நான் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவள்

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களில்

இடம்பெறாத பிணம் எண் 202

என் புதிய அடையாளம்

கொடுமழைக்குத் தப்பிய கொன்றைமரக் கிளையில் கிடந்த

என் நிஜப்பெயர் தாங்கிய வாக்காளர் அட்டையை

ஆணைக்கிணங்க மெள்ளப் படகுகளில் வந்த

சீருடைப் படைகள் மீட்டெடுத்தன

பட்டத்துராணி முத்திரை ஒட்டப்பட்ட சோற்றுப்பொட்டலம் மற்றும் இத்யாதிகள்

அதற்காக ஒதுக்கப்பட்டு புகைப்படங்களும் களம்கண்டன

தெருப்பெருக்கெடுத்த கழிவுநீர் சுழியில் மிதந்த மஞ்சள் நிறக்

குடும்ப அட்டை சரிபார்க்கப்பட்டு என்னை என் குடும்பத்தோடு இணைத்தனர்

குப்பைமேடாய்ப்போன குடிசையையும் உடைமைகளையும்

கொளுத்துவதற்கும் எரிபொருள் இல்லாமல் திண்டாடியிருந்த தாய்

பள்ளிக்கூடத்தை முகாம் ஆக்கியிருந்ததால் என் வகுப்பிற்கு

முதன்முறையாய் வருகை தந்திருந்த தந்தை

சுடிதார் போட்டிருந்த ஒவ்வொரு முகத்தையும் திரும்பிப் பார்த்து

என்னைத் தேடிக்கொண்டிருந்த தனயன்

வெள்ளத்திற்கு நாங்கள் சாட்சியாகி

எங்களுக்கு வெள்ளம் சாட்சியாகி

நிவாரணத்திற்காக வரிசையில் நிற்கவைக்கப்பட்டோம்

நீந்தத் தெரிந்த எங்கள் நாய்க்குட்டி வீரா மட்டும் கொள்ளைபோனதுபோல

தூரத்தில் பறந்த ஹெலிகாப்டரை நோக்கி

குரைத்துக்கொண்டிருந்தது.