நாயகர் சதுர்த்தியும் கொழுக்கட்டையும் போல, தீபாவளியும் பட்டாசும் போலத் தான் தீபாவளிக்

கொண்டாட்டமும் ஆனந்த விகடன் தீபாவளி மலர்களும்! அந்தக் காலத்தில் பாஸ்கர தொண்டைமான், லா.ச.ராமாமிர்தம், கி.வா.ஜகந்நாதன், ரா.பி.சேதுப் பிள்ளை, லக்ஷ்மி போன்று பெரிய பெரிய எழுத்தா ளர்கள் எல்லாம் விகடன் தீபாவளி மலர்களில் தங்கள் கதைகளும் கட்டுரைகளும் வெளியாவதை மிகவும் பெருமையாகக் கருதினார்கள். ஓவியர்கள் மாலி, ராஜு, சில்பி, கோபுலு போன்றவர்களின் படங்களும் விகடன் தீபாவளி மலர்களை அலங்கரிக்கும். 1952-ம் ஆண்டு, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் மூல விக்கிரகத்தைப் படம் வரைவதற்காக திருவாரூர் வந்தார் ஓவியர் சில்பி. உடனே போய் அவரைப் பார்த்தேன். அவர் அப்போது விகடனில் ஸ்டாஃபாக வேலை செய்துகொண்டிருந்தார். அவரிடம், 'உங்களை மாதிரியே எனக்கும் விகடன் தீபாவளி மலரில் படம் வரையணும்னு ஆசை’ என்று என் ஏக்கத்தைத் தெரிவித்தேன். எனக்கு அப்போது 26 வயது இருக்கும். சில்பி மெலிதாகப் புன்னகைத்துவிட்டு, 'கடவுளின் அருள் இருந்தால் நிச்சயமாக முடியும்’ என்றார்.

1953-ம் ஆண்டு, என் உறவினர் கோவிந்தன் என்பவரின் வீட்டுத் திருமண அழைப்பிதழ் வந்தது. அந்த மணமக்களுக்கு ‘Joy this year.Boy next year !’ என்று அலங்கார எழுத்துகளில் அழகாக கிரீட்டிங்ஸ் எழுதித் தபாலில் அனுப்பியிருந்தேன். அந்தத் திருமணத்துக்குச் சென்றிருந்தார் என் தாத்தா நடேச ஐயர். திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களும் அந்தத் திருமணத்துக்கு வந்திருந்தார். அவரிடம் இந்த கிரீட்டிங்ஸைக் காட்டி, ''என்ன அழகா எழுதியிருக்கான் பாருங்கோ! இவனுக்கு உங்க பத்திரிகையில ஒரு வேலை போட்டுக் கொடுத்தீங்கன்னா நல்லது!'' என்றிருக்கிறார் என் தாத்தா. வாசனும் உடனே, ''அதற்கென்ன... நாளைக் காலையில 8 மணிக்குள்ள என்னை வீட்டுல வந்து பார்க்கச் சொல்லுங்கோ'' என்று சொல்லியிருக்கிறார். ''ஆகட்டும். அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டார் என் தாத்தா.

வாசன் அவர்கள் சென்ற பிறகு கோவிந்தன் என் தாத்தாவிடம், ''என்ன இது... அவன் திருவாரூர்லன்னா இருக்கான்? நாளைக் காலைல எட்டு மணிக்குள்ள அனுப்பி வைக்கிறேன்னு அவர்கிட்டச் சொல்லிட்டீங்களே, எப்படி முடியும்?'' என்று கேட்டார். ''அதுக்கென்ன... உடனே அவனை கிளம்பி வரச்சொல்லி ஒரு தந்தி கொடுத்துடு!'' என்றார் தாத்தா.

அதன்படியே கோவிந்தன் கொடுத்த தந்தி எனக்கு மாலை 3 மணி வாக்கில் கிடைத்தது. உடனே ஒரு பையில் வேட்டி, சட்டை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பி, இரண்டு ரயில் மாறி, காலையில் 5 மணி சுமாருக்கு எக்மோர் வந்து சேர்ந்தேன். கோவிந்தன் ஸ்டேஷனுக்கே வந்திருந்து என்னை அழைத்துக்கொண்டு ஒரு சைக்கிள் ரிக்ஷாவில், லஸ்ஸிலிருந்த தன் வீட்டுக்கு அழைத்துப் போனார். அங்கேயே குளித்து முடித்து, வேறு புதிய வேட்டி அணிந்துகொண்டு, கோவிந்தனும் நானும் டாணென்று 8 மணிக்கு வாசன் சாரின் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டுக்கு 'சுதர்ஸனம்’ என்று பெயர். அங்கே எங்களைப் பார்த்ததும், ''முதலில் டிபன் சாப்பிடுங்கள். பிறகு பேசுவோம்!'' என்றார் வாசன். அவரோடு அவர் மகன் பாலசுப்பிரமணியம், இன்னும் சிலருடன் நானும் கோவிந்தனும் அங்கேயே காலை டிபன் சாப்பிட்டோம். பின்பு வாசன் எங்களை 12 மணி வாக்கில் ஜெமினி ஸ்டுடியோவுக்கு வருமாறு சொன்னார். அதன்படியே நாங்கள் மீண்டும் கோவிந்தன் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, நேரே ஜெமினி ஸ்டுடியோவுக்குப் போனோம்.

''உன் படங்கள் எல்லாம் பார்த்தேன். நன்றாக இருந்தது. தேவனிடம் சொல்லியிருக்கிறேன். நீ நேரே ஆனந்த விகடன் ஆபீசுக்குப் போய் தேவனைப் பார்!'' என்றார் வாசன். அவரை நமஸ்கரித்துவிட்டுக் கிளம்பி, ஒரு சைக்கிள் ரிக்ஷா பிடித்து விகடன் ஆபீஸ் போனோம். இப்போது அண்ணா சாலையில், டி.வி.எஸ்ஸுக்கு எதிர்த்தாற்போல் விகடன் அலுவலகம் உள்ளதல்லவா... அதே இடம்தான். ஆனால், கல் கட்ட டமாக இல்லாமல் கூரை வேய்ந்து பர்ணசாலை போலிருக்கும் அந்தக் காலத்தில்.

முதல் அறை தேவனின் அறை. சற்றுத் தள்ளி ஒரு ஷெட்டில் கோபுலு, சித்ரலேகா, சில்பி, சிம்ஹா, ஸாரதி ஆகிய ஓவியர்கள் இருந்தார்கள். அங்கேயே எனக்கும் ஒரு மேஜை, நாற்காலி போட்டுக் கொடுத்தார்கள். சுற்றி இருந்தவர்களோ ஓவிய உலகில் பெரிய ஜாம்பவான்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு கொசு மாதிரி நான் ஒடுங்கி உட்கார்ந்தேன்.

சில்பி நான் படம் வரைவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருப்பார். அவர் பார்க்கிறார் என்று தெரிந்ததும் எனக்கு உள்ளுக்குள் உதறலாக இருக்கும். ஒரு நாள் அவர் என்னைக் கூப்பிட்டு, ''எத்தனை நாளைக்குத்தான் ரூமுக்குள்ளேயே இருந்து வரைவாய்? வெளியே நாலு இடங்களுக்குப் போய் நேரடியாகப் பார்த்து லைஃப் ஸ்கெட்ச் பண்ணு. அப்பத்தான் கை பழகும்'' என்று சொன்னார். அதன்படியே விகடன் அலுவலகத்தில் அலவன்ஸ் வாங்கிக் கொண்டு வெளியே போய் வரையத் தொடங்கினேன். வரைந்ததை மறுநாள் ஓவியர் கோபுலுவிடம் கொண்டு வந்து காண்பிப்பேன். அவர் இன்னின்ன இடத்தில் இப்படி வரையணும் என்று சொல்லிக் கொடுத்துத் திருத்தித் தருவார்.

ஆர்ட்ஸ் ஸ்கூல் எதிலும் நான் படித்ததில்லை. என்றாலும், ஓவியத் துறையில் கொஞ்சமாவது முன்னுக்கு வந்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் ஓவியர் சில்பியும் கோபுலுவும்தான்.

எங்கே படம் வரையச் சென்றாலும், சில்பி என்னையும் உடன் அழைத்துப் போவார். தான் வரைவதை அருகிலிருந்து கவனிக்கச் சொல்வார். கரன்ட் கம்பம், எருமை மாடு, சைக்கிள் ரிக்ஷா என்று கண்ணில் பட்டதையெல்லாம் வரையச் சொல்வார். 'சைக்கிள் ரிக்ஷா தலைகீழாகப் புரண்டிருந்தால் எப்படி இருக்கும்னு வரை, பார்க்கலாம்!’ என்பார். 'என்ன சார் இது, எப்படி வரைய முடியும்?’ என்பேன் புரியாமல். 'சைக்கிள் ரிக்ஷா அடியில் மல்லாந்து படுத்துக்கொண்டு வரை!’ என்பார். 'ஒரு கதையில் இருவர் சைக்கிள் ரிக்ஷாவில் போகும்போது விபத்து ஏற்பட்டு, ரிக்ஷா உருண்டு புரண்டுவிட்டது என்று ஸீன் வந்தால் எப்படி வரைவாய்? அதனால், இப்போதே வரைந்து பழகிக்கொள்ள வேண்டும்’ என்பார். அதே போல், 'ஒரு சிம்னி விளக்கை வரைவதானால், வெறுமே அதை நேராக அப்படியே வரையாதே! படுக்கப்போட்டு வரை. முதுகுப்புறம் இருந்து வரை. இப்படிப் பல ஆங்கிளில் வரைந்தால்தான் அதன் உருவம் மனதில் பிடிபடும்’ என்பார்.

ஒரு நாள் தேவன் என்னைக் கூப்பிட்டு, ஒரு சிறுகதைக்குப் படம் வரையச் சொன்னார். சித்தார்த்தன் என்கிற எழுத்தாளர் எழுதிய 'கோமதியின் நெஞ்சம்’ என்கிற கதை. அதை எடுத்துக்கொண்டு போய் கோபுலுவிடம் கொடுத்து, ''சார், இதுக்கு என்னைப் படம் போடச் சொல்லியிருக்கிறார். எப்படிப் போடணும்னு சொல்லித் தாங்களேன்'' என்று கேட்டேன். அவரும் ரஃப் ஸ்கெட்ச் செய்து காண்பித்து, ''இப்படிப் போடு'' என்று ஐடியா கொடுத்தார். அதை அப்படியே வாங்கி, அதன் மீதே அழகாக வரைந்து எடுத்துக்கொண்டு போய் தேவனிடம் கொடுத்தேன். ''பிரமாதமா வரைஞ்சிருக்கியே!'' என்று பாராட்டினார். அந்த வார ஆனந்த விகடனில் அந்தப் படம் பிரசுரமாயிற்று. ஆனந்த விகடனில் நான் வரைந்த முதல் படம் அது.

என் பெயர் வெங்கடரமணி என்பதால், 'ரமணி’ என்ற பெயரில் அந்தப் படத்தை வரைந்திருந்தேன். ஆனால், அந்தக் காலத்தில் ரமணி என்று வேறு ஒரு புகழ்பெற்ற ஓவியர் இருந்தார். அவர் பெயர் சுப்பிரமணி. அவர் சுப்பு என்ற பெயரிலும், ரமணி என்ற பெயரிலும் படங்கள் வரைவார். அதனால், என்னை வேறு பெயரில் வரையச் சொன்னார் தேவன். ''நீங்களே ஏதாவது பெயர் சொல்லுங்களேன், சார்!'' என்று கேட்டேன். என் ஆங்கிலப் பெயரில் முதல் எழுத்தையும் கடைசி மூன்று எழுத்துக்களையும் சேர்த்து, வாணி என்று வைத்துவிட்டார்.

விகடனில் நான் பணிபுரிந்த நாட்களெல் லாம் தீபாவளிக் கொண்டாட்டம் போன்று சந்தோஷமும் மகிழ்ச்சியுமான நாட் கள்தான்!