Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
10 செகண்ட் கதைகள்

விஷ மருந்து

10 செகண்ட் கதைகள்

டயாபடீஸுக்கு மாத்திரைகள் தந்துவிட்டு, மீதம் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால் அதற்குப் பதிலாக அவனிடம் மருந்துக்கடைக்காரர் சாக்லேட் ஒன்றைத் தந்தார்!

- தக்கலை லீலாஇராம்.

பிரார்த்தனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10 செகண்ட் கதைகள்

`சிவப்பு விளக்கு அணையக் கூடாது’ என வேண்டிக்கொண்டான், சிக்னலில் பொம்மை விற்கும் சிறுவன்!

 - வினோத் குமார்.

கால்ஷீட்

10 செகண்ட் கதைகள்

“ஹீரோயின் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டீங்கன்னா, அட்வான்ஸ் குடுத்திரலாம். நாளைக்கே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்துடறேன்” என்றார் தலைவரிடம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்!

- பெ.பாண்டியன்

செல்ஃபி நேரம்

10 செகண்ட் கதைகள்

மயானத்தில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. முகத்தை மூட கடைசி வரட்டி காத்திருந்தபோது, ‘`முகத்தை மூடப்போறேன்... செல்ஃபி எடுக்கிறவங்க எடுத்துக்கலாம்’’ எனக் குரல் வந்தது!

- விசயன்

செம கலாய்...

10 செகண்ட் கதைகள்

ஜாலியாகக் கலாய்த்ததில் கோபப்பட்டு வெளியேறினார் வேணு மாமா.

‘Venu Uncle Left’ எனக் காட்டியது வாட்ஸ்அப் குரூப்!

- ரஹீம் கஸாலி

தெளிவு

10 செகண்ட் கதைகள்

“ `வேலைக்குப் போற மருமகள்தான் வேணும்’னு சொல்றியே ஏன்?”

“அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க, நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!”

-கி.ரவிக்குமார்

தீர்மானம்


10 செகண்ட் கதைகள்

`காப்புக் கட்டிய பிறகு, வெளியூர் போகக் கூடாது!’ என்ற ஊரார் உத்தரவுக்குப் பணிந்து, ‘கோயிலிலேயே திருடுவது’ எனத் தீர்மானித்தான் திருடன்!

-கி.ரவிக்குமார்


வாழ்க்கை முரண்

10 செகண்ட் கதைகள்

``மின்சாரம் கிடையாது; இணையம் பாதிப்பு. மொபைல் சிக்னல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே கிடந்து, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த காலத்தைத்தான் `இயல்பு வாழ்க்கை பாதித்தது’ என்கிறார்கள்’’ எனப் புலம்பினார் ராமசாமி தாத்தா!

- சிவலிங்கராஜன்.எஸ்

கோரிக்கை

10 செகண்ட் கதைகள்

கடைசிக் காலத்தை முதியோர் இல்லத்தில் கழித்த வசந்தி பாட்டி சொன்னார், “அநாதை இல்லத்தையும், முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்தில் வைக்கலாம். ரெண்டு பேருக்கும் அன்பு கிடைக்கும்!”

- ரம்யா தேவநாதன்

காணவில்லை

10 செகண்ட் கதைகள்

‘‘டாட்... இங்க இருந்த ரிவர் எங்கே?” - பாலத்தின் மேல் காரில் சென்றுகொண்டிருந்த யுவன், அப்பாவிடம் கேட்டான்!

 - விகடபாரதி

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ` 500.

உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism