Published:Updated:

வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்

வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்
பிரீமியம் ஸ்டோரி
வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்

கவிதை: கதிர்பாரதி, ஓவியம்: செந்தில்

வெட்டுக்கிளிகள் பறந்துலவும் என் நிலம் 

சூரியனை மறைக்கும் அவற்றின் இறக்கைகள்

பனிமொட்டுக்களில் பின்னங்கால்களை ஊன்றி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்வயல்களில் துள்ளிக்குதிக்கும் அவற்றின் பருவம்...

இவை பற்றி சொல்லும்போது

அவை சாலப் பரிந்துகாட்டிய மழையின் திசையில்

பூத்த மலரை நேசித்த

வெட்டுக்கிளிகளின் ஞாபகம் முட்டுகிறது.

வெட்டுக்கிளியின் பார்வையில் வீதியுலா வந்தது சாமி

அதன் தாவணியில் பூத்தது வானின் வில்

மீசையில் ஒளிர்ந்தது நிலாப் பிறை

வேட்டியில் துள்ளின ஆசையின் அயிரைகள்.

வெட்டுக்கிளியை சூப்பர் மேக்ஸ் பிளேடுக்குப் பழக்குதல்

விடிகாலைக் கோலத்தின் பரங்கிப்பூவில் குறிப்புணர்ந்து

மார்கழியின் அந்தியில் சிவந்து பறந்தது அதன் நேசம்.

பூவரசம் நிழலில்

கரும்புத் தோகைச் சுணையில்

தாளடி வைக்கோல் போர் வெப்பத்தில்

அலையனுப்பி ஆம்பல்களைத் தாலாட்டும் குளத்தில்

குஞ்சுப்பறவைகள் தூங்கும் கருவேலம்கூட்டினடியில்...

வெட்டுக்கிளிகள் வெகுவாகத் தோன்றித் திரிந்த

என் நிலத்தின் சீதோஷணத்துக்கு எதிரே

வீச்சரிவாள்கள் ரத்தம் கண்டபோது

ஒன்றையொன்றைக் கட்டித்தழுவியபடி

தாழம்புதரில் உயிரற்றுக்கிடந்தன இரு வெட்டுக்கிளிகள்.

ஒன்று நாண்டுகொண்டு தொங்கியதையும்

மற்றொன்று சூப்பர்மேக்ஸ் பிளேடால்

கழுத்தை அரிந்துகொண்டதையும் சாட்சிவைத்து

பைத்தியமாகி கிறுகிறுவெனச் சுழல்கிறது

இன்னொரு வெட்டுக்கிளியின் நிலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism