Published:Updated:

ஊழி

கவிதை: கார்த்திகா முகுந்த், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ண்டிகைக் கால 

போக்குவரத்து நிலையங்கள்போலத்தான்

மழைத்துளிகளால் நிரம்பத் தொடங்கியது

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நகரம்.

ஒவ்வொருவருக்கும் ஒரு துளி என்ற விகிதத்தில்

தூறத் தொடங்கியது முதலில்.

மழை பெருகப் பெருக

மனங்கள் மெள்ள தளும்பத் தளும்ப

மழை பெருகிப் பெருகிப் பெய்தது மேலும்.

பண்டிகையோ... பசி நாளோ...

வேறுபாடெல்லாம் அழியப் பொழிந்தது.

ஊழி

மண் நனைய மனிதர் நனைய

பொழிந்து தீர்த்தது.

பழைய பரிச்சயத்தில்

ஈரம் கசியத் தொடங்கியது

மனங்களின் ஆழத்தில்.

அதன் பிறகு நகரெங்கும்

வெள்ளப்பெருக்கு.

உள்ளிருக்கும் ஈரத்தை

நாம் நினைவுகூரும் வாய்ப்பாக

உள்ளிருக்கும் ஈரத்தை

மறந்ததன் தண்டனையாக

நம் ஈரத்துக்கும் தன் ஈரத்துக்கும்

வேற்றுமைகள் பலநூறெனச்

சொல்லாமல் சொல்ல

வெள்ளமாய்ச் சூழ்ந்தது ஊழி மழை!