மெலிதாகத் தூறல் விழுந்ததைப் பேருந்துக்குள் உணர்ந்தேன். நீர்ச் சிதறலை தடுக்கும் நோக்கில்

பயணிகள், ஜன்னல் ரெக்ஸினோடு போராடினார்கள். சிலருக்குக் கைகூடியது. சிலர் நடத்துனரைப் பார்த்தார்கள்.

''தள்ளி உட்காருங்கம்மா.... அது வேலை செய்யாது..''

முகத்தில் தெளித்த மழை நீரைப் பொருட்படுத்தாது வெளியே பார்த்தேன். வயல்வெளிகளில் செழுமை பரவிக் கிடந்தது. நெற்பயிர்கள் பசுமை காட்டின.

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்தில் பயணிப்பது சுகமான அனுபவம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருபுறமும் பரந்து கிடக்கும் வயல்வெளிகள் மனதை மலரச் செய்யும். உற்சாக மத்தாப்பை சிதறச் செய்யும். ஊரில் இருந்தவரையில் உறவினர்கள் வீட்டுக்கு, அருகாமை ஊர்களில் நண்பர்களின் சந்திப்பு அனைத்துமே பேருந்து பயணத்தின் மூலமே நிகழ்ந்திருக்கிறது. இப்போது பேருந்தைத் தேர்ந்தெடுத்ததற்கும் பழைய நினைவுத் தொகுப்பே காரணம். கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி பழைய நினைவுகளைக் கடப்பது ரசனையோடு தொடர்புடையது. இப்போதையை எனது மனநிலைக்கு அது ஆறுதல் மருந்து.

சென்னையிலிருந்து ரயிலில் பயணித்து, திரூவாரூரில் லாட்ஜில் ரூம் போட்டு குளித்து ரெடியாகி பேருந்துக்காகக் காத்திருந்த சில நிமிடங்களில், பேருந்து நிலையத்தில் நிறைய மாற்றத்தை உணர்ந்தேன். கல்லூரி நாட்களில் நண்பர்களோடு சைக்கிளில் சுற்றிச்சுற்றி வந்து 'பேருந்து நண்பர்’களுக்காக காத்திருந்து கணேஷ் பவனில் டீ குடித்த பழைய பேருந்து நிலையம் தொலைந்து போயிருந்தது.

''தியாகு... தமிழ் ஐயா திருநெல்லிகாவலுக்கு அருகே புதூர் என்கிற கிராமத்தில் இருக்கிறார். அவர் பிறந்த ஊர் அது. எப்போதும் வீட்டில்தான் இருக்கிறாராம்...''

நண்பன் முருகானந்தம் குறுஞ்செய்தியில் பதில் அனுப்பி இருந்தான். ரயில் நிலையத்தில், முகம் காட்டினான்.

நான் காரில் வருவேன் என்கிற அவனது எதிர்பார்ப்பைத் தகர்த்திருந்தேன்.

''ஐயாவ பார்க்க வந்தேன்னு பொய் தான சொல்ற... மீனாவ பாக்கத்தான் வந்திருக்கே..?''

லாட்ஜ் அறையில் வந்து சரிந்ததும் கண்களை உற்றுப் பார்த்தபடி கேட்டான். நான் மெலிதாக தலையை ஆட்டி மறுதலித்தேன்.

முருகானந்தம் நாற்பது வயதில் முற்றிலு மாக இளமையைத் தொலைத்திருந்தான். பெரிதாக தொப்பை போட்டிருந்தான். கண் களுக்குக் கீழே கருவளையம்; கன்னத்து சதைகளில் கருப்படித்திருந்தது.

''உன்னை ஊர்ல பார்க்கிற இந்த நிமிஷம் எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமாடா.. நம்ம செட்டுல டீச்சர்... புரொபஸர்ஸ் எல்லாரையும் நினைவுல வச்சிருக்கறது நீயும் நானும் மட்டும் தான்டா...''

பழைய நினைவுகளுக்கு முன்னுரை எழுதினான்.

''வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க... துர்கா எப்படி இருக்கு..?''

நான் அவனைப் பார்த்து தலையாட் டியது அவன் விசாரிப்பை ஏற்றுக் கொண்டதற்கான ஆமோதிப்பு மட்டுமே என்பது நண்பனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

துர்கா எப்படி இருக்கிறாள் என் பதற்கு பதிலாக எங்கிருக்கிறாள் என்று கேட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

''ஏண்டா... ஆபீஸுக்கு லீவ் சொல்லிட்டு வர்றேன்.. வெயிட் பண்ணேன்..''

''இல்லடா... நான் தனியா ஐயாவ பார்க்கணும்...''

''சரி... அப்ப நைட்டு ரூம்ல பார்க்கலாம்...''

''திருக்காரவாசல் எறங்கு...''

கண்டக்டர் குரலுக்கு பேருந்துக்குள் இருவர் செவிசாய்த்தார்கள். மழை வலுவடைந்திருந்தது.

குடை இல்லை. ஆனாலும் இந்த மழையில் எப்படி விசாரித்து ஐயா வீட்டைக் கண்டுபிடித்து, அவரைச் சந்திக்கப்போகிறோம் என்கிற எண்ணம் எழவில்லை. மாறாக எப்படியாவது அவரைப் பார்க்க வேண்டும் என்கிற முனைப்பு மட்டுமே மேலோங்கி நின்றது.

சண்முகம் ஐயாவின் முகம் மனதுக்குள் பத்திரப்பட்டிருந்தது போலவே நினைவுகளும். கடந்து வந்த பாதையை மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கையை மட்டுமே நேசிக்கும் ஒருவனுக்கு இந்தப் பயணமும், வலி கலந்த அதன் திருப்தியும் சாத்தியமில்லை.

''ஏன் சார்... எங்களுக்கும்தான் வாத்தியா ரெல்லாம் இருந்திருக்காங்க... ஒருத்தர் கூட நினைவுல இல்ல. நீங்க மட்டும் எப்படி உங்க தமிழய்யாவை நினைவுல வச்சிருந்து இப்பப் போயி பார்க்கணுங்கறீங்க.. பொய் சொல்லாதீங்க.... ஆட்டோகிராப் சேரன் மாதிரி நீங்க லவ் பண்ணின பொண் ணுங்கள பார்க்கத்தானே ஊருக்குப் போறீங்க...?''

எனது பதிப்பகத்தில் வேலை மட்டுமே பார்க்கும் நெருக்கமான ஊழியர்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டபோது சிரிக்க மட்டுமே முடிந்தது.

ஒன்றாவது பாடம் எடுத்த சரஸ்வதி டீச்சர்.

மூன்றாம் வகுப்பு ஆசிரியர் விஜய லெட்சுமி டீச்சர்.

நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பெடுத்த சம்பத் சார்

ஆறாம் வகுப்பு கணக்கு வாத்தியார் நாகப்பன் சார்

எல்லாரும் மனசுக்குள் பத்திரமாக இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி எட்டாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் எடுத்த சண்முகம் ஐயாவை கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் கழித்து சந்திக்க வேண்டும் என்கிற எனது முயற்சிக்குக் காரணம் ஐயாவுடனான அனுபவங்கள்.

சண்முகம் ஐயா... தமிழாசிரியர்... கோபக்காரர்.

வகுப்பறைக்குள் நுழைந்ததும் கட்டளையிடுவார்.

'எழுந்து நில்!’

அனைவரும் நிற்க வேண்டும்.

'வணக்கம் செலுத்து!’

செலுத்த வேண்டும்.

'தாய் தந்தையரை நினைத்துக் கொள்..’

மேற்படி மந்திரங்களை உச்சரித்த பிறகே பாடம் தொடங்கும். தமிழ்ப் பாடங்கள். இலக்கணம் தாண்டி தெளிவான உச்சரிப்பு. திருக்குறள். பாரதியார். பாரதிதாசன்... எனது தாய்மொழிக் காதலின் சூத்திரதாரி சண்முகம் ஐயா.

வகுப்பறையில் நின்றபடி பாடம் எடுப்பார். தமிழ்ச் சான்றோர்களை மாணவர்கள் படிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என்பது அவரது ஆரோக்கிய எதிர்பார்ப்பு.

சைக்கிளில் அவர் பள்ளிக்கூடம் வரும்போது வேட்டியும் கதர்ச் சட்டையும் கழுத்தில் படர்ந்திருக்கும் துண்டும் அவரது கம்பீரத்தை தூக்கிக்காட்டும். மற்ற ஆசிரியர்களிடமிருந்து தனிமைப்படுத்தும். சைக்கிள் மிதிக்க முடியாத நிலையில் லூனா மொபெட் வாங்கினார். நிதான வேகத்தில் அதைச் செலுத்தியபடி பள்ளிக்கூடம் வருவார்.

அந்த மொபெட்டின் பெட்ரோல் டேங்குக்குள்தான்...

''நான் முன்பே அறிவித்திருந்தும் பாரதியார் பாடல் வகுப்புக்கு வராமல் வகுப்பை புறக்கணித்து திரைஅரங்குக்குச் சென்ற மூன்று பேரும் எழுந்து வாருங்கள்.''

நான், முருகானந்தம், பிரேம் குமார் மூவரும் தயக்கமாக மற்ற மாணவர்களை பார்த்துக் கொண்டே எழுந்து சென்றோம். திரையரங்கு என்பது தவறு. மீனாவை ஃபாலோ செய்தபடி நாகப்பட்டினம் பயணம்.

தயங்கித் தயங்கி அவரருகில் சென் றோம்.

கழுத்தைப் பிடித்து குனியவைத்து மூன்று பேருக்கும் தலா ஒரு அடி... மண்டைக்குள் பூச்சி பறந்தது.

''ஐயா.... மானத்த வாங்கிட்டாருடா... சும்மா விடக்கூடாதுடா'' மாலை கமலாலயக் கரையில் திட்டமிட்டோம்.

''என்னடா செய்யலாம்.?''

ஐயா வேகமாக எங்களைக் கடந்து லூனா மொபெட்டில் போனார்.

நாங்கள் அந்த மொபெட்டையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

''சார்... திருநெல்லிக்காவல்..''

நினைவுகளை அறுத்துக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன்.

மேலே விழுந்த தூறலைக் கையில் இருந்த புத்தக பார்சல் கொண்டு தலை யில் விழாமல் தவிர்த்தேன். நால்ரோடு எனப்படும் திருநெல்லிக்காவல் ஊரின் எல்லை அது. டீ கடை நோக்கி நடந் தேன்.

டீக்கு ஆர்டர் செய்துவிட்டு மர நிழ லில் ஒதுங்கினேன்.

காரைக்கால் பண்பலை வானொலி 'பொன் என்பேன்’ பாடியது.

சண்முகம் ஐயா எப்படி இருப்பார்? தோற்றத்தை நோக்கி மனது கேள்வி கேட் டாலும் அவரது பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதையும் யோசிக்க மறுக்கவில்லை. செக் புக் கொண்டு வந்திருக்கலாமோ?

''சார் டீ...''

டீயை நிதானமாக ரசித்துக் குடித்தேன். டீயின் சுவை கடந்து அந்த இளஞ்சூடு மழை நேரத்துக்கு இதமாக இருந்தது.

பணம் கொடுத்துவிட்டு ''புதூர் எப்படிப் போகணும்...?''

''வடக்கால ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணும் தம்பி... அங்க யாரப் பார்க் கணும்...''

''சண்முகம்னு ஓய்வு பெற்ற தமிழா சிரியர்...''

''வாத்தியாரய்யா வீட்டுக்கா...?''

என்றபடி டீ ஆற்றுவதில் கவனம் செலுத்தினார். நான் வடக்கால மெது வாக நடக்கத் தொடங்கினேன். ஆள் அரவமற்ற சாலை. மலைப்பாம்பு போல நீண்டு கிடந்தது. இந்தப் பக் கம் காவிரியின் கிளையும், அந்த பக் கம் தென்னந்தோப்புமாக கிராமம் அற் புதம் காட்டியது. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம் போலத் தோன்றியது.

புதூர் என்கிற பஞ்சாயத்து யூனியன் போர்டு தெரிந்தது. நடையின் வேகத்தை மட்டுப்படுத்தினேன். எதிரே சைக்கிளில் வந்தவருக்கு எனது தயக்கம் புரிந்திருக்க வேண்டும். என்னைப் பார்த்தபடியே அருகே வந்தார்.

''சண்முகம் தமிழாசிரியர் வீடு... எங்க இருக்கு?’

''இந்த ரோட்டுல போங்க... மெயின் ரோட்டுலேயே இருக்கு பாருங்க.... கிணத்துக்கு எதிர் வீடு...''

நன்றி நவின்றேன். அவர் நகர்ந்தார்.

சிறிது தூரம் நடக்க வீடு அடையாளம் தெரிந்தது. ஓட்டு வீடு.. தாழ்வாக இருந்தது. மூங்கில் பட்டைகளால் ஆன ஜன்னல். வாசலருகே நின்றபடி ''ஐயா..''

