மழைத்துளிகளை

பத்திரமாக

தன் புத்தகப்பைக்குள் நிரப்பத் தெரிந்த

பள்ளிச் சிறுமி...

அன்று முதன்முறையாக

வெயிலையும் நிரப்ப முயல்கிறாள்.

நிழல் குவிந்துக்கிடக்கும்

கூடாரத்திலிருந்து

முற்றத்திற்கு ஓடியும்...

மஞ்சள் பூக்கள்

பூத்திருக்கும் மரத்திற்கு கீழிருந்து

நெடுஞ்சாலைக்குத் தாவியும்...

பள்ளியறையிலிருந்து

விளையாட்டு மைதானம் என்றும்

அவளது முயற்சி

கிளைத்து படர்கிறது

ஒவ்வொரு மாலையும்...

இரவும்...

வெயில் தன் புத்தகப்பைக்குள்

இருப்பதாக பெருமிதம் கொள்கிறாள்

அந்தப் பெருமிதத்தோடும்

விளையாடுகிறாள்...

படிக்கிறாள்...

உண்ணுகிறாள்...

உறங்கவும் செய்கிறாள்!

திடீரென

ஒரு பகல் முழுவதும்

அடைமழை

புத்தகப்பையைத் திறந்து

வெயிலை எடுத்தவள்...

பின் மழையோடு குழைத்து

வானவில் செய்யத் தொடங்குகிறாள்..!

அப்படித்தான்

வெண்முகிலும்

விண்மீன்களும்

அவளது புத்தகப்பையிலிருந்து பிறந்தன!

மழைத்துளிகளை

பத்திரமாக

தன் புத்தகப்பைக்குள் நிரப்பத் தெரிந்த

பள்ளிச் சிறுமி...

அன்று முதன்முறையாக

வெயிலையும் நிரப்ப முயல்கிறாள்.

நிழல் குவிந்துக்கிடக்கும்

கூடாரத்திலிருந்து

முற்றத்திற்கு ஓடியும்...

மஞ்சள் பூக்கள்

பூத்திருக்கும் மரத்திற்கு கீழிருந்து

நெடுஞ்சாலைக்குத் தாவியும்...

பள்ளியறையிலிருந்து

விளையாட்டு மைதானம் என்றும்

அவளது முயற்சி

கிளைத்து படர்கிறது

ஒவ்வொரு மாலையும்...

இரவும்...

வெயில் தன் புத்தகப்பைக்குள்

இருப்பதாக பெருமிதம் கொள்கிறாள்

அந்தப் பெருமிதத்தோடும்

விளையாடுகிறாள்...

படிக்கிறாள்...

உண்ணுகிறாள்...

உறங்கவும் செய்கிறாள்!

திடீரென

ஒரு பகல் முழுவதும்

அடைமழை

புத்தகப்பையைத் திறந்து

வெயிலை எடுத்தவள்...

பின் மழையோடு குழைத்து

வானவில் செய்யத் தொடங்குகிறாள்..!

அப்படித்தான்

வெண்முகிலும்

விண்மீன்களும்

அவளது புத்தகப்பையிலிருந்து பிறந்தன!