விரல்களிலும் இதழ்களிலும் அவளையே மீட்டுகிறாள்

உயிரைப் பைத்தியமாக்கும் இசையினூடே

தந்திகளில் கசிகின்ற நாதங்களினூடே குரலை காற்றிலசையும்

பெருமர இலைகளின் ஓசைகளாக்குகிறாள்.

வற்றியிருக்கிற குளத்தின் மீது மேகங்கள்

கருக்கின்றபொழுது கானங்களிசைக்கின்றாள்

குளத்தில் மீன்குஞ்சுகள் செதில்களின் மகிழ்வில் ஓடியாடுகின்றன

தாகத்திலிருந்தவர்கள் குடங்களில் நீரையள்ளி மழையைப் பாடுகின்றனர்

இலையுதிர்த்த மரம் பசுமையில் நிரம்பி

பூக்களால் நிரம்பி கமழ்கிறது காடெங்கும்.

இருண்ட இரவுகளில் தேய்பிறை முழுநிலவாகிறது

பௌர்ணமியில் காதலர்கள் முத்தங்களை

வாசிக்க எங்கும் படர்கிற மெல்லிய ஓசைகள்.

விளைநிலங்களில் உழவர்களின் கலப்பைகள்

புன்னகையைச் சேர்த்து உழுகின்றன

மழை நிரம்பிய கண்மாய்களின் ஞாபகங்களில்.

ஏழைகளின் வீடுகளில் அடுப்பில் நெருப்பு

எந்நேரமும் எரிந்து பசிப்பொழுதுகள் குளிர்கின்றன.

விழிகளெல்லாம் கண்ணீர் சுரப்பதை மறந்து

ஆனந்தங்களில் அமிழ்கின்றன

வேதனைகள் மறைந்த உலகம் ததும்புகின்றது

திருவிழாக்களினாலும் வேடிக்கைகளினாலும்

கொண்டாட்டங்களினாலும்.

கைகளிலிருந்த கருவியும்

அவள் குரலும் கூட்டிய அரிய கீதங்களில்

கைகூடுகிற அதிசயங்களில்

நானுமிருக்கிறேன் நானில்லாதவாறு.

விரல்களிலும் இதழ்களிலும் அவளையே மீட்டுகிறாள்

உயிரைப் பைத்தியமாக்கும் இசையினூடே

தந்திகளில் கசிகின்ற நாதங்களினூடே குரலை காற்றிலசையும்

பெருமர இலைகளின் ஓசைகளாக்குகிறாள்.

வற்றியிருக்கிற குளத்தின் மீது மேகங்கள்

கருக்கின்றபொழுது கானங்களிசைக்கின்றாள்

குளத்தில் மீன்குஞ்சுகள் செதில்களின் மகிழ்வில் ஓடியாடுகின்றன

தாகத்திலிருந்தவர்கள் குடங்களில் நீரையள்ளி மழையைப் பாடுகின்றனர்

இலையுதிர்த்த மரம் பசுமையில் நிரம்பி

பூக்களால் நிரம்பி கமழ்கிறது காடெங்கும்.

இருண்ட இரவுகளில் தேய்பிறை முழுநிலவாகிறது

பௌர்ணமியில் காதலர்கள் முத்தங்களை

வாசிக்க எங்கும் படர்கிற மெல்லிய ஓசைகள்.

விளைநிலங்களில் உழவர்களின் கலப்பைகள்

புன்னகையைச் சேர்த்து உழுகின்றன

மழை நிரம்பிய கண்மாய்களின் ஞாபகங்களில்.

ஏழைகளின் வீடுகளில் அடுப்பில் நெருப்பு

எந்நேரமும் எரிந்து பசிப்பொழுதுகள் குளிர்கின்றன.

விழிகளெல்லாம் கண்ணீர் சுரப்பதை மறந்து

ஆனந்தங்களில் அமிழ்கின்றன

வேதனைகள் மறைந்த உலகம் ததும்புகின்றது

திருவிழாக்களினாலும் வேடிக்கைகளினாலும்

கொண்டாட்டங்களினாலும்.

கைகளிலிருந்த கருவியும்

அவள் குரலும் கூட்டிய அரிய கீதங்களில்

கைகூடுகிற அதிசயங்களில்

நானுமிருக்கிறேன் நானில்லாதவாறு.