நீரில் கரைந்த

நிலத்தின் மக்கள்

எல்லோரும் எல்லோரிடமும்

ஏதேனும் உதவி வேண்டுமா

என்று கேட்டவண்ணம் இருக்கிறார்கள்

மணி கேட்டால் மணி

சரியாகச் சொல்கிறார்கள்

வழி கேட்டால் வழி

சரியாகச் சொல்கிறார்கள்

கேட்காமலேயே

கை குலுக்குகிறார்கள்

பார்க்கும் முதல் கணத்திலேயே

புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்

22 வருடங்கள் என்னிடம்

ஒரு வார்த்தை பேசியிராத அண்டைவீட்டான்

இன்று எனக்கு தேநீர் தருகிறான்

யாருக்கும் யாரிடமும்

பயமோ சந்தேகமோ இல்லை

எல்லோர் மீதும்

ஒரு மகத்தான அன்பு ஆட்கொள்கிறது

அது

அழிவின் அன்பு

மரணத்தின் அன்பு

பயத்தின் அன்பு

அது

மீட்சிக்கான அன்பு

திரும்புதலுக்கான அன்பு

தாங்கள் இதுவரை எதுவாக இருந்தோமோ

அதற்காக நாணமுறுகிற அன்பு.

பிரளயம் வடிந்த வீடுகளை

மக்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்

தெருவெங்கும்

சிதைக்கப்பட்ட வீடுகளின்

குப்பைகள் குவிந்துகிடக்கின்றன

உடைந்த பொம்மைகள்

உடைந்த தெய்வப்படங்கள்

உடைந்த கட்டில்கள்

உடைந்த ஃப்ரிட்ஜ்கள்

உடைந்த டி.விக்கள்

உடைந்த மீன்தொட்டிகள்

ஊழியின் காலத்தில்

வீட்டைச் சுத்தப்படுத்துவது

வீட்டை முற்றாக அகற்றுவது

இல்லையா?

நான் இந்த நாட்களில்

யார் கண்களையும் சந்திக்காமல்

தெருக்களை எப்படிக் கடந்து செல்வது

என்பதை முழுமையாகப் பயின்றிருக்கிறேன்.

நீர் அடித்து

நிலம் விலகிய நகரத்தின்

எந்தத் தெருவிற்குள்

யார் வந்து நின்றாலும்

தெரு நாய்கள்

அவர்கள் பக்கத்தில் வந்து

பிடிவாதமாய் நின்றுகொள்கின்றன

பூனைகள்

தன் பச்சை நிறக் கண்களால்

ஒவ்வொருவரையும் வெறித்துப்பார்க்கின்றன

காக்கைகள் காலி பாலித்தீன் பைகளை

கொத்திப்பார்த்துவிட்டு

கரையக்கூட மனமில்லாமல்

பறந்து செல்கின்றன

அவை மனிதர்களைவிடவும்

மன உறுதிமிக்கவை

அவை சகிப்புடன்

காத்துக்கொண்டிருக்கின்றன.

நகரத் தலைவர்

தொலைக்காட்சியில்

சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்

'தண்ணீர் சூழ்ந்த இரண்டு நாட்களில்

எல்லோரையும் மீட்டுவிட்டோம்

மக்கள் இப்போது இயல்பாக இருக்கிறார்கள்

இரண்டே நாள் தாமதத்திற்காக

யாரும் எங்களை சிலுவையில் அறைய வேண்டாம்'

அவை காலத்தின்

வெறும் இரண்டு நாட்கள் அல்ல

வெளிச்சமில்லாத இரண்டு நாட்கள்

கழிவறைகள் இல்லாத இரண்டு நாட்கள்

அபயக்குரலுக்குப் பதில் வராத இரண்டு நாட்கள்

எல்லா சாலைகளிலிருந்தும்

துண்டிக்கப்பட்ட இரண்டு நாட்கள்

பசி என்றால் என்னவென்று

அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்

கைவிடப்படுதல் என்றால் என்னவென்று

அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்

மாற்றுத்துணி இல்லாத இரண்டு நாட்கள்

குழந்தைகளின் அழுகுரலை எப்படி நிறுத்துவதென்று

தெரியாத இரண்டு நாட்கள்

பிணங்களோடு தூங்கிய இரண்டு நாட்கள்

தனது அறையில் தண்ணீரிலேயே நின்றபடி

கனவு கண்ட இரண்டு நாட்கள்்

குடிக்க தண்ணீர் இல்லாத இரண்டு நாட்கள்்

அழிவுப்பாதையில் இருப்பவர்களின் ஒரு நாள் என்பது

அதற்கு அப்பால் இருப்பவர்களின் ஒரு நாள்் அல்ல

தண்ணீருக்குள் இருப்பவர்களின் கடிகாரங்கள்

தண்ணீருக்கு வெளியே இருப்பவர்களின் கடிகாரங்கள்போல

அத்தனை வேகமாகச் சுழல்வதில்லை

துயரத்தின் ஒரு நாள்் என்பது மிகவும் தூரமானது

ஒரு பிறவியைக் கடந்து செல்வது

எவ்வளவு தூரமோ

அவ்வளவு தூரம்.

ஓர் இளம் பெண்

சமூக வலைதளங்களில்

ஓர் அறிவிப்பை வெளியிடுகிறாள்:

'எனது அழிந்த நகரத்தை

நான் கைவிட முடியாது

இந்த நகரத்தில் கைவிடப்பட்ட

ஒரு நாய்க்குட்டி இருந்தால்

யாராவது என்னிடம் கொடுங்கள்

நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்'

ஓர் இளைஞன்

ஒரு பத்திரிகைக்கு

ஒரு கடிதம் எழுதுகிறான்:

'எனது ரத்தவகை பி பாசிட்டிவ்

பாதிக்கப்பட்ட யாருக்காவாது

என் ரத்தம் தேவைப்பட்டால்

தர விரும்புகிறேன்

இதை உலகிற்குச் சொல்லுங்கள்

எனது நகரத்திற்குத் தர

என்னிடம் வேறு எதுவும் இல்லை'

என் துயருற்ற நகரமே

இவ்வளவு துயரத்திலும்

நீ ஏன் இவ்வளவு தித்திக்கிறாய்?!

குழந்தைகள்

எப்போதும் பள்ளிகளைவிட்டு

ஓடிக்கொண்டே இருந்தார்கள்

பள்ளிகளைக் கைவிட

நீண்ட விடுமுறைக்காக

எப்போதும் காத்திருந்தார்கள்

ஊழியின் தினங்களில்

அவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் வந்தன

ஒரு நாள் நீர் அகதிகளாக மாறி

அவர்களது பள்ளிகளுக்கே

அனுப்பப்பட்டார்கள்

பள்ளியிலேயே உணவருந்தினார்கள்

பள்ளியிலேயே குளித்தார்கள்

பள்ளியிலேயே தூங்கினார்கள்

பள்ளியிலேயே தூக்கத்தில்

'தண்ணீர்... தண்ணீர்...'

என்று பயந்து அழுதார்கள்

எப்போதும் விடுமுறை முடிந்து

வீடுகளிலிருந்து

பள்ளிக்குத் திரும்புகிறவர்கள்

இந்த முறை

நீர் விடுமுறை முடிந்து

பள்ளியிலிருந்து வீடு திரும்பக்

காத்திருக்கிறார்கள்.

நீர் சூழ்ந்த தினத்தின்

மறுநாள் காலையில்

மீட்புப் பணியாளர்கள்

தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த

ஒரு மனிதனை

மின்விசிறியிலிருந்து இறக்கினார்கள்

அவனுக்கு அருகில்

ஒரு வழக்கமான பொய்யான

கடிதம் எழுதப்பட்டிருந்தது

'என் சாவுக்கு யாரும் காரணமல்ல'

ஒரு நகரமே

மீட்புக்குப் போராடிக்கொண்டிருந்த நாளில்

உயிர் வாழ்வதற்காக தங்கள் கரங்களை

உயர்த்திக்கொண்டிருந்த நாளில்

எப்படியும் உயிர் வாழ்ந்துவிடுவோம் என்று

கழுத்தளவு தண்ணீரில்

கடைசிக்கணம் வரை

நம்பிக்கொண்டிருந்த நாளில்

யாரோ ஒருவன்

திட்டமிட்டபடி

எந்த சஞ்சலமும் இல்லாமல்

இரண்டு மனம் இல்லாமல்

தன் சாவை நிறைவேற்றுகிறான்

ஒரு நகரத்தை மூழ்கடிப்பதைவிட

வலிமைமிக்க செயல்

ஒருவன் தன்னைத்தானே

மூழ்கடித்துக்கொள்வது

தனக்கு அடுத்த அறையில்

யாரோ காப்பாற்றும்படி அபயக்குரல்

எழுப்பும்போதுகூட

அவன் திரும்பிப்போக விரும்பவே இல்லை

இடுப்பளவு தண்ணீரில்

அவன் உடலைச் சுமந்துசென்றவர்கள்

நினைத்துக்கொண்டார்கள்

'இவன் ஏன்

இவ்வளவு கனமாக இருக்கிறான்?'

நீரில் கரைந்த

நிலத்தின் மக்கள்

எல்லோரும் எல்லோரிடமும்

ஏதேனும் உதவி வேண்டுமா

என்று கேட்டவண்ணம் இருக்கிறார்கள்

மணி கேட்டால் மணி

சரியாகச் சொல்கிறார்கள்

வழி கேட்டால் வழி

சரியாகச் சொல்கிறார்கள்

கேட்காமலேயே

கை குலுக்குகிறார்கள்

பார்க்கும் முதல் கணத்திலேயே

புன்னகைக்கத் தொடங்குகிறார்கள்

22 வருடங்கள் என்னிடம்

ஒரு வார்த்தை பேசியிராத அண்டைவீட்டான்

இன்று எனக்கு தேநீர் தருகிறான்

யாருக்கும் யாரிடமும்

பயமோ சந்தேகமோ இல்லை

எல்லோர் மீதும்

ஒரு மகத்தான அன்பு ஆட்கொள்கிறது

அது

அழிவின் அன்பு

மரணத்தின் அன்பு

பயத்தின் அன்பு

அது

மீட்சிக்கான அன்பு

திரும்புதலுக்கான அன்பு

தாங்கள் இதுவரை எதுவாக இருந்தோமோ

அதற்காக நாணமுறுகிற அன்பு.

பிரளயம் வடிந்த வீடுகளை

மக்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்

தெருவெங்கும்

சிதைக்கப்பட்ட வீடுகளின்

குப்பைகள் குவிந்துகிடக்கின்றன

உடைந்த பொம்மைகள்

உடைந்த தெய்வப்படங்கள்

உடைந்த கட்டில்கள்

உடைந்த ஃப்ரிட்ஜ்கள்

உடைந்த டி.விக்கள்

உடைந்த மீன்தொட்டிகள்

ஊழியின் காலத்தில்

வீட்டைச் சுத்தப்படுத்துவது

வீட்டை முற்றாக அகற்றுவது

இல்லையா?

நான் இந்த நாட்களில்

யார் கண்களையும் சந்திக்காமல்

தெருக்களை எப்படிக் கடந்து செல்வது

என்பதை முழுமையாகப் பயின்றிருக்கிறேன்.

நீர் அடித்து

நிலம் விலகிய நகரத்தின்

எந்தத் தெருவிற்குள்

யார் வந்து நின்றாலும்

தெரு நாய்கள்

அவர்கள் பக்கத்தில் வந்து

பிடிவாதமாய் நின்றுகொள்கின்றன

பூனைகள்

தன் பச்சை நிறக் கண்களால்

ஒவ்வொருவரையும் வெறித்துப்பார்க்கின்றன

காக்கைகள் காலி பாலித்தீன் பைகளை

கொத்திப்பார்த்துவிட்டு

கரையக்கூட மனமில்லாமல்

பறந்து செல்கின்றன

அவை மனிதர்களைவிடவும்

மன உறுதிமிக்கவை

அவை சகிப்புடன்

காத்துக்கொண்டிருக்கின்றன.

நகரத் தலைவர்

தொலைக்காட்சியில்

சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார்

'தண்ணீர் சூழ்ந்த இரண்டு நாட்களில்

எல்லோரையும் மீட்டுவிட்டோம்

மக்கள் இப்போது இயல்பாக இருக்கிறார்கள்

இரண்டே நாள் தாமதத்திற்காக

யாரும் எங்களை சிலுவையில் அறைய வேண்டாம்'

அவை காலத்தின்

வெறும் இரண்டு நாட்கள் அல்ல

வெளிச்சமில்லாத இரண்டு நாட்கள்

கழிவறைகள் இல்லாத இரண்டு நாட்கள்

அபயக்குரலுக்குப் பதில் வராத இரண்டு நாட்கள்

எல்லா சாலைகளிலிருந்தும்

துண்டிக்கப்பட்ட இரண்டு நாட்கள்

பசி என்றால் என்னவென்று

அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்

கைவிடப்படுதல் என்றால் என்னவென்று

அறிந்துகொண்ட இரண்டு நாட்கள்

மாற்றுத்துணி இல்லாத இரண்டு நாட்கள்

குழந்தைகளின் அழுகுரலை எப்படி நிறுத்துவதென்று

தெரியாத இரண்டு நாட்கள்

பிணங்களோடு தூங்கிய இரண்டு நாட்கள்

தனது அறையில் தண்ணீரிலேயே நின்றபடி

கனவு கண்ட இரண்டு நாட்கள்்

குடிக்க தண்ணீர் இல்லாத இரண்டு நாட்கள்்

அழிவுப்பாதையில் இருப்பவர்களின் ஒரு நாள் என்பது

அதற்கு அப்பால் இருப்பவர்களின் ஒரு நாள்் அல்ல

தண்ணீருக்குள் இருப்பவர்களின் கடிகாரங்கள்

தண்ணீருக்கு வெளியே இருப்பவர்களின் கடிகாரங்கள்போல

அத்தனை வேகமாகச் சுழல்வதில்லை

துயரத்தின் ஒரு நாள்் என்பது மிகவும் தூரமானது

ஒரு பிறவியைக் கடந்து செல்வது

எவ்வளவு தூரமோ

அவ்வளவு தூரம்.

ஓர் இளம் பெண்

சமூக வலைதளங்களில்

ஓர் அறிவிப்பை வெளியிடுகிறாள்:

'எனது அழிந்த நகரத்தை

நான் கைவிட முடியாது

இந்த நகரத்தில் கைவிடப்பட்ட

ஒரு நாய்க்குட்டி இருந்தால்

யாராவது என்னிடம் கொடுங்கள்

நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்'

ஓர் இளைஞன்

ஒரு பத்திரிகைக்கு

ஒரு கடிதம் எழுதுகிறான்:

'எனது ரத்தவகை பி பாசிட்டிவ்

பாதிக்கப்பட்ட யாருக்காவாது

என் ரத்தம் தேவைப்பட்டால்

தர விரும்புகிறேன்

இதை உலகிற்குச் சொல்லுங்கள்

எனது நகரத்திற்குத் தர

என்னிடம் வேறு எதுவும் இல்லை'

என் துயருற்ற நகரமே

இவ்வளவு துயரத்திலும்

நீ ஏன் இவ்வளவு தித்திக்கிறாய்?!

குழந்தைகள்

எப்போதும் பள்ளிகளைவிட்டு

ஓடிக்கொண்டே இருந்தார்கள்

பள்ளிகளைக் கைவிட

நீண்ட விடுமுறைக்காக

எப்போதும் காத்திருந்தார்கள்

ஊழியின் தினங்களில்

அவர்களுக்கு நீண்ட விடுமுறைகள் வந்தன

ஒரு நாள் நீர் அகதிகளாக மாறி

அவர்களது பள்ளிகளுக்கே

அனுப்பப்பட்டார்கள்

பள்ளியிலேயே உணவருந்தினார்கள்

பள்ளியிலேயே குளித்தார்கள்

பள்ளியிலேயே தூங்கினார்கள்

பள்ளியிலேயே தூக்கத்தில்

'தண்ணீர்... தண்ணீர்...'

என்று பயந்து அழுதார்கள்

எப்போதும் விடுமுறை முடிந்து

வீடுகளிலிருந்து

பள்ளிக்குத் திரும்புகிறவர்கள்

இந்த முறை

நீர் விடுமுறை முடிந்து

பள்ளியிலிருந்து வீடு திரும்பக்

காத்திருக்கிறார்கள்.

நீர் சூழ்ந்த தினத்தின்

மறுநாள் காலையில்

மீட்புப் பணியாளர்கள்

தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த

ஒரு மனிதனை

மின்விசிறியிலிருந்து இறக்கினார்கள்

அவனுக்கு அருகில்

ஒரு வழக்கமான பொய்யான

கடிதம் எழுதப்பட்டிருந்தது

'என் சாவுக்கு யாரும் காரணமல்ல'

ஒரு நகரமே

மீட்புக்குப் போராடிக்கொண்டிருந்த நாளில்

உயிர் வாழ்வதற்காக தங்கள் கரங்களை

உயர்த்திக்கொண்டிருந்த நாளில்

எப்படியும் உயிர் வாழ்ந்துவிடுவோம் என்று

கழுத்தளவு தண்ணீரில்

கடைசிக்கணம் வரை

நம்பிக்கொண்டிருந்த நாளில்

யாரோ ஒருவன்

திட்டமிட்டபடி

எந்த சஞ்சலமும் இல்லாமல்

இரண்டு மனம் இல்லாமல்

தன் சாவை நிறைவேற்றுகிறான்

ஒரு நகரத்தை மூழ்கடிப்பதைவிட

வலிமைமிக்க செயல்

ஒருவன் தன்னைத்தானே

மூழ்கடித்துக்கொள்வது

தனக்கு அடுத்த அறையில்

யாரோ காப்பாற்றும்படி அபயக்குரல்

எழுப்பும்போதுகூட

அவன் திரும்பிப்போக விரும்பவே இல்லை

இடுப்பளவு தண்ணீரில்

அவன் உடலைச் சுமந்துசென்றவர்கள்

நினைத்துக்கொண்டார்கள்

'இவன் ஏன்

இவ்வளவு கனமாக இருக்கிறான்?'