என் வீட்டில்
மூன்று பூனைகள் இருக்கின்றன.
முதலாவது காதல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இரண்டாவது காதல்
மூன்றாவது காதல்... என
அவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறேன்.
முதலாவது காதல்
எட்ட நின்று
என்னை மிரட்சியோடு பார்ப்பதோடு சரி.
இரண்டாவது காதலோ

எப்போதாவது என் மடியில் வந்து
படுத்துக்கொள்ளும் வாஞ்சையாக.
மூன்றாவது காதல்தான்
கொஞ்சம் மூர்க்கமானது
இரவுக் கோப்பையில்
நான் சேகரித்துவைத்திருந்த
நிலவுப் பால் முழுவதையும்
இந்த அதிகாலைப் பொழுதில்
உருட்டித் தள்ளிவிட்டு ஓடியது
அதுதான்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism