Published:Updated:

ரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா!

ரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா!

ரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா!

ரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா!

Published:Updated:

வெள்ளித் திரையில் எதிரிகளைச் சுளுக்கு எடுத்து, ரசிகர்களைச் சிரிக்கவைத்த ‘குங்ஃபூ பாண்டா’, இப்போது காமிக்ஸ் வடிவில் அதகளம் செய்துகொண்டிருக்கிறது.

ரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா!

ட்ரீம் வொர்க்ஸ் மீடியாவின் ‘குங்ஃபூ பாண்டா’ அனிமேஷன் திரைப்படம், 2008-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்தது. 2011-ல் வெளியான இரண்டாம் பாகமும் செம ஹிட்.  இதன் மூன்றாம் பாகம், 2016 ஜனவரியில் வெளியாகிறது. இந்தக் கொண்டாட்டத்தின்  போனஸாக, அக்டோபர் முதல் ஜனவரி வரையில், ஒவ்வொரு மாதமும் ஒரு ‘குங்ஃபூ பாண்டா’ காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டு, மாஸ் கிளப்புகிறது ட்ரீம் வொர்க் நிறுவனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆக்‌ஷன், அட்வென்சர், நகைச்சுவை என ‘குங்ஃபூ பாண்டா’ திரைப்படத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களும் காமிக்ஸிலும் இருக்கிறது. அக்டோபரில் வெளியான முதல் காமிக்ஸ் புத்தகத்தின் கதை இதுதான்.

அமைதிப் பள்ளத்தாக்கில், தனது வளர்ப்புத் தந்தையின் நூடுல்ஸ் உணவகத்தில் வளர்ந்து வருகிறான், நமது கதாநாயகன் போ. அவனுக்கு, ‘மாஸ்டர் ஷிஃபு’ என்ற ஒரு குருவும், ‘அதிரடிப்படை ஐவர்’ என்ற ஐந்து நண்பர்களும் உண்டு. ஒரு நாள் உணவு விடுதியில் அவனது தந்தை ஒருவிதமான தூக்க நிலையில் இருப்பதைப் பார்க்கிறான். வெளியே வந்து பார்த்தால், கிராம மக்கள் அனைவருமே இதேபோல இருக்கிறார்கள். உடனே, மாஸ்டர் ஷிஃபுவிடம் ஓடுகிறான் போ. அவரின் ஆலோசனைப்படி, இந்த செயற்கைத் தூக்கம் உருவாகும் மர்மத்தைக் கண்டுபிடிக்க, அதிரடிப்படை ஐவருடன் கிளம்புகிறான்.

ரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா!

‘உறக்க மூடுபனி’ (Mist of Morpheus) என்ற செயற்கைத் தூக்கத்தை வரவைப்பது ஒரு முதலைக் கூட்டம்தான் என்பதை இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு ஊரையே தூக்கத்தில் ஆழ்த்தி, அங்கே இருக்கும் அரண்மனையைப் பிடிக்க வருகிறது முதலைக் கூட்டம். பிறகு என்ன நடக்கிறது?

இந்த விறுவிறு காமிக்ஸ் கதைகளின் கதாசிரியர், சைமன். தனது ஓவியங்களால் ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் விறுவிறுப்பை  அளிக்கிறார், ஓவியர் லீ ராபின்சன்.

இந்த காமிக்ஸ் புத்தகங்களின் சாகசத்தைப் படிக்கும் உலகச் சுட்டிகள், ‘குங்ஃபூ பாண்டா’ மூன்றாம் பாகத்தைத் ‘தெறிக்க’ விடுவார்கள் என்பது நிச்சயம்!

- கிங் விஸ்வா