மன்னை சதிரா
ஓவியம்: அரஸ்

வாசகி சிறுகதை

கோமதி ஈஸி சேரில் அமர்ந்து பேப் பர் படித்துக் கொண்டு இருந்தாள். வெளி கேட் திறக்கும் சத்தம் கேட்க... மருமகள் பானுவின் அப்பா ஆராவமுதன் வந்து கொண்டிருந்தார். சட்டென்று எழுந்து ரூமுக்குள் சென்றுவிட்டாள்.

''பானு... பானு!''

அடுப்படியில் வேலையாக இருந்த பானு, பசுவின் குரல் கேட்ட கன்றுபோல் துள்ளி வந்தாள்.

''வாங்கப்பா, உட்காருங்க. ஊர்ல அம்மா, தம்பி, தங்கைகள் நல்லாயிருக்காங்களா?''

''எல்லாரும் நல்லாஇருக்காங்க. உங்க மாமியார் நல்லாயிருக்காங்களா? இந்தா... இந்த அல்வா, மிக்ஸர், பூ. உன் மாமியாருக்குப் பிடிச்ச பச்சை நாடா வாழைப்பழத்தை

அவங்ககிட்டே கொடு.''

''ஏம்ப்பா, இவ்வளவு?''

''மகளைப் பார்க்க வர்றப்போ வெறுங்கையோட வரலாமா..?! சரி, மாப்பிள்ளை நல்லாயிருக்காரா?''

''எல்லாரும் நல்லா இருக்கோம்ப்பா.''

''பானு... பானு!''

- கோமதி கூப்பிட்டாள்.

''உட்காருங்கப்பா, அத்தை கூப்பிடறாங்க. கேட்டுட்டு வர்றேன்.''

''என்ன அத்தை..?''

''யாரோட பேசிட்டிருக்கே?''

''அப்பா வந்திருக்காங்க.''

''அதான் கல்யாணமான மூணு மாசத்துல ஆறு தடவை வந்துட்டாரே!''

முகம் வாடிப்போனாள் பானு. அந்தச் சமயம் எதிர்வீட்டு பத்மா, ''கோமதியக்கா...'' என்று குரல் கொடுக்க, அவசரமாக வெளியே சென்றாள் கோமதி, வந்த சம்பந்தியை என்னவென்றுகூடக் கேட்காமல்.

''என்ன பத்மா?''

''ரேஷன்ல பருப்பு போடறாங்களாம்.. நீங்களும் வர்றீங்களா?''

''இரு, பானுவை அனுப்பி வைக்கிறேன்'' என்றவள், உள்ளே திரும்பினாள்.

''பத்மாவோடு போய் வாங்கிட்டு வந்துடு பானு.''

''அப்பாவுக்கு காபி கொடுத்து...''

''காபி சாப்பிடாமலா வந்திருப்பார்? அவர் எங்கயும் ஓடிப் போகமாட்டார். போயிட்டு வந்து கொடுக்கலாம். பாவம்.. பத்மா நிக்கறா...''

''அப்பா... இதோ வந்துடறேன்.''

இதற்கு மேலும் அங்கிருக்க கிறுக்கா என்ன அவருக்கு?

''இல்லம்மா, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். பார்த்துட்டேன். புறப்படறேன். வர்றேன் சம்மந்தி!''

- வாஞ்சையுடன் சொல்லிப் புறப்பட்டார் ஆராவமுதன்.

பானுவுக்கு ஆத்திரமாக வந்தது. 'பாவம் அப்பா. அவர்கிட்ட ரெண்டு வார்த்தைகூடப் பேசவிடாம விரட்டுறாங்களே... சே! வீட்டுக்கு வந்தவரை வாங்கனுதான் சொல்லல. காபியாவது கொடுத்து அனுப்பலாம்னு பார்த்தா, ஏன் இப்படி இருக்காங்க அத்தை? என்னை நல்லாதான் வெச்சுக்கறாங்க. பிரியமாத்தான் இருக்காங்க. அப்புறம் ஏன் இப்படி? நான் வேணும்... என் குடும்பம் பிடிக்கலையா? அவருக்கு மூத்த பெண்ணை பிரிஞ்சிருக்கிறது கஷ்டமா இருக்கு. பாசத்தில் ரெண்டு, மூணு தடவை வந்திருப்பார். அதுக்காக இப்படியா?!’

''இந்தாம்மா... கார்டை கொடுத்துட்டு பையைப் பிடி...''

- ரேஷன் கடைக்காரர் கேட்டதும்தான் சிந்தனை கலைந்தாள் பானு. ''பானு... ஏன் ஒரு மாதிரியா இருக்கே..?!'' என்று ஆரம்பித்தாள் பத்மா.

''ஒண்ணுமில்லே பத்மா அத்தே.''

''இல்லை பானு, கடையிலயே பார்த்தேன்... நீ ஏதோ யோசனையிலயே இருந்தே...''

'இவரை நம்பி பேசலாமா? இவர் அத்தைக்கு வேண்டியவராச்சே..? நாம அவசரப்பட்டு ஏதையாவது சொல்ல, அவர் ஒண்ணுக்கு ரெண்டா போட்டுக் கொடுத்துட்டா..?'

- உஷாரானாள் பானு.

''ஒண்ணுமில்லே பத்மா அத்தே... தலைவலி. அதான்'' என்று மழுப்பினாள்.

''எனக்குத் தெரியும் பானு. உங்கப்பா உன்னை பார்க்க வர்றதும், உங்க அத்தை அவரை இன்சல்ட் பண்றதும் எனக்குத் தெரியும். அதானே உன் கவலை?''

''இல்லையில்லை... அதெல்லாம் ஒண்ணும்இல்லை...''

- அவசரமாக மறுத்தாள்.

''எனக்கு எல்லாம் தெரியும். உன் அத்தை நல்லவங்க பானு. உன் அப்பா சாதாரண வேலையில் இருப்பவர். தினக்கூலி வாங்கறவர். அவர் உன்னைப் பார்க்க வர்றப்பல்லாம், 200 ரூபாய்க்கு குறையாம ஏதாவது வாங்கிட்டு வர்றாராம். அந்தப் பணம் இருந்தா... உன் அப்பா குடும்பத்துக்கு ரெண்டு நாள் சாப்பாட்டுச் செலவுக்கு வருமாம். உன் அத்தை இப்படி பேசினாலாவது... தன் வரவைக் குறைச்சு, குடும்பத்துக்கு செலவு செய்வாரேனுதான் கோமதியக்கா இன்சல்ட் செய்றது மாதிரி நடிக்கறாங்களாம். இதை எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க. இனி, 15 நாட்களுக்கு ஒருமுறை உங்கிட்ட பழம், ஸ்வீட்னு வாங்கிக் கொடுத்து, அப்பாவை போய் பார்த்துட்டு வரச்சொல்லி அனுப்பணும்னு கூட சொன்னாங்க. மகன்கிட்டயும் பேசிட்டாங்களாம்!''

- கை பிடித்துச் சொன்னாள் பத்மா.

பானுவின் விழிகள் நனைந்தன!