பேருந்துப் பயணமொன்றில் கருத்த தேவதை
வண்ணம் பரிமாறி
எண்ணும் பரிமாறிய நாளின் மழை இரவில்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாட் ரீச்சபிளாகி நெஞ்சில் தீ வைத்தல்
அல்லது
மருத்துவரின் டோக்கன் ஏந்திய காரிகை
உள்ளன்று வைத்து புறமொன்று பேசி
கடையனான நம்மைக் கண்வைத்து
இடையில் செருகிவிடுதல்
அல்லது

முகநூல் முக்கத்தின் சந்தன மையலில் கரைந்து
வழிய வழிய உரையாடி இன்பாக்ஸ் வரையோடி
நம் ஆத்திரம் பொங்க
ஒருத்தி ஆணாய்ப் போதல்
அல்லது
நேற்றின் வெண்பனி பூக்கும் கருமிரவில்
ஒருதலைக்காரி முத்தமிட நெருங்கையில்
இன்று கனவு மறந்துபோதல்
அல்லது
பத்தாண்டுக் கனவுகளோடு கதவினைத் தாழிட்டு
உட்சென்று பார்த்தால் ஒருத்தி
பல்லாண்டின் ஒளியோடு தவளையெனக் கிடத்தல்
மற்றும்
நாளிதழ் ஒன்றில் உல்லாசமாக இருந்த நாம்
அதே ஒருத்தியின் கணவனால்
மாலை நாளிதழில் கொலையுண்டுபோதல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism