக்கத்தில், தனது சிறிய உடம்பை கூண்டின் இடைவெளி வழியாக நுழைத்துப் பார்க்குமாம். அதுபோன்ற மனநிலையில்தான் இப்போது நானும் இருக்கிறேன்.

நல்ல மருத்துவராகவோ, பொறியாளராகவோ வந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் படிப்பு மிக முக்கியம் என்பதை நான் நன்றாகவே அறிவேன். சிறிய வயதில் படிக்காததால் இப்போது கஷ்டப்படும் பலரையும் பார்த்திருக்கிறேன். ஆனால், எந்த நேரமும் படிப்பு, படிப்பு என இருக்கச் சொல்வது சரியா?

இப்போது, நீங்கள் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடுவது இல்லை. தோழியோடு ஊஞ்சல் ஆடுவது இல்லை. ஆனால், இதையெல்லாம் உங்கள் சிறுவயதில் அனுபவித்த அனுபவத்தை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறீர்கள். நான் 10 வருடங்கள் கழித்து நினைத்து மகிழ இப்படியான நிகழ்வுகள் இருக்குமா?

எனது மனக் குமுறல்களை வெளிப்படுத்த வழிவகை தெரியாமல்தான் இந்தக் கடிதத்தை எழுதினேன். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் நீங்கள் செலவிடும் நேரத்தில், கொஞ்சம் எனக்கும் ஒதுக்குங்கள். உங்களோடு பூங்காவில் கைப்பிடித்து நடக்கும் வாய்ப்பு கொடுங்கள். என் தோழிகளோடு சிரித்து விளையாட நேரம் கொடுங்கள்.

நாளை நான் சிறந்த மருத்துவராகவோ, உயர்ந்த தொழிலதிபராகவோ வரலாம். ஆனால், மகிழ்ச்சிகளைத் தொலைத்த முகத்தோடு இருந்து என்ன பயன்?

இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்
அம்மு என்கிற அம்ஷிதா.