பொம்மைதான் மனிதனின் முதல் சினேகிதன். அழும் குழந்தையைச் சிரிப்பின் திசைக்கு மாற்றும் பொம்மைகளைத்தான் மனித நாகரிகத்தின் முதல் கலைவடிவம் என்கிறது மானுடவியல். இத்தகைய பொம்மைகளை வைத்து கலாபூர்வமான நிகழ்ச்சிகள் பல நூற்றாண்டாகவே நடந்து வருகின்றன. நாடக வடிவத்துக்கும் பொம்மலாட்டத்துக்கும் சின்ன வித் தியாசம்தான். இங்கே மனிதன் பேசி நடிப்பான். அங்கே பொம்மைகள் பேசி நடிக்கும்.

மக்கள் கலையான இந்தப் பொம்மலாட்டக் கலைக்குப் புத்துயிர் கொடுக்கும் பணியில் தன்னை

தீவிரமாக அர்ப்பணித்து இருக்கிறார் மு.கலைவாணன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மீது உள்ள பெருவிருப்பத்தால், கலைவாணன் என்று பெயர் பெற்றவர். இவருடைய தந்தை முத்துக்கூத்தன் 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை’ என்ற அற்புதமான பாடலை எழுதிய பாடலாசிரியர்.

பொம்மலாட்டக் கலை மீது கலைவாணனுக்கு எப்படி ஆர்வம் வந்ததாம்?

''சின்ன வயதிலேயே முட்டை ஓடு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்குக் கண், காது, மூக்கு வரைந்து விரல்களில் மாட்டி, தெருவில் உள்ள வர்களை எல்லாம் சிரிக்க வைப்பேன். இதன் பரிணா மம்தான் என்னுடைய பொம்மலாட்டம்'' என்கிறார் கலைவாணன்.

'பாவைக்கூத்து’ என்று தமிழில் அழைக் கப்படுகிற இந்தப் பொம்மலாட்டமானது, தோல் பாவைக்கூத்து, மரப்பாவைக் கூத்து, குச்சி பொம்மலாட்டம், கையுறை பொம்மலாட்டம் என்று நான்கு வகையில் நடத்தப்படுகிறது. இதில் கலைவாணன் கையில் எடுத்திருப்பது, கையுறை பொம்மலாட்டம் (நீறீஷீஷ்s ஜீuஜீமீt) ஆகும்.

கையுறை பொம்மலாட்டம் நடத்த 10 அடிக்கு 10 அடி நீள, அகலமும் 12 அடி உயரமும் கொண்ட தனிமேடையை தயாராகவே வைத்துள்ளார். எந்த ஊரில் பொம்மலாட்டம் நடத்த வேண்டும் என்றாலும், அந்த செட்டப்புகளுடன் போய்ச் சேர்ந்துவிடுகிறார். இடமும் மின்சார இணைப்பும் மட்டும் தந்தால் போதும்.

பழைய பொம்மலாட்ட நிகழ்ச்சியில் இல்லாத புதுமைகளையும் வேகத்தையும் நிகழ்ச்சியில் இணைத்திருப்பதுதான், இவருடைய சிறப்பு. திரைப்படம் போன்று விறுவிறுப்பான கதைப்போக்கு, உடனுக்குடன் மாறும் காட்சிகள், கதையின் நகர்வுக்கு ஏற்ற பின்னணி இசை, பாத்திரப் படைப்புக்கு ஏற்ப பொருத்தமான பின்னணிக் குரல், சண்டைக் காட்சிகள் என்று விறு விறுப்பாகப் போகிறது, இந்தக் கையுறை பொம்மலாட்டம்.

இதுவரை, பொம்மலாட்டம் நடத்திய வர்கள் மூளையை இருட்டாக்கும் புரட்டுக் கதைகளையும், இதிகாசங்களையும், புராணங்களையும்தான் தங்களின் காட்சித்தளமாகக் கொண்டு இருந்தனர். அதில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் கலைவாணன்.

''சமூக மாற்றத்துக்கான நல்லதொரு ஊடகமாகப் பொம்மலாட்டக் கலையை மாற்ற வேண்டும் என விரும்பினேன். அதனால், கதை அமைப்பை பேரிடர் பாதுகாப்பு, குழந்தை உழைப்பாளர் எதிர்ப்பு நிலை, சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு, பெண் கல்வி, பெண் விடுதலை, கல்லாமை இல்லாமை போன்றவற்றின் அடிப்படையில் அமைத்தேன். இந்தக் கலை வடிவத்தை பள்ளிக் குழந்தைகள் மத்தியில் நிகழ்த்தி அவர்கள் மனதில் மாற்றத்தை விதைத்து வருகிறேன். பொம் மைகள்தான் குழந்தைகளின் நண்பர்கள். அதனால், மனிதர்கள் சொல்வதைவிட பொம்மைகள் சொன்னால் அவர்கள் நிச்சயம் கேட்பார்கள்! என்னுடைய பொம்மலாட்டத்தில் ஹீரோவே கோமா ளிதான். எல்லாச் செய்திகளையும் கோமாளி மூலம்தான் சொல்வேன். தகிர்த தகிர்த தா... அஜக்தா... ஜினக்தா சம்போ சம்போ... என்று கோமாளி நுழைந்ததுமே குழந்தைகள் புதிய உலகத்துக்குள் நுழைந்து விடுவார்கள்'' என்று சொல்லும் கலைவாணன், இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்தி இருக்கிறார். இதுதவிர, 'கதை கேளு’, 'பாடலாம் வாங்க’ என்ற குழந்தைகளுக்கான பல புத்தகங்களையும் எழுதிவெளியிட் டுள்ளார். இந்தக் கலையை மேடையில் பார்க்கும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பது இல்லை என்பதால், இந்தப் பொம்மலாட் டத்தைக் குறுந்தகடுகளாகவும் வெளி யிட்டுள்ளார்.

ஆம்! வீட்டு வரவேற்பறைக்கே வந்துவிட்டன பேசும் பொம்மைகள். நவீன உலகத்துக்குள் தங்களை நுழைத் துக்கொண்டுவிட்ட குழந்தைகளுக்கு இதுவும் ஒரு சந்தோஷம்தான்!