விருப்பம்

‘‘இனி ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ளேன்’’ என ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு லாக்அவுட் செய்த இரண்டாவது நிமிடம் மீண்டும் லாக்இன் செய்தான், எத்தனை லைக்குகள் வந்துள்ளன என்று பார்க்க!"
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- வித்யா ராஜன்
பாசம்

‘‘வந்து தூங்கு...’’ என குழந்தையின் முதுகில் அடித்து இழுத்தாள் அம்மா நிர்மலா. ‘‘அழாம தூங்குடா செல்லம்...’’ என பொம்மைக்கு முத்தம் தந்துவிட்டுத் தூங்கப்போனது குழந்தை!
- பிரபாகரபாபு
முறிவு

‘‘தொட்டுத் தாலி கட்டுன என்னையே எதிர்த்துப் பேசுறியா?’’ கன்னத்தில் ஓங்கி அறைந்தான் வினோத். ‘‘யூ... ராஸ்கல், நிஜமாவே அடிச்சிட்டியா?’’ என ஸ்பாட்டை விட்டு வெளியேறிய தாராவை அதிர்ச்சியோடு பார்த்தார் டைரக்டர்!
- எஸ்.வெங்கட்
வருகை

‘அவள் வருவாளா... அவள் வருவாளா?’ என இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், தன் மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பில் அவளுடைய லாஸ்ட் விசிட் டைமை!
- ஜமீல்
கோரிக்கை

‘‘அய்யா... என்னுடைய பல ஜோக்குகளும் துணுக்குகளும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பிரபல எழுத்தாளர்கள் திருப்பிக்கொடுத்துள்ள அந்த சாகித்ய அகாடமி விருதுகளில் ஒன்றை எனக்குக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்துங்களேன்’’ - கடிதத்தைப் பார்த்து உறைந்தார் அகாடமி தலைவர்!
- ஆர்.ஜெயகுமாரி
அறிவு

திருப்பு முனையில் எதிரே வந்த வாகனத்துடன் மோதியவர் ‘‘ஏம்ப்பா அறிவில்ல... திரும்பும்போது ஹாரன் அடிச்சுட்டுத் திரும்ப மாட்டே?’’ என்றார்.
எதிரே வந்தவரோ, ‘‘சாரி சார்... உங்களுக்கு அறிவிருக்கும்... ஹாரன் அடிப்பீங்கனு நெனச்சுத் திரும்பிட்டேன்’’ என்றார்!
- விவேகானந்தன்
லைஃப்... கார்டு!

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதியிடம் சிறை அதிகாரிகள் சோதனையிட்டபோது இரண்டு லைஃப் டைம் சிம் கார்டுகள் சிக்கின!
- அஜித்
நீரின்றி...

“ மழை வரும்போல இருக்கு. மழைக்கு முன்னாடி சீக்கிரமா லாரியைக் கொண்டுவந்து ஸம்ப்பை நிரப்பிட்டுப் போப்பா!” – லாரியில் குடிநீர் சப்ளை செய்பவருக்கு போன்செய்து சொன்னார் அந்த அடுக்குமாடிவாசி.
- கீர்த்தி
சேவை

‘யூ ரிங்... வீ ப்ரிங்’ நிறுவனத்துக்கு போன் செய்தாள். விரைந்து கொண்டுவந்தனர், குடித்துவிட்டு சாலையில் மயங்கிக்கிடந்த கணவனை!
- தி.பூபாலன்
நியூஸ்

‘‘மிஸஸ் திவ்யா, உங்களுக்கு ஒரு குட் நியூஸ்...’’
‘‘நான் மிஸ் திவ்யா.’’
‘‘அப்ப ஒரு பேட் நியூஸ்...’’ என்றார் டாக்டர்!
- பா.ஆனந்த்