அமைதி. ஆனால் வீட்டுக்குள்ளே சிறிய அசைவை உணர முடிந்தது.

சில விநாடிகளுக்குப் பிறகு, ''யாரு..?'' என்றபடி ஐயா...

அவர் என்னைப் பார்த்தார். கைகளை குவித்தபடி நின்ற நான் அவருக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்க வேண்டும்... பதில் வணக்கம் சொன்னார்.

மெலிதாக உதட்டில் புன்முறுவல் தெரிந்தது. அடையாளம் தெரிந்திருக்குமோ... இல்லை. விநாடிகள் சில கடந்தும் முகத்தில் தயக்கம்.

''ஐயா... நான் உங்க மாணவன்... தியாகராஜன்... திருவாரூர் வ.சோ.பள்ளில படிச்சேன்...'' இப்போது சிரித்தார்.

''வா'' என்றார்.

செருப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றேன்.

நாற்காலியை நகர்த்திப் போட்டார்.

என்னையே பார்த்தபடி ''உட்கார்..''

''நீங்க உட்காருங்கய்யா..''

அமர்ந்தார். இளைத்திருந்தார். முகத்தில் அந்த தேஜஸ் இல்லை. கை வைத்த பனியனில் வயோதிகம் தெரிந்தது. முகத்தின் சுருக்கங்கள் வாழ்வியல் போராட்டத்தைச் சொன்னது. நான் அவரையே சில விநாடிகள் உற்றுப் பார்த்தபடி இருந்தேன்.

''திருக்கொல்லிக்காடு சனி பகவான் கோயிலுக்கு வந்தியோ..?''

''இல்லங்கய்யா உங்களைப் பார்க்கத் தான்'' என்றபடி கையில் வைத்திருந்த எனது பதிப்பகத்தில் அச்சிடப்பட்ட நூல்களைக் கொடுத்தேன்...

மலர்ச்சியாக வாங்கிக் கொண்டார்.

''ஐயா... என்னை நினைவுல இருக்கா..?''

இல்லை என்பதாய் தலையாட் டினார்.

''எந்த வருஷம் படிச்சே...?''

''எண்பதுலேந்து எண்பத்தி மூணு வரைக்கும்.''

''ம்கூம்... இல்ல...'' சிரித்தபடி தலையாட்டினார்.

''இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்க...?''

''செந்தமிழ் பதிப்பகங்கற பேர்ல புத்தகங்கள் போடறேன்...

அரசுடமையாக்கப்பட்ட கவிஞர்கள், தமிழ் அறிஞர்களின் அத்தனை புத்த கங்களையும் அச்சிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பறேன்... மலிவு விலைல புத் தக கண்காட்சிகள்ல விற்பனை செய்யறேன்...''

''நல்ல விஷயம்...''

''ஐயா... எப்படிங்கய்யா இருக்கீங்க..?''

''நல்லா இருக்கேம்ப்பா... இவ் வளவு தூரம் என்னை பார்க்க... எதுல வந்த...?'' ஐயா முகத்தில் ஆச்சர்யம் காட்டினார்.

''சென்னையில இருந்து ரயில்... திருவாரூர்லயிருந்து பஸ்...''

''புள்ளைங்க என்ன படிக்குது..?''

''ஒரே ஒரு பொண்ணு... ஒன்பதாவது படிக்கிறா...''

வீடு சுத்தமாக இருந்தது. சுவற்றில் பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க. படங்கள்.

''மனைவி என்ன பண்ணுது... உன்னோட பதிப்பகத் தொழிலுக்கு உதவியா இருக்கா...?''

''ஐயா... அவ யார்கூடவோ ஓடிப் போயிட்டா...''

கேள்வி வெளிப்பட்ட அதே வேகத்துக்கு என்னிடமிருந்து பதில் பாய்ந்தது எனக்கே வியப்பு.

வெடுக்கென்று அடிபட்டாற்போல என்னைப் பார்த்தார். நான் முகத்திலடித்தாற் போல சொன்ன விதத்தை அவர் ரசிக்கவில்லையென்று புரிந்தது. தலை குனிந்தேன்.

''ஏம்ப்பா...?''

ஆதரவாகக் கேட்டார்.

''தெரியலய்யா... வசதியா இருக்கேன். பதிப்பகத் தொழில்ல வருமானமும் கிடைக் குது. மன நிறைவும் கிடைக்குது... ஆனால் கௌரவத்தை தக்க வச்சுக்க முடியல. என்னதான் மூடிமூடி மறைச்சாலும் எல்லாருக்கும் தெரிஞ்சு போயிட்டு... எப்பவாவது எங்கேயிருந்தாவது வர்ற ஒரு வார்த்தை என்னைக் காயப்படுத்திடுது... எனக்கு ஏன் இப்படின்னு மனசு அழுவு துங்கய்யா... முன் ஜென்மப் பாவம்னு ஜோசியக்காரன் சொல்றான்... பரிகாரம் பண்ணனுங்கறான்... அப்படி ஒரு பரிகாரத்தைத் தேடித்தான் உங்ககிட்ட வந்திருக்கேன்...''

''பரிகாரமா... என்னப்பா சொல்ற?''

முகம் சுருக்கி சண்முகம் ஐயா என்னைப் பார்த்தார்.

''ஐயா... தமிழ் எம்.ஏ. படிச்சேன்... எம்.எட். முடிச்சேன். வாத்தியாரா ஆகலாம்னு நெனப்பு... ஆனா என்னால வாத்தியார் தொழிலுக்குப் பெருமை சேர்க்க முடியுமான்னு சந்தேகம்... அதனாலதான் அதையொட்டின பதிப்பகத் தொழிலுக்கு வந்தேன். என்கிட்ட கிட்டத்தட்ட அம்பது பேர் வேலை பார்க்கிறாங்க... எல்லாருக்கும் நல்ல முதலாளியா இருக்கேன். பொண்ணுக்கு நல்ல தகப்பனா இருக்கேன். மனைவிக்கும் நல்ல கணவனாத்தான் இருந்தேன். ஆனா என்ன காரணம்னு இன்னை வரைக்கும் தெரியலை... அவ பண்ணின காரியத்த என்னால ஜீரணிக்கவே முடியலய்யா...''

''இது நடந்து எத்தனை வருஷமாச்சு...?''

''நாலு வருஷமாச்சு...''

''மனசை தேத்திக்கோ... இதெல்லாம் நம்மகிட்ட ஒண்ணும் இல்ல...''

தலையாட்டினேன்.

''ஏதோ பரிகாரம்னியேப்பா...''

''மன்னிப்பு கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்யா... ஆழமா யோசிச்சுப் பார்க்கிறப்ப நான் மனசறிஞ்சு யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணினது இல்ல... ஆனா உங்களுக்குப் பண்ணின ஒரே ஒரு துரோகம் மட்டும் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு... அது எந்தளவுக்கு உங்கள பாதிச்சதுன்னு தெரியல... ஆனா இப்ப நெனச்சுப் பார்க்கிறப்ப எனக்குப் பெரிய பாவமா தெரியுதுங்கய்யா...''

ஐயா என்னை கண்கள் சுருக்கிப் பார்த்தார். ''என்னப்பா பெருசா பேசறே?''

''உங்களுக்கு நினைவு இருக்கான்னு தெரியல... ஒன்பதாவது படிக்கிறப்ப நானும் நண்பர்களும் பாரதியார் கவிதை வகுப்பை கட் பண்ணிட்டுப் போயிட்டோம். அதுக்காக அடுத்த நாள் எங்கள அடிச்சீங்க... அதுக்குப் பழி வாங்கறதுக்காக உங்க லூனா பெட்ரோல் டேங்க்ல சீனியைக் கொட்டினோம்... அடுத்த நாள் என்ஜின் அடைச்சிகிட்டு வண்டி ரிப்பேர் ஆயிட்டு. நாலு நாள் பள்ளிக்கூடத்துக்கு நடந்தே வந்தீங்க... நீங்க வேர்த்து விறுவிறுத்து நடந்து போறதை தெருமுனைல நின்னுகிட்டுப் பார்த்து கைகொட்டி சிரிச்சோம்...''

குரல் தழுதழுத்தது.

ஐயா என்னையே பார்த்தபடி இருந் தார்.

''அன்னைக்கு உங்கள பழி வாங்கிட்டதா தோணுச்சு... ஆனா இப்ப நெனச்சுப் பார்க்கிறப்பா மனசு நொந்து நீங்க சாபம் விட்டு அது என்னை பாதிச்சதுதான் இப்ப நான் அவமானப்பட்டு நிக்கறதுக்கு காரணமோன்னு ரொம்ப படுத்துது... அதான்... உங்கள நேர்ல பார்த்து...''

