சிறுமியாய் நகரம் செல்லும் பேருந்தில்

ஜன்னலோர இருக்கை கிடைத்தபோதெல்லாம்

நெடுவகிடாய் நீரோடும் வாய்க்காலின் அக்கரையில்

மண் மெழுகிய திண்ணையின் கட்டைச் சுவற்றில்

வண்ணமடித்து மூங்கில் தட்டிக்கட்டிய

கூரைவீடே என் கனவு வீடானது.

இருபெரும் தூண்களும் கதவுகளில் பூ வேலைப்பாடும்

சிவப்பும் நீலமுமாய் சிமென்ட்பால் பூப்போட்ட

வரவேற்பறை நடுக்கூடம் உள் அறை சமையற்கட்டு

கொல்லைப்புறமுமாய் இருந்த

காந்திமதியின் வீட்டை பார்க்கும்வரை.

உயிர் நடுங்க அழுத்தமாய்க் குரைக்கும்

ஆள் உயர நாய்கள் வாசலில் கட்டப்பட்ட

ஜன்னல் திறக்காத சென்னை மாநகரின்

கடற்கரையோரப் பங்களாக்களுக்கு எதிர்ப்புறத்தில்

நடக்கும் பாதையில் வீடுகளிலிருந்து

ஜாடையாக வெளியேற்றப்படும்

கழிவுநீர் நாற்றம் சூழவாழும் வாடகை வீட்டிலிருந்து,

இப்போது நான் கட்டிக்கொண்டிருக்கும் வீடோ

முற்றிலும் மாறுபட்ட கவிதை இல்லம்.

மாடியில் என் தனியறையில் கடற்காற்று புத்தகங்கள்

நிஜமாய் பூத்த மலர்த்தொட்டிகள், நிலவொளி என

எழுதுவதற்கு மிகவும் வசதியான

தூய நிசப்தத்தின் எழில் கொஞ்சி உறவாட

நாள்தோறும் மனம்பிசைந்து ஞாபகத்தால் இடம் வாங்கி

எண்ணச் செங்கற்கள் எடுத்தடுக்கி எடுத்தடுக்கி

விவரம் தெரிந்த நாளிலிருந்தே

கட்டிக்கொண்டேதான் இருக்கிறேன்

எனக்கான கனவு இல்லத்தை.