Published:Updated:

வசந்தம் வகுப்பறையிலும் வருகிறது!

கவிதை: ராம் வசந்த், ஓவியம்: எஸ்.ஏ.வி. இளையபாரதி

வசந்தம் வகுப்பறையிலும் வருகிறது!

கவிதை: ராம் வசந்த், ஓவியம்: எஸ்.ஏ.வி. இளையபாரதி

Published:Updated:

தேன்மொழிகள் அழகாக இருக்கிறார்கள் 

தேன்மொழிகள் அழகாகச் சிரிக்கிறார்கள்

தேன்மொழிகள் நீலம் வெள்ளைச் சீருடையில்

நீராரும் கடலுடுத்த பாடுகிறார்கள்

அவர்கள் கையெழுத்து நளினமாக இருக்கிறது

ரெட்டை ஜடை பாந்தமாக இருக்கிறது

ஏ ப்ளஸ் பி வோல் ஸ்கொயர் என

அவர்கள் வாசிப்பது

நமக்குக் கவிதையாகிவிடுகிறது

அவர்கள் பள்ளிக்கு வராத நாட்களில்

இடைவேளைகளில் சாப்பிடும்

குச்சி ஐஸ் சுடுகிறது

இருப்பினும் இந்தத் தேன்மொழிகளால்தான்

வசந்தம் வகுப்பறையிலும் வருகிறது!

தினம் தினம்

நாம் அடிவாங்கவும் நேருகிறது

பேசுகிறவர்கள் பெயரை

கரும்பலகையில் இவர்கள்தான் எழுதுகிறார்கள்

எனத் தெரிந்த பிறகு

பக்கத்தில் அமர்ந்திருப்பவன்

எதிரியாக இருந்தாலும் என்ன?

புன்னகைத்துப் பேசுவதுதானே முறை.