அவர் காலில் தொப்பென்று சரிந்தேன். ''என்னை மன்னிச்சிடுங்கய்யா...''

பதறியவர், ''என்னப்பா நீ’...’ தோள் பிடித்து தூக்கி நிறுத்தினார்.

''உட்காரு...'' நாற்காலியில் அமர வைத்தார்.

''எனக்கு ஞாபகம் வருது... நீங்கதான் என்ஜின்ல சீனியைக் கொட்டினீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும்ப்பா...''

'ஐயா... அப்புறம் ஏன் கண்டுக்காம இருந்தீங்க..?''

சிரித்தார்.

''உள்ளுக்குள்ள உங்களுக்கு வன்மம் வளர்ந்திருக்கும்... அடுத்ததா வாத்தியார பெருசா எப்படி தண்டிக்கலாம்னு யோசனை பண்ணியிருப்பீங்க... படிப்புல கவனம் போயிருக்காது... அத்தினி மாணவர்களுக்கு முன்னால உங்கள அடிச்சது பெரிய தப்பு... சிறுமை. ஒரு ஆசிரியரா நான் அதை பண்ணியிருக்கவே கூடாது. அதுக்குன்டான தண்டனைதான் வண்டில சீனி போட்டதுன்னு அன் னைக்கு நான் எடுத்துகிட்டேன்... அந்த சம்பவத்துக்குப் பிறகு நான் எந்த மாணவனையும் அடிச்சதே இல்ல... எனக்கு அந்த எண்ணம் வரவே இல்லை...''

சண்முகம் ஐயாவின் வார்த்தைகள் என்னை பிரமிக்க வைத்தது.

''ஐயா... அந்த மொபெட்ட வித்திட்டீங்களே...''

''என்ஜின் கெட்டுப் போயிட்டுப்பா...''

''அதுக்கப்புறம் உங்ககிட்ட ரெண்டு வருஷம் படிச்சேன்... அப்பல்லாம் ஐயாவுக்கு வண்டில சீனி போட்டது நாமதான்னு தெரியக்கூடாதேங்கற தவிப்பு மட்டும்தான்யா இருந்துச்சு... தமிழ்மொழி எனக்கு சோறு போடறப்பதான்யா... அத எனக்கு சொல்லிக்கொடுத்த உங்களுக்கு நான் பண்ணினது எவ்வளவு பெரிய துரோகம்னு புரிஞ்சுச்சு...''

இப்போது அந்தப் பெண் வீட்டுக்குள் நுழைந்தாள்.

''குமுதா...''

நின்றாள்.

''இவரு... என் மாணவர்... தியாகராஜன்... என்கிட்ட படிச்சவரு... என்னை பார்க்கறதுக்காக சென்னையிலேந்து வந்திருக்காரு...''

குமுதா கும்பிட்டாள். ''கல்யாணமாகி ரெண்டு வருஷம்தான் புருஷன்கூட இருந்தா... மாப்புள ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாரு... சத்துணவுக் கூடத்துல வேலை பார்க்கிறா...''

''ஐயா...'' என்றேன் அதிர்வுடன்.

''குடிக்க ஏதாச்சும் கொண்டு வாம்மா..''

''உன்னை மாதிரி எனக்குக் கூட அப்பப்ப ஏதேதோ ஞாபகம் வரும். முன் கோபக்காரனாச்சே... யாரையாச்சும் நியாயம் இல்லாம தண்டிச்சுட்டனோ... அதனோட விளைவுதான் குமுதாவுக்கு இந்த நிலைமையோன்னு நெனப்பு வரும்.''

ஐயா ஏதோ நினைத்தவராக என்னை உற்றுப் பார்த்தார்.

''ஐயா சொல்லுங்கய்யா...''

''ஒண்ணும் இல்லப்பா...''

குமுதா டீ எடுத்து வந்தாள்.

எடுத்துக் கொண்டேன்.

''வாழ்க்கை அதன் திசைல போய்கிட்டு இருக்கு. பென்ஷன் வருது... பணத்தேவை பெருசா இல்ல... ஆனா ஓய்வுபெற்ற ஒரு தமிழாசிரியர் பென்ஷன்ல திருப்தி அடைஞ்சிடக் கூடாது. அது மொழிக்குச் செய்ற துரோகம். அவனுக்குன்னு நிறைய சமுதாயப் பணிகள் இருக்கு... தாய்மொழித் தொண்டுங்கறது முடிவே இல்லாத ஒரு பயணம்... அத என்னால நிறைவேத்த முடியல... ஒரு வெறுமை இருக்கு... இவள வெறுமையா பார்க்கிறப்ப எல்லாம் சோர்வு வந்திடுது... அம்மா இல்லாத குறை ஒரு பக்கம்னா... புருஷனோட இழப்பு இவ வாழ்க்கைல பெரிய வெற்றிடம்... வயசான காலத்துல வேதனைப்படுறதைத் தவிர நான் என்ன செய்ய முடியும்னு புரியவும் இல்லை...''

''ஐயா... வருத்தப்படாதீங்க... ''

தோளில் கிடந்த துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.

கீழே வைத்திருந்த பாரதியார் கவிதை புத்தகத்தை எடுத்துப் பார்த்தார்.

''உங்க பிரசுரத்துல புத்தகத்தோட கட்டமைப்பு நல்லா இருக்கு...'' என்றவர் கணீர்க் குரலில்,

''எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல் அறிவு வேண்டும்'' என்றபடி என்னைப் பார்த்தார். சட்டென தொடர்ந்தேன்.

''பண்ணிய பாவம் எல்லாம்

பரிதிமுன் பனியே போல

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்...''

ஐயா என்னை ஊடுருவிப் பார்த்தார்.

''என் பொண்ணு குமுதாவை உன்கிட்டே ஒப்படைக்கலாமா..?''

திடீர் தாக்குதலில் நிலைகுலைந்தேன்.

''ஐயா...''

''ஏம்ப்பா... வந்த எடத்துல வாத்தி யார் ஏதோ வளைச்சுப் போடப் பார்க்கி றாரேன்னு நெனக்கிறீயா..?'' - அவர் குரலில் ஒரு பரிதாபம் இருந்தது.

பதில் சொல்லத் தோன்றாமல் கண்களை மூடி அமர்ந்திருந்தேன். அடுப் படியில் இருந்தபடி குமுதா என்னையே பார்ப்பதாகத் தோன்றியது.

சரசரவென எண்ணங்கள் பயணித் தன.

''ஐயா... இன்னொரு திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்ல... ஏதோ ஒரு விதத்துல என்கிட்ட துர்கா ஏமாற்றத்தை சந்திச்சதாலதான் ஓடிப்போயிட்டா... நல்ல கணவனா அவளுக்கு நான் இல்லேங்கற குற்ற உணர்வு என்னை உறுத்துது... தனிமரமா இருந்து எனக்கு நானே தண்டனைய அனுபவிக்கணுங்கற முடிவில் இருக்கேன்... அதோட ஒரு மாணவன் ஆசிரியருக்கு மருமகனா வர்றத விட மகனா இருக்கறது பெருமைன்னு நினைக்கிறேன்...''

ஐயா குழப்பமாகப் பார்த்தார்.

''ஒரு பொறுப்புள்ள சகோதரனா இருந்து உங்க பொண்ணுக்கு மறுமணம் செஞ்சு வைக்க வேண்டியது என் பொறுப் புங்கய்யா... அவங்க எதிர்காலத்தை நல்லபடியா நான் நிர்மாணிச்சுத் தர்றேன்...''

நம்ப முடியாதவராக அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.

''நான் புறப்படறேன்யா...''

''முடிஞ்சதைச் செய்யப்பா.... மனசார சொன்னியே.... அது போதும்!'' - என் ஆசிரியர் எழுந்து நின்று இருகரம் கூப்பி கண்ணீரோடு நின்றார். ''குமுதா... தம்பி கௌம்பிட்டு பாரு...''

குமுதா வெளியே வந்து என்னைப் பார்த்து சிரித்தாள். அழகாக கை குவித்தாள். நான் சில விநாடிகள் குமுதாவை உற்றுப் பார்த்தேன்.

அவள் உள்ளே வந்த சந்தர்ப்பத்துக்கும் இந்த நிமிடத்துக்கும் முகத்தில் மாற்றம் தெரிந்தது. வெளியே வந்தேன். நடந்தேன்.

ஐயாவும் குமுதாவும் வாசலில் நிற்பதை முதுகு உணர்ந்தது. மழைக்காற்று சில்லென்று உடம்பைத் தாக்க உற்சாகமாக நால்ரோடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.