Published:Updated:

காற்றில் உந்தன் கீதம்

காற்றில் உந்தன் கீதம்
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் உந்தன் கீதம்

கவிதை: வெய்யில், ஓவியம்: செந்தில்

காற்றில் உந்தன் கீதம்

கவிதை: வெய்யில், ஓவியம்: செந்தில்

Published:Updated:
காற்றில் உந்தன் கீதம்
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் உந்தன் கீதம்

புதுவாழ்வு சதிராடுது 

நளிர்ப்புகையினூடே

மீவேகத்தில் வருகிறது ரயில்  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தப் பேதையின் பாவாடையோ

தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது

அவனும் எவ்வளவோ முயல்கிறான் முடியவில்லை

பாலு கத்துகிறார் 'ராஜா.................!’

இசைக்கலைஞர் தனது மந்திரக்கோலைக் கீழிறக்குகிறார்

ரயில் நின்றுவிடுகிறது

எஃகுச் சக்கரங்கள்

மத்தாப்பைச் சிதறுகின்றன

எங்கோ ஏங்கும் கீதம்

தவறி பெருந்திணைக்குள்  நுழைகிறது

ஒரு டூவீலர்

அதன் பின்னிருக்கையில் என் ரோசாப்பூ

எனது ஆட்டைக் கொன்று, குடலைப் பிடுங்கி

சூரியனில் பதம் செய்கிறேன்

இதோ... வயிலினில் பூட்டுங்கள் ராஜா!

இசையை அதிர எய்து

எப்படியாவது அந்த டூவீலரை

சரியான பாதைக்குத் திருப்புங்கள் 

காற்றில் உந்தன் கீதம்

சொல்லவா ஆராரோ

ஆம் அம்மா! அந்த ரயில்தான்

உனக்கும் எனக்குமிடையே நீண்டு தடதடக்கும்

தொப்புள்கொடி

வலிக்கிறது ராஜா... வெட்டிவிடுங்கள்

ரணமான அவளின் உயிர்ப்பாதையில்

வேங்குழலின் சாற்றைப் பூசிக்கொண்டிருப்பது யார்?   

வெறும் பாத்திரமுள்ளது  என்னிடத்தில்

தெரு நடுவே

மூங்கில் கால்களில் பிணைக்கப்பட்டிருக்கும்

நீள் கயிற்றில்

அந்த வினோத யாழின் ஒற்றை நாணை

கால்களால் எப்படி மீட்டுகிறாள் பாருங்கள் ராஜா

அடி பாணன் மகளே...

அய்யாவிற்கு சலாம்போடு!

அகலாத நினைவு சொல்லும்...

கறுப்பு வெள்ளைகளின் மீது பாவுகின்றன

துண்டிக்கப்பட்ட  நான்கு கைகள்

காவியும் பச்சையுமாய்ப் பெருகும் குருதி

சாவின் மீதும் காதலின் மீதும்

புரளுகின்ற பத்தொன்பது மென்விரல்கள்

அழிவற்ற காவியத்தை வனையும் அரூபக் கரங்கள்

பெருங்குரலில் அகவுகின்றன கோடியுடல்கள்

நினைவுகள் சிதையும் வரை அந்த பியானோவில்

தலையை மோதிக்கொள்ளட்டுமா  ராஜா?

ப்ளீஸ்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism