இரு நண்பர்கள். ஒருவனுக்குச் சுமார் முப்பது, முப்பத் தைந்து வயதிருக்கும். இன்னொருவன் பெரிய வனை விடக் குறைந்தது ஐந்து வயது சிறியவன். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். நிறுவனம் நல்ல நிலையில் இல்லை. இருவர் உத்தியோகமும் ஒரேநாளில் போய் விட்டது. அந்த நாளில் எளிதில் வேலை கிடைக்காது. நாடே பெரிய நெருக்கடியில் இருந்தது.

இருவரும் திருவல்லிக்கேணி கோஷா ஆஸ்பத்திரியைத் தாண்டிச்சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, சுரங்கப் பாதை கட்டப்படவில்லை. நடப்போர் கூட்டந்தான் நிறைய இருந்தது. இருவரும் நேரே கடற்கரைக்குப் போனார்கள். கடல் நீரில் காலை நனைத்துக் கொண்டபடி பத்து நிமிடங்கள் நின்றார்கள்.

மூத்தவன் கேட்டான், 'நடக்கலாமா?''.

'இப்பவேயா?'

'இன்னிக்கு ஒரு விளம்பரம் பாத்தேன். அப்ளிகேஷன் எழுதணும். ராத்திரியே முடித்து விடலாம்னு எண்ணம்'

'என்ன கம்பனி?'

'பாய்லர்ஸ் லிமிடெட்'

'எனக்குத் தெரியும் நான் ஒரு தரம் போயிட்டு வந்துட்டேன். சுகமில்லே. நூறு ரூபா தரேன்னுவான். இது இரண்டாவது விளம்பரம்'

'நூறு ரூபா கிடைச்சாக்கூடத் தேவலை'

'அப்புறம் எங்கே எப்போ போனாலும் நூறு ரூபாதான் தருவேன்னுவான்'

'கஷ்டம்தான்'

'ஒண்ணு பண்ணேன். நான் போட்டிருக்கற இடத்துக்கு நீ அப்ளிகேஷன் போடேன். நம்ம இரண்டு பேர்ல யாருக்குக் கிடைச்சாலும் நல்லதுதான்.'

'ஒனக்குப் போட்டியா நான் வரணுமா?'

'போட்டியே இருக்காது. அவன் டிரைவிங் தெரியணும்றான்.'

'நீதான் லைசன்ஸ் வாங்கிட்டியே'

'அது என்ன லைசன்ஸ்? அந்த மாஸ்டர் வாங்கிக் கொடுத்ததுதானே. எனக்குப் பழக்கமே போறாது. தினம் விடணும். அதுக்கு வழியில்லை'

'எனக்கு மனசு இடம் தரலே'

'நீ போட்டுத்தான் வையேன். ஏதோ மூணாம் மனுஷனுக்குக் கிடைக்கறதுக்கு உனக்குக் கிடைச்சா நல்லதுதானே.'

''நாம நடக்கலாமா?'

'சரி. நீ அப்ளிகேஷன் போடு. ஒண்ணும் தப்பில்லே. என்னை செலக்ட் பண்றது ரொம்பக் கஷ்டம். இன்னும் மூணு நாள் டைம் இருக்கு. கட்டாயம் போடு'

மூத்தவன் பதில் சொல்லவில்லை. இரு வரும் தண்ணீர் காலில் படும்படியாகவே மைலாப்பூர் திசையில் நடந்தார்கள். அப்போது, புது லைட்ஹவுஸ் வரவில்லை. அந்த இடம் வந்தவுடன் அவர்கள் சாலைக்கு வந்தார்கள். பெரியவன், 'சரி, நான் வரேன்,' என்று சொல்லிவிட்டு நேர் எதிர்சந்தில் சென்றான். இளையவன் சாந்தோம் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றான்.

தண்ணீரில் அரை மணி நேரம் நடந்ததற்கு விளைவு இருந்தது. சின்னவனுக்குச் சுரம். 'ஏன் இந்த மாதிரி ஊர் சுற்றிவிட்டு உடம்புக்கு வரவழைத்துக் கொள்றே? திங்கக்கிழமை இன்டெர்வியூ' - அம்மா கோபித்துக் கொண்டாள்.

அவளுக்கு எப்படித் தெரிந்தது? இன்னும் என்னென்ன தெரியுமோ? இவ்வளவுக்கும் அவன் வீட்டில் அவனுக்கு வேலை போய்விட்டதைச் சொல்லவில்லை! அவன் கார் ஓட்டக் கற்றுக்கொள்வது யாருக்கும் தெரியாது என்றுதான் நினைத்திருந்தான். ஆனால், அதுவும் அவளுக்குத் தெரிந்திருந்திருக்கும்.

இன்டர்வியூவுக்கு ஒருவாறு போய் விட்டான். எல்லாத்தகுதியும் சரியாக இருந்தது. கடைசியாக, டிரைவிங் லைசென்ஸைக் காட்ட வேண்டும். அதிகாரி பார்த்தார். 'போன வாரந்தான் வாங்கி யிருக்கீங்க...' என்றார்.

'லைசன்ஸ் வாங்கினப்புறம் எங்கே யாவது வண்டி ஓட்டியிருக்கீங்களா?''

'இல்லை..'

அதிகாரி உதட்டைப் பிதுக்கினார். 'நாங்க சொல்லியனுப்பறோம்,' என்றார். அவனுக்கு அப்போதே ரிஸல்ட் தெரிந்து விட்டது.

வெளியே வந்தான். மீண்டும் பத்திரிகைகளில் விளம்பரங்கள் பார்க்க வேண்டும். எனக்கு வேலை தா என்று கெஞ்ச வேண்டும்.

சுரத்தின் தாக்கம் இன்னும் இருந்தது. சற்றுத் தள்ளாடியபடி பேருந்து பிடித்தான். வீட்டை அடைந்தவுடன் படுத்துத் தூங்கிவிட்டான். மறுபடியும் நல்ல சுரம். டைபாய்டு என்று டாக்டர் சொன்னார். இப்படி இருக்கும்போது எதற்கு வெயிலில் போனாய் என்று கோபித்துக் கொண்டார்.

அந்த நாளில் டெலிபோன் வசதி மிகவும் குறைவு. எங்கேயோ ஒரு பெட்டிக் கடையில் இருக்கும். முதலில் சில்லறையை எடுத்து வைக்க வேண்டும். அப்புறம்தான் போனைத் தொட முடியும். போன் செய்யலாமா வேண்டாமா என்று சிறிதுநேரம் யோசித்தான். 'ரொம்ப நேரம் டெலிபோனன்டெ இருந்தா மத்தவங்க பேசவேண்டாம்?' என்று கடைக்காரர் கோபித்துக் கொண்டார். அவன் இன்டர்வியூ போன இடத்தின் எண்ணைத் திருப்பினான்.

'குட் ஆஃப்டெர்னூன். ஹூ இஸ் காலிங்க்?'

அவன் பெயரையும் அவன் பேச வேண்டிய அதிகாரியின் பதவியும் சொன்னான். அந்த அதிகாரி, 'யார்? என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.

அவன் சொன்னான். 'அந்த அப்பாயின்ட்மென்ட் முடிந்து விட்டது. நாங்கள் வேறு ஒருவரை செலக்ட் பண்ணி விட்டோம். சாரி' என்று சொல்லி அவர் தொலைபேசியை வைத்து விட்டார்.

வெகு நாட்களாக அவன் நண்பன் வரவில்லை. அவன் வீட்டுக்குப் போனான். நண்பனின் மனைவிதான் வீட்டில் இருந்தாள். மகிழ்ச்சியுடன், 'உங்க நண்பருக்கு வேலை கிடைச் சுடுத்து' என்று சொன்னாள். 'நீங்கள் தான் சொன்னீர்களாம்' என்றும் சொன் னாள்.

இந்த ஒருமுறை அவன் நண்பன் அவன் யோசனையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அந்த மூன்று நாட்களுக்குள் விண்ணப்பம் அனுப்பி இன்டெர்வியூவுக்கு போயிருக்கிறான். வேலையும் கிடைத்து விட்டது! எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம்!

ஆனால், அவனிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். சொல்லவில்லை. கூச்சமாக இருந்திருக்குமோ? அந்த நேரத்தில் இப்படித் தன்னிடம் கூட அந்த நண்பன் கூச்சப்பட்டிருக்கிறானே என்ற எண்ணந்தான் வருத்தமளித்தது.