Published:Updated:

கள்ளத் துப்பாக்கிப் புழக்கம்..! மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அருண் சின்னதுரை

மதுரையைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'கள்ளத்துப்பாகிகள் புழக்கம் அதிகமாகிவிட்டது. எனவே சட்ட விரோத, உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றவும், அது குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்"  என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு, ஏற்கனவே மதம், சமூகம், இனம் என பலவிதமாக பிரிந்திருக்கும் நிலையில் கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளது. பொதுமக்களின் அமைதிக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதோடு, சட்ட விரோத செயல்களும், சட்ட ஒழுங்கு பிரச்சனை அதிகரிக்கவும் காரணமாக அமையும். மேலும் இது தமிழகத்தின் பிரச்சனை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தேசமும் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என குறிப்பிட்ட நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